பல மந்திரங்களிலும் சித்தர் பாடல்களிலும் பீஜ அட்சரங்கள் கேள்விபபட்டிருப்போம்.. அம், வம், ஹர், ஹூர், ஸர், ங்ஞாவ், ஐம், உம், சட், புட், .. ஐங், சொய்ங், (சிரிப்பு வருதோ?) என்பது வரை உதாரணத்திற்கு சொன்னேன். இதுபோன்ற ஒலிகளைக் கேட்டாலே அது சம்ஸ்கிருத ஓசை என்று தவறாக நினைப்பார்கள் நம் தமிழ் நேசர்கள்.
சித்தர்களே இதுபோன்ற அட்சரங்களை தங்கள் பாடல்களில் சொல்லியுள்ளனர். இவை எல்லாவற்றையும் கூர்ந்து பார்த்தால் , பல வன விலங்குகளும், வீட்டுப் பிராணிகளும், பட்சிகளும் எழுப்பும் ஓசைகள் இதை ஒட்டியே இருப்பதைக் காணலாம். அப்படி என்றால் அவைகளும் மந்திரம் ஒதுகிறதா? இந்த அட்சரங்களுக்கு பொருள் கிடையாது, அவை சக்தி தரும் ஒலிகளாகவே கருதப்படும். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு பீஜஅட்சர கோர்வை என்று நிறைய pairing உள்ளது. விஷயம் தெரிந்தோர், அதை பார்த்தாலே அந்த மந்திரம் புருஷ அம்சமா, ஸ்த்ரி அம்சமா என்று கண்டுபிடித்திடலாம். இவை மந்திரங்களின் வித்துக்கள் என்று சொல்லலாம். 'ஓம்' என்ற பிரணவத்தோடு இவை சேர்த்து உச்சரிக்கப்படும்.
பிராணிகளுக்கு இயற்கையாகவே இறைவன் இந்த கத்தும் ஒலிகளைதத் தந்து அவைகளின் மூச்சு ஓட்டத்தையும் சுரப்பிகளின் வேலையையும் சீராக்குகிறார். மந்திரம் என்பது மனிதர்களுக்கு மட்டும்தான் என்று யார் சொன்னது? நம் கண்களுக்குப் புலப்படாத பல விஷயங்கள் அவைகளுக்கு புலப்படும். அப்படிப்பார்த்தால் நம்மைவிட அஃறிணையான அது உயர்வான பக்தி நிலையில்தான் உள்ளது.
நம் ஆசாமிகள் மந்திரங்களின் முடிவில் வரும் 'நமஹ' என்ற ஒரு சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு சமஸ்கிருதம் என்பார்கள். அதற்கு பதில் 'போற்றி' போட்டுக்கொண்டால் ஆயிற்று. தமிழ் அல்லாத சப்தங்களை சமக்கிருதம் என்றால் மூத்த சித்தர்கள் பீஜங்கள் பற்றி சொன்னது எல்லாமே பொய்யா? தமிழில் வடமொழி சப்தங்களை பாம்பன் சுவாமிகள் (ஷண்முக கவசம்) சொல்லி உருவேற்றினார் என்ற கோணத்தில் பார்த்தால், வடமொழி உச்சரித்த ஒருவருக்கு தமிழ்க் கடவுள் முருகன் 'சடக்கர உபதேசம்' நேரில் செய்து வைக்கக்கூடாதே? தமிழ் சித்தர் அகத்தியரும் இதுபோன்று சொன்னார் என்றால் முருகன் இவரிடம் கனிவு காட்டக்கூடாதே?
சித்தர்களையே பகுத்தறியும் சந்தேகத்திற்கு உட்படுத்துவதாக இந்த கலியுகத்தில் தமிழ் ஆர்வம் அமைந்துள்ளது. சித்தர்கள் இயற்றிச் சொன்னதை பழித்துபேசி அவை பொய் என்று குற்றம் சொல்லும் கலியுக மூட மாண்பர்கள் உண்டு என்பதை போகர் முன்பே சொல்லியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக