திரையரங்கில் என் முன்புற இருக்கையில் ஒரு மூட்டுவலி ஆசாமி இருளில் சீட் நம்பர் தேடிக்கண்டு பிடித்து ஒருவழியாக வந்தமர்ந்து செட்டில் ஆனார். அதற்குள் 'தேசிய கீதம்' என்ற ஸ்லைட் போட்டு பாட்டு ஆரம்பித்தது. ஐயோ பாவம், எழுந்திருக்க கஷ்டப்பட்டு விட்டார். சட்டம் சிலருக்கு விலக்கு தந்துள்ளது. அப்படிபட்டோரின் உடல் தகுதியை யார் அங்கே பரிசோதிப்பது? சிரமம்தான். இப்படி எழாதவர்களைப் பற்றி காவல் நிலையத்தில் புகார் செய்ததுவரை செய்தித்தாளில் படித்துள்ளோம்.
இங்கே எழாவிட்டால் 'திமிர்புடிச்ச ஆளு.. பாக்க நல்லாதானே இருக்கான், கொடியை அவமரியாதை செய்யிறான்.. ரெண்டு நிமிஷம் நிக்கமுடியாதாமா?' என்று விமர்சனங்கள் வந்து விழும். கேளிக்கைக்காக வரும்போது, எல்லாவித உடல்நிலை மக்களும் ஒரு பொது இடத்தில் கூடும் இடத்தில் இது என்ன உபத்ரவம்? என்றுதான் நாம் நினைப்போம். பல அசௌகரியத்தால் எழ முடியாதவர்கள் 'கால் வலி, மூட்டுவலி, ஆணி, ஆஸ்டியோ, வெரிகோஸ் அதனால் நான் எழுந்துக்கலை' என்று பக்கத்தில் முகம் தெரியாதவர்களிடம் எதற்கு விளக்கணும்?
கீதம் இசைக்கும்போது அனைவரும் நிற்கும் சமயம் அங்கே எழ முடியாதவர்களின் மனம் மட்டும் குற்ற உணர்ச்சியில் கிடந்து தவிப்பதை நம்மால் உணர முடிகிறது. அரசு விழா மேடை, கல்விக்கூடம், அலுவலகம் இங்கெல்லாம் இசைப்பது அவசியம்தான். மற்றபடி.?
தேசிய கீதம் பாடிக்கொண்டே தேச துரோக செயலில் ஈடுபடுவோர் இல்லையா என்ன? மனதில் பக்தி இருந்தால் இருந்தால் போதும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக