கல்கியின் வருகைக்கு முன்னோட்டம்
----------------------------------------------------------------------
சில மாதங்களுக்கு
முன் முகநூலில் கல்கியின் வருகைப் பற்றி பதிவு போட்டிருந்தேன். அதில் ஸ்ரீ
வீரப்பிரம்மேந்திரர் இயற்றிய 'காலக்ஞானம்'
நூலைப் பற்றியும், அவரே சுமார் 1000 வருடங்கள்
கழித்து ஸ்ரீ வீரபோக வசந்தராய என்ற பெயரோடு பிறந்து விஷ்ணுவின் பத்தாவது அவதாரமான 'கல்கி'யாக வருவதைப்பற்றி
சொல்லியிருந்தேன். உங்களில் சிலருக்கு அது நினைவிருக்கலாம். அதுபற்றிய முழு
நூல் விரைவில் வெளியாகவுள்ளது. முன்பு தெலுங்கில் வந்த மூலநூலை
ஆதாரமாகக்கொண்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பானதை தமிழில் என் பாணியில் எழுதினேன். கல்கி எப்போது வருவார், எப்போது அதர்மத்தை எதிர்த்துப்போரிட்டு உலகைக்காப்பார்? எதிர்கால நிகழ்வுகள் என்ன, அதை எதற்கு
முன்னமே சொன்னார்? மற்ற மதங்களின் பார்வையில் இது
எப்படி ஒத்துப்போகிறது? பிரபஞ்சம் தோன்றியது எப்படி? பிரபஞ்சம், பரசிவன்-பரசக்தி, பஞ்சபூதங்கள்,
மற்ற தெய்வங்கள் தோன்றியதும், அவர்களுக்குள்
உறவுகள் வந்தது எப்படி? இதுபோன்ற இன்னும் பல தத்துவ, உபநிடத, வேதாந்த, சமயம்,
யோகம், சுயமறிதல் சார்ந்த ஆய்வுபூர்வமான
எண்ணற்ற கேள்விகளுக்கு அதில் விடையுள்ளது. மொத்தத்தில், சித்தர்களின்
பார்வையில் என்ன கருத்துகள் வெளிப்படுமோ அவையெல்லாம் இவர்மூலம் வெளிப்பட்டுள்ளது.
திருமாலின் அவதாரம் என்றாலும் முருகனும் அதில் பங்கு கொள்கிறார். இதுபற்றி போகர்
தன் ஜெனனசாகரம் நூலில் ஒரு பாடலில் விளக்கியதை மேற்கோள் காட்டியுள்ளேன்.
சித்தர்கள்
சமாதியில் இருந்துகொண்டு விரும்பிய பல பிறவிகளை எடுப்பார்கள் என்பதை அறிவோம்.
மகாசித்தர் போகர்தான் வருகின்ற கல்கி அவதாரம். சித்தர் போகரே, ஸ்ரீ வீரபிரம்மமாக இருந்தபிறகு வீரபோக வசந்தராயராக பிறந்துவிட்டார். இவர்கள் எல்லோருமே விஸ்வகர்மா குலத்தைச் சேர்ந்தவர்கள் (பொற்கொல்லர்). அவருக்கு தற்போது வயது
50. அவர் 'தேவதத்தா' வெள்ளைக்
குதிரைமேல் அமர்ந்து கையில் 'ரத்னசாரு' வாளோடு, கோடிசூரிய ஒளியோடு வந்து, இடர்களை உண்டாக்கி, கலிபுருஷனை (அதர்மங்களை)
கலியுகத்தில் அழித்து, எஞ்சிய 426000 சொச்ச வருடங்கள்
நன்மக்கள் வாழத்தகுதியான பூமியாக மாற்றுவார். மேற்சொன்ன சிறப்புசக்திகளை அவர்
பெற்றுக்கொண்டபின், முதன் முதலாக சுனாமி எத்தனை பயங்கரமானது
என்பதைப் பார்த்தோம், அதன்பிறகு தொடர்ந்து பேரிடர்களையும்
கண்டுவருகிறோம். அடுத்த 195 ஆண்டுகள் இவர் ஆட்சி செய்வார். கல்கியின்
குதிரைப்படைகளையும், சிறகுகள் கொண்ட கங்காரூக்களையும் என்
சொப்பனத்தில் கண்டு வியந்தேன். இதைப்பற்றி சில முகநூல் நண்பர்களுடன் உரையாடலிலும்
பகிர்ந்தேன். இனி இவர் கைவண்ணத்தில் உலகெங்கும் பிரளயங்கள் தொடர்ந்து நிகழும்,
ஆனால் உலகம் அழியாது. அவ்வப்போது பூமிக்கு பாரமாகவுள்ள பாவமூட்டைகளை
உடனுக்குடன் அப்புறப்படுத்தி வருவார். அவருடைய இறுதித்தீர்ப்பில் அகப்படாமல்
இதயசுத்தியோடு இறைவனை அகத்தில் வைத்து தர்ம நெறிகளை கடைபிடிக்கவேண்டும்! தரணியில்
தர்மத்தைக்காக்க மகான்களையும் மக்களையும் களமிறக்குகிறார். ஸ்ரீவீரபோகர் இன்னும்
வெளியுலகிற்குப் புலப்படாமல் தேவ ரகசியமாகவே இருந்து பணிசெய்கிறார்.
இப்படியொரு நூல் எழுத எண்ணமும், நுட்பமான
சங்கதிகளை விளங்க வைத்தும், எழுதும்போது அவ்வப்போது
அடியெடுத்துக் கொடுத்தும், பல தருணங்களில் அவர் வழிநடத்தினார். இந்நூல் எல்லாம்வல்ல சித்தர் போகருக்கும், 'கல்கி'
வீரபோகருக்கும் சமர்ப்பணம். வரும் சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டிற்கு வெளிவருகிறது.
நூல் வெளியீடு: விஜயா பதிப்பகம்,
20 ராஜ வீதி, கோயம்புத்தூர் 641001.
20 ராஜ வீதி, கோயம்புத்தூர் 641001.
பேசி: 0422-2382614.
பக்கங்கள்: 328, விலை: ரூ.225
பக்கங்கள்: 328, விலை: ரூ.225
மின்னஞ்சல்: vijayapathippagam2007@gmail.com
(பதிப்பாளரிடம்
பதிவு செய்தால், நூலை தபாலில் அனுப்புவார்கள். நூலை வெளிநாடு -உள்நாடு வாசகர்கள் Marinabooks.com தளத்தில் ஆன்லைனிலும் வாங்கிக்கொள்ளலாம்.)