ராமலிங்கம் என்ற மகான் ஸ்ரீ தோபா சுவாமிகள் நிர்வாண அவதார சித்த புருஷர். தோபா சுவாமிகள் என்ற சிறப்புத் திருநாமம் பெற்ற இவர் திருவொற்றியூரில் தெரு ஓரமாக அமர்ந்து, அவ்வழியே செல்பவர்களின் குணத்தைக் குறிப்பது போல நாய் போகிறது, நரி வருகிறது, கழுதை கத்துகிறது, பேய் திரிகிறது என்றெல்லாம் சொல்லுவாராம்.
அந்த 19ம் நூற்றாண்டில், வடலூர் ராமலிங்க அடிகளார், இவர் இருந்த அந்தத்தெரு வழியே வர முதல் முறையாக மனிதர் வருகிறார் என்றாராம். இவரை நோக்கிய வடலூர் ராமலிங்க அடிகள், தன்னைப் போல் இவரும் மகான் என்பதை உணர்ந்து அதனை அங்குள்ளோரிடமும் தெரிவித்தார். எப்போதும் 'தோ.. தோ' என்று உரக்க சொல்லுவாராம். அதனால்தான் அப்பெயர் பெற்றார். 'தோடுடைய செவியன்' பாடிய திருஞானசம்பதர்தான் இவருடைய மானசீக குரு.
தோபா சுவாமிகள் ஒரு நாள் இல்லத்தின் வாயிலில் நின்று பிச்சை கேட்டார். அப்பெண்மணியோ மிகுந்த பக்தியுடன் பாதி வெந்துகொண்டிருந்த சாதத்தை அவசரமாக அளித்துவிட்டார். உடனே உள்ளே சென்று பானை சாதத்தைக் கிளற முயல, சாதம் கணநேரத்தில் முழுமையாக வெந்திருந்ததாம். இது மகான் செய்த அற்புதம். இவருடைய ஜீவ சமாதி மடம் வேலூர் (CMC அருகில்) சைதாபேட்டையில் உள்ளது.
சென்னை அசோக்பில்லர் ரயில் நிலையம் பின்னேயுள்ள சிவன் கோயிலில் பூஜை செய்து சில நாட்கள் தங்கியதால் ஸ்ரீ தோபா சுவாமி @ ஸ்ரீ மல்லிகேஸ்வரர் ஆலயம் என்று பெயர் பெற்றது. சற்றுமுன், ஸ்ரீ மகேஸ்வரி சமேத ஸ்ரீ மல்லிகேஸ்வரரை தரிசிக்கும் பேறு கிட்டியது... ஓம் நமசிவாய!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக