ஏனுங்க... இந்தப் படங்களப் பார்த்தா, இது விளையாட்டு மைதானமோ, தரிசு நிலமோ, பொட்டல் வெளியோனு சிந்தனை ஓடுதுங்களா? அது எதுவும் இல்லீங்க. இதுதான் காவேரி.
எங்கள் ஊரான கொடுமுடியில் (ஈரோடு மாவட்டம்) 'அகண்ட' காவேரி இப்போது 'வறண்ட' காவேரியாக உள்ளது. நான் நேற்று இந்த இடத்தில் நின்று படம் எடுத்த மையப்பகுதிதான், நதியின் ஆழமான பகுதி. ஊர் மட்டத்திலிருந்து சுமார் 20அடி ஆழமிருக்கும். இப்போதைக்கு சிறுவர்கள் விளையாடுவதற்கும், பரிகார சுற்றுலா வருவோர் பந்தல் போட்டு ஓய்வு எடுக்கவும், விறகு-புல்லுக்கட்டு அடுக்கி வைக்கும் களமாகவும் பயன்படுகிறது. கண்ணெதிரே படகு-பரிசல் தலைகுப்புற போடப்பட்டுள்ளது.
இங்குதான் நதி கிழக்கே திசை மாறிப் பாய்கிறது. ஏன்? காவேரி நதியின் மொத்த நீளம் 765 கிமீ. அதில் சரி பாதியாக 382 வது கிமீ இடத்தில் இங்கு திசை மாறும். விநாயகர் இங்குதான் காக்கை வடிவில் வந்து அகத்தியரின் கமண்டலத்தை உருட்டிக் கவிழ்த்து விட, அடைப்பட்டிருந்த காவேரி திசை மாறிப் பாய்ந்தது. சுமார் முக்கால் கிலோமீட்டர் தூரம் அகண்டு விரிந்த காவேரி முழுவதும் படித்துறையைத் தாண்டி பொங்கி வழிந்து ஓடுவதே அழகுதான். இப்போது வறண்ட பூமிதான்... ஹூம்ம்..! நதிக்குள்ளே சாலை வசதி என்பது வரக்கூடிய விபரீதத்தையே என்ற மனசுல உணர்த்துதுங்க. ஈசன் விட்ட வழி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக