உத்தமரா அண்ணலா அடிகளா மகாத்மாவா?
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற பெயர் அநேகமாக இளைய தலைமுறையினர் மறந்து போயிருப்பார்கள். 'மகாத்மா காந்தி' என்று ரபீந்திரநாத் தாகூர் அழைக்க அதுவே நிலைத்துவிட்டது. இப்போது உலகமே 'மஹாத்மா காந்தி' என்று அழைக்கும் போது, தமிழ்நாட்ல மட்டும் அவரை அப்படி அழைக்காமல் 'உத்தமர்' 'அண்ணல்' 'அடிகள்' இப்படி வாய்க்கு வந்தபடி சாலை பெயர்ப் பலகையில் போடுவதால் குழப்பம் தான் வரும்... அப்போ அவர் 'மகாத்மா' இல்ல போலிருக்கு என்ற சந்தேகமே வரும். தேசப் பிதா, காந்தி தாத்தா என்பதை 'அப்பர்' 'பாட்டர்' என்று அழைக்காதவரை நல்லது.
அண்மையில் தமிழரல்லாத ஒருவர் எனக்குப் பக்கத்தில் நின்றிருந்தார், அந்த பெயர்ப் பலகையில் ஆங்கில வரியைப் பார்த்து 'அத்தமார் காந்தி சலை' என்று வாய்விட்டுப் படித்தார். எனக்கு சிரிப்புத்தான் வந்தது! அத்தைமார் மாமன்மார் ரேஞ்சுக்கு தேசபிதாவை சொந்தம் கொண்டாடுகிறார்கள். பட்டப்பெயர்களை இப்படி முன்னொட்டு பின்னொட்டுமாய் மொழிவாரியாக சூட்டி அழைக்க வேண்டியதுதான். முதல் முறையாக திரு.வி.க அவர்கள் காந்திஜியை அப்படி அழைத்து ஏற்படுத்திய மரபு இப்படிப் போகும்னு யாரும் நினைக்கலை! ஏன், நாம் மட்டும் தேசத்தோடு என்றுமே யாரோடும் ஒட்டாமல் இருக்கிறோம்? 'தமிழன்டா' என்ற பதில்தான் வரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக