About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வெள்ளி, 12 மே, 2017

மதுரையில் எழுகடல்


மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் என்றால் உலகப் பிரசித்தம். ஆனால் நம்மில் பலரும் அறியாத கோயில் ஒன்று மதுரையில் உண்டு.
மீனாட்சியின் தாய்-தந்தை மலையத்துவச பாண்டியன்- காஞ்சன மாலை, இவர்களுக்கு எழுகடல் தெருவில் ஒரு கோயில் உண்டு. இங்கே தேங்காய் உடைத்து பூஜை செய்வது இல்லை என்கிறார்கள். எழுகடல்களில் நீராட வேண்டும் என்ற காஞ்சனையின் விருப்பத்தை நிறைவேற்றித்தர வேண்டி மீனாட்சி கோரிக்கை வைக்க, மருமகன் சுந்தரேஸ்வரர் அங்கே புண்ணிய நீர் சங்கமத்தை உருவாக்கினார் என்பது ஐதீகம். குலசேகர பாண்டியனின் மகன்தான் மலையத்துவச பாண்டியன்.
தல பெருமை:
கௌதம முனிவர் காஞ்சனமாலையிடம், ”புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, சிவனாரை வணங்கினால், உனக்கு முக்தி கிடைக்கும்” என அருளினார். புண்ணிய தீர்த்தத்தில், கணவரின் கரம் பற்றியோ, மைந்தனின் கரம் பிடித்துக்கொண்டோதான் குளிக்கவேண்டும் என்பது மரபு. ஆனால், காஞ்சனமாலைக்குக் கணவரும் இல்லை; மகனும் இல்லை. என்ன செய்வது என்று தவித்தாள்.
காஞ்சனமாலை என்பவள், வேறு யாருமில்லை; மதுரையம்பதியை அருளாட்சி செய்து கொண்டிருக்கும் மீனாட்சியின் தாயார்தான். தன் கவலையை மகளிடம் சொன்னாள் காஞ்சனமாலை. அதை அப்படியே கணவர் ஸ்ரீசொக்கநாதரிடம் தெரிவித்தாள் ஸ்ரீ மீனாட்சியம்மை.
உடனே சிவனார் கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, சரஸ்வதி, கோதாவரி, காவிரி ஆகிய ஏழு நதி தீர்த்தங்களையும் ஒருசேரத் திரட்டினார். காஞ்சனமாலையின் கணவரான மலையத்துவச மன்னனை மேல் உலகத்தில் இருந்து வரச்செய்து, அவரின் கரம் பற்றி, புண்ணிய தீர்த்தத்தில் அவளை நீராடச் செய்தார். பிறகு, ஸ்ரீஉமையவளுடன் ரிஷப வாகனத்தில் காட்சி தந்து அருளினார் ஸ்ரீபரமேஸ்வரன். அதையடுத்து, மலையத்துவச மன்னனையும் காஞ்சனமாலையையும் சிவகணங்கள் மேல் உலகத்துக்கு அழைத்துச் சென்றனர் என்கிறது ஸ்தல புராணம்.
மூலவரின் திருநாமம் – ' எழுகடல் அழைத்த எம்பிரான்'. அம்பாளின் திருநாமம்- 'ஸ்ரீதடாதகை எம்பிராட்டி'.
மலையத்துவச பாண்டியனை அழைத்தல், எழுகடல் அழைத்தல் ஆகிய திருவிளையாடல்கள் நிகழ்ந்த தலம் எனும் பெருமை கொண்ட இவ்வாலயம் சுமார் 1800 வருடப் பழைமை வாய்ந்தது. இங்கே, காஞ்சனமாலையும் மலையத்துவச பாண்டியனும் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றனர்.
No automatic alt text available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக