உயர்வான திருப்புகழில் சரவணனே அருணகிரிநாதருக்கு எல்லாமாகவும் இருக்கிறார், ‘முத்தைத்தரு’ என்ற சொல்லை முருகன் உபதேசித்து, பின்னாளில் ‘வாக்குக்கோர் அருணகிரி’ என்று பெயரும் புகழும் நிலை பெறச் செய்தான். "முத்தை தரு பத்தி திரு நகை அத்திக்கு..." படித்தாலே நரம்பு மண்டலம் சக்தி சக்கரங்கள் வலுப்பெறும்.
முருகன் வேறு சிவன்வேறு அல்ல என்று கந்தபுராணம் பாடுகின்றது. ஈசனின் ஆக்ஞேயத்தின் ஒளிப்பிழம்புதான் முருகபெருமான். அதனைத் தெளிவு படுத்தும் பாடல்:
'அருவமும் உருவு மாகி
அனாதியாய்ப் பலவாய் ஒன்றாய்
பிரமமாய் நின்ற சோதிப்
பிழம்பதோர் மேனி யாகிக்
கருணைகூர் முகங்கள் ஆறும்
கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்துஆங்(கு)
உதித்தனன் உலகம் உய்ய.'
சமீபகாலமாக தமிழ் உச்சரிப்பை வேண்டுமென்று மாற்றி உச்சரிப்பதாலும், பள்ளியில் பயிற்றுவித்தல் சரியில்லாது போவதாலும், மூளை மற்றும் நரம்பு மண்டல பாதிப்பு வரும். சொற்களின் உச்சரிப்பை மாற்றிச் சொல்லும்போது, ஏற்கனவே அணுவில் பதிவான சொற்களின் சப்தங்களின் phonetics மாறும் போது, மூளையில் சில சமச்சீரற்ற அதிர்வலைகள் நிகழ்கிறது. கடந்த ஏழு பிறவிகளில் நாம் பிறப்பெடுத்த போதேல்லாம் நாம் என்ன மொழிகள் பேசினோமோ அந்த சப்தங்கள் கேட்டலாகிட்டு பதிவாகி உள்ளது. இந்த சப்தப்பதிவு பற்றி பலர் அறிவதில்லை. அதனால்தான் 12 வயதுக்குள் அநேகமாக பன்மொழிகள் கற்பது எளிமையாகுது. ஏன் எதற்கு என்று நீட்டி முழக்காமல், "இளமையில் கல்" "வைகறைத் துயில் எழு" போன்ற விஞ்ஞான நுண் விஷயங்களை நறுக்கென சொன்னார் சித்தர் ஔவை.
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக் கிரிமத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வது மொருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாட
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே.
வாரியார் சுவாமி சொற்பொழிவில் முருகனின் தோற்றம் குறித்து சொல்வார். 'உலகம் தோன்றிய நாள்தொட்டுத் தாய் குழந்தைப் பெறுவாள், அப்பா பெயர் வைப்பார். ஆனால், அப்பா குழந்தை பெற்று அம்மா பெயர் வைப்பது ஒரு புரட்சி. ஓர் ஆண் பிள்ளை குழந்தை பெற்றான் என்ற சரித்திரம் கிடையாது. கைலாயத்தில் சிவபெருமான் தன்னுடைய நெற்றிக்கண்ணிலிருந்து முருகப் பெருமானை சிருஷ்டி செய்கின்றார். அருணகிரிநாதர் இதைத்தான் திருப்புகழில் 'முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும்' என்கிறார். அப்படி ஒன்றுமில்லை என்று மறுக்கும் பகுத்தறிவாளர்கள் உண்டு. வெறும் பகுத்தறிவு கொண்டு தமிழையும் முருகனையும் ஆராய முடியாது. ஐம்பூதத்தானான ஈசனின் வெளிப்பாடே முருகன்.
'அருவமும் உருவு மாகி
அனாதியாய்ப் பலவாய் ஒன்றாய்
பிரமமாய் நின்ற சோதிப்
பிழம்பதோர் மேனி யாகிக்
கருணைகூர் முகங்கள் ஆறும்
கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்துஆங்(கு)
உதித்தனன் உலகம் உய்ய.'
தமிழ் அருளிய முருகனைப் போற்றும் காவியங்களான திருப்புகழ், கந்தர் அநுபூதி, கந்தர்சஷ்டி கவசம், ஷண்முக கவசம், குமாரஸ்தவம், போன்றவற்றை பாராயணம் செய்தாலே சாலச்சிறந்தது. சித்தர் போகர், தன் நூலில் அகஸ்தியரையும் மூலரையும் தமிழ்சாகரங்களாகவும்; பாம்பன் சுவாமிகள் அருணகிரியாரை தமிழ் மகுடமாகவும் வைத்து ஆராதித்தது தெரிகிறது. என் குருநாதர்களுக்குப் போற்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக