ஸ்ரீமத் ராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தியை (1-5- 2017) முன்னிட்டு, சேலம் மாவட்டம் எருமாபளையம், ஏரிக்கரையில் மணிமண்டபம் ஒன்றை 'ஸ்ரீ பகவத் ராமானுஜ கைங்கர் அமைப்பினர் சிறப்பாக கட்டியுள்ளனர். கோயிலைச் சுற்றி நம் கழுத்தை உடைக்கும் உயரத்தில் மலைகள் வானளாவி நிற்கிறது. பிரதான சாலையில் இருந்து 10 நிமிடத்தில் போய் சேரலாம். இயற்கை சூழலில் மிக ரம்மியமாக இது அமைந்துள்ளது என்பதைப் பார்க்கும்போது இது பெருமாளின் மன விருப்பமாக இருக்கும் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
இங்கு 18 அடி உயரமுள்ள ஸ்ரீ ராமானுஜரின் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. மண்டபத்தைச் சுற்றி அவருக்கு உகந்த 4 திருக்கோயில்கள் அமைந்துள்ளன. அவை: வெங்கடாசலபதி கோயில், ரங்கநாதர் கோயில், காஞ்சி வரதராஜபெருமாள், மேல்கோட்டை சம்பத்குமார கோயில், ஆகியவை. நேற்று அதை ஒவ்வொரு கோணத்திலிருந்தும் படம் எடுத்தேன். இன்னும் ஏதோ கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. பிரபந்தம் படிக்க நூலகமும் ஆராய்ச்சி நிலையமும், ஒலி-ஓளி காட்சிக்கூடமும் அமைக்க திட்டமுள்ளதாம். இங்கு நுழைவுக் கட்டணம் ஏதுமில்லை.
கோயில் நேரம்: காலை:7 - 10, மாலை: 4 -7 வரை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக