சமீபத்தில் May-7 அன்று நடந்த அகில இந்திய NEET நீட் நுழைவுத் தேர்வில் பல அக்கப்போர் சம்பவங்கள் நடந்த விதம் நமக்கு ஆச்சரியத்தை தரும்.
தேர்வு எழுத வந்த மாணவர்களின் காதுகளில் உள்ள தோடுகளை கழட்டி எடுப்பது, தலை சடைப்பின்னலை அவிழ்த்துக்காட்டச் சொன்னது, காதுக்குள் நுண்ணோக்கி குழாய் வைத்துப் பார்ப்பது, முடியை கத்தரிப்பது, மூக்குக்குள்ளே விரல்விட்டு மூக்குத்தியை பிடுங்கி இழுப்பது, முழுக்கை சட்டை அணிந்தவரின் துணியை கத்தரிக்கோல் கொண்டு வெட்டிக் கிழிப்பது, உள்ளாடைகளை களையச் சொன்னது,.. என்று நடந்த பல நூதன சோதனைகளைப் பற்றி தினசரிகளிலும் தொலைக்காட்சியிலும் வந்தது. தேர்வுமைய நுழைவுச் சீட்டில் இந்த சோதனைகள் பற்றி முழு விவரம் உள்ளது என்று தேர்வாணையம் சொல்கிறது.
திடீரென பார்க்கும்போது, தேர்வு மையங்களில் எல்லாம் எதோ காது-மூக்கு-தொண்டை பரிசோதனை, முடி வெட்டுதல், தையலக வேலைகள் நடக்கும் முகாமாகவே பார்ப்பவர்களுகுத் தெரிந்திருக்கும். "ஓஹோ.. மெடிக்கல் சீட் கிடைகிறதுக்கு முன்னாடியே காது மூக்கு வாய் உடம்பெல்லாம் எல்லாம் டெஸ்ட் பண்ணி உள்ளே அனுப்புறது ரொம்ப புதுசா இருக்கே!" என்று விவரம் தெரியாதவர் சொன்னாலும் ஆச்சரியமில்லை.
நல்ல வேளையாக தேசம் முழுக்க இந்த சோதனைகள் நடந்துள்ளது. இல்லாவிட்டால் இங்கே அது அரசியல் பிரச்சனையாக எப்படி வேண்டுமானாலும் வெடித்திருக்கும். அப்படியும் வடக்கே சில 'விருப்ப' இடங்களில் இதுபோன்ற தீவிர சோதனைகள் எதுமே நடத்தாமல் விட்டுவிட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக