முகநூலில் திருவள்ளுவரின் மேன்மையைப் பற்றி ஒரு பதிவு வலம் வந்து கொண்டிருக்கிறது. அதில் : 'அவன் படைத்த திருக்குறளில் எந்த ஒரு தெய்வத்தின் பெயர் இல்லை, ஒரு மதத்தையோ சாதியையோ குறிப்பிட்டுப் பதிவுகள் இல்லை, ஓர் அரசையோ ஆளும் வர்க்கத்தையோ உயர்த்தியோ தாழ்த்தியோ ஏதுமில்லை. எம்மதமும் போதிக்காத கருத்தை இப்படி எழுத முடியுமா?' இதுதான் அதிலுள்ள சங்கதி.
பொய்யாமொழிப் புலவர் சைவ சித்தாந்த சாரத்தை அருமையாக திருக்குறளில் தந்துள்ளார். அதை கட்சிகள் தங்கள் வசதிக்கேற்ப மாற்றி அமைத்துக் கொண்டு பேசுகின்றனர். சைவத்துக்கு மேல் ஒரு மதமும் இல்லை, தமிழுக்கு மேல் ஒரு மொழியும் இல்லை. குழப்புவது போல் வள்ளுவர் எழுதினார் என்றால் அவருடைய மறைப்பு encryption பரிபாசைத் திறன் உச்சத்தில் உள்ளது என்று பொருள். இது சித்தர்களுகே உரிய செயல்.
திருவள்ளுவர் சிவசித்தன் இல்லை, எந்த சமயத்தையும் சார்ந்ததில்லை, எந்தவொரு தெய்வத்தையும் குறிப்பிட்டு வணங்கியதில்லை என்று கூறிப் பழிப்பது நாம்தான். இது பெரும் பாவம். நான்கு வேதங்களின் சாரத்தை திருக்குறளில் சொன்னதால் அதை உத்தர வேதம் என்கின்றனர். முதல் குறளிலேயே 'ஓம்' என்ற சொல்லி, அகர முதலான எழுத்தெல்லாம் (அ,உ,ம) சிவசக்தியே என்று கடவுள் வாழ்த்தில் சொல்லியுள்ளார். (அ-சிவன், உ-சக்தி,ம-உயிர்சக்தி, அதுவே ஓம் Oum) அகாரம், உகாரம், மகாரம்.
"தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்."
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்."
என்று ஔவையார் சொன்னால் அது எப்படி சைவ சமயம் சாராதா நூலாக இருக்கும்? அப்படிப்பட்ட ஒரு நூலை பொற்றாமரையும் சங்கப்பலகையும் ஏற்றிருக்குமா? நாம் யோசிக்கவேண்டாமா? நான்மறைகள், தேவாரத் திருமுறைகள், திருவாசகம், திருமந்திரம் ஆகியவற்றுக்கு திருக்குறள் சமமானது என்ற பெருமையை பெற்றிருக்குமா? அதனால் அதனை 'உலகப் பொதுமறை' என்றனர். 'ஓம்' என்ற அகர முதல எழுத்தில் தொடங்கி , பிறவிப் பெருங்கடல், எழுபிறப்பு, இம்மை மறுமை, மலர்மிசை, பிறவாமை, ஊழ்வினை, வேள்வி, அவி உணவு, என இன்னும் எத்தனயோ சொற்கள் அவர் சைவ சித்தாந்தர் என்பதற்கு சான்று. இக்கூற்றை நம் தமிழர்கள் அனேகம்பேர் யாருமே ஏற்கமாட்டார்கள்.
இதுதான் குறளின் பொருள் என்று அறுதியிட்டு சொல்ல முடியாது. ஏனென்றால் திருக்குறள் மறைப்பு நிறைந்த சித்த நூல். அவரவர் பார்வையில் பலவித விளக்கங்கள் புலப்படும். இது வரை: மணக்குடவர், பரிமேலழகர், மு.வரதராசர், வீ. முனுசாமி, கலைஞர், சாலமன் பாப்பையா, அய்யம்பெருமாள் கோனார், ஆகியோர் உரை எழுதியுள்ளனர்.
இவற்றில் சில உரைகளில் கடவுள் கான்சப்ட் நன்கு வெளிப்படும் / இலைமறையாக வெளிப்படும்/ சுத்தமாக வெளிப்படாது.. ஆகவே, ஆன்மிகத்தை /சமயத்தை வெளிக்காட்டும் ஒரு உரை, காட்டாத ஒரு உரை என்று இருப்பதால், நாம் நம் மெய்யறிவு கொண்டு ஆராய்வதே சிறந்தது. குருடர்கள் யானையின் தோற்றத்தை விளக்குவது போல் ஆகி விட்டது. 'ஆவதானி' கவனகர் திரு.கனக சுப்புரத்தினம் அவர்களின் திருக்குறள் விளக்கத்தைக் கேட்டால் மெய்பொருள் வெளிப்படும்.
இவற்றில் சில உரைகளில் கடவுள் கான்சப்ட் நன்கு வெளிப்படும் / இலைமறையாக வெளிப்படும்/ சுத்தமாக வெளிப்படாது.. ஆகவே, ஆன்மிகத்தை /சமயத்தை வெளிக்காட்டும் ஒரு உரை, காட்டாத ஒரு உரை என்று இருப்பதால், நாம் நம் மெய்யறிவு கொண்டு ஆராய்வதே சிறந்தது. குருடர்கள் யானையின் தோற்றத்தை விளக்குவது போல் ஆகி விட்டது. 'ஆவதானி' கவனகர் திரு.கனக சுப்புரத்தினம் அவர்களின் திருக்குறள் விளக்கத்தைக் கேட்டால் மெய்பொருள் வெளிப்படும்.
தேவாரப் பாடல்களில் திருக்குறள் வரிகள் அப்படியே சொல் மாறாமல் இடம் பெற்றுள்ளது. ஞானப்பால் உண்ட சம்பந்தபெருமான், மறைப்பு குறட்பாக்கள் தந்த திருவள்ளுவரின் சிந்தை அறியாதவரா என்ன? அதனால்தான் தன்னுடைய பாடல்களில் அதையே மேற்கோள் காட்டி ஆழமாகக் கையாண்டு குறளின் பொருளை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார். தமிழ்வேதம் என்ற போற்றுதலையும் பெற்றது. சேக்கிழார் பெருமான் மெச்சிய சம்பந்தனின் எழுதுமறை நூலில் திருக்குறளின் பிம்பத்தைக் காணலாம். ஞானசம்பந்த பெருமானின் பதிகங்களை பொறுமையாகப் படித்தால் நான் சொல்வது புரியும். தேவாரத்தில் முதல், இரண்டாம், மூன்றாம் திருமுறை என்று அழைக்கப்படும் தேவாரத் திருமுறைகளைப் பாடியவர் திருஞானசம்பந்தர் ஆவார்.
நம் ஆய்வாளர்களும் புலவர்களும் ஆயிரம் அர்த்தங்கள் சொல்வார்கள். நாம்தான் மெய்ஞான அறிவு மூலம் குறளமுதை விளங்கிக் கொண்டு பருக வேண்டும். 'சித்தர்கள் நூலுக்கு பொய் இலக்கணம் வகுத்து பழித்துப் பேசும் கலியுக மாண்பர்கள் சாபத்திற்கு ஆளாவர்' என்று போகர் உரைத்துள்ளார்.
காலங்காலமாக திருவள்ளுவரை இப்படிச்சொல்லியே சித்தரித்ததால், அவர் ஓவியத்தை பலமுறை வரைந்து வரைந்து கடைசியில் அதிகாரபூர்வமாக ஒரு படத்தை அரசு ஏற்றது. அதில் சைவ சமயம் வெளிப்படாமல் இருக்கும். இந்த விஷயத்தை மறைந்த ஓவியர் வேணுகோபால ஷர்மாவின் குடும்பத்தினர் அளித்த பழைய பேட்டியில் படித்துள்ளேன்.
எனக்குத் தெரிந்து திருக்குறளை நாம் யாரும் சிரத்தையுடன் இதுவரை படித்தோ மனனம் செய்ததோ இல்லை. பள்ளிக்கூடத்தில் தேர்வு சமயம் 2 மதிப்பெண் வாங்க இதை படித்திருப்போம். சொற்ப சிலரே அத்தனை குறட்பாக்களையும் நெற்று செய்து ஒப்பிக்கும் வல்லமை பெற்றவர்கள்... அனைவருமே திருக்குறளை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் விதமாய் இருந்தால் நம் தேசத்தில் நாம்தான் உயர்வாக இருந்திருக்க வேண்டும். ஏன் இல்லை? ஏன் இந்த அவலம்? எல்லா வகையிலும் தீயநெறியுடன் ஏன் இப்படி கீழ்த்தரமாய் உள்ளோம்? குறள்நெறிப்படி யாரும் வாழவில்லை என்று தானே பொருள்? அதனை பின்பற்ற இயன்றதா? அப்படி என்றால் திருக்குறள் பெயரவில் கொண்டாடப்படுகிறது என்பது கண்கூடு.
ஆனால் திருக்குறளை வைத்துக் கொள்வதாலோ, படிப்பதால் மட்டுமோ எல்லோருமே ஒழுக்க சீலர்களாக தர்மநெறி பின்பற்றுபவராக மாற முடியாது, என்பதற்கு திருக்குறள் போற்றும் நம் மாநிலம் அதற்கு உதாரணம். அதை உலகப் பொதுமறை என்று சொல்லி விட்டோமே தவிர, அதைப் படித்ததால் மக்கள் இன்னும் செம்மைபடவில்லையே! ஏனைய வகை சமய நூல்களும் அப்படியே... எல்லா நூல்களும் மிக நல்லதுவே.. ஆனால் இக்காலத்திற்கு பொருந்தாது. போகர் தன் சீடர் புலிப்பாணிக்கு கலியுகத்தின் கேவலங்கள் பற்றி சொல்லும்போது தர்மநெறி நூல்கள் மதிப்பின்றி போகும் என்று சொல்கிறார்.. இவை எல்லாம் புத்தக அலமாரியில் வைத்து கொண்டாடவே சிறந்தது. அதனால் உலகம் அமைதியுறாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக