SIM, Data card எண்களோடு Aadhar எண் இணைக்க வேண்டும் என்று கடந்த சில நாட்களாக எல்லோருக்கும் SMS வந்து கொண்டிருக்கிறது. இதற்கு கடைசி தேதி பிப்ரவரி 6, 2018.
அருகிலுள்ள அந்தந்த நெட்வொர்க் மொபைல் ஆப்பரேடர் அலுவலகத்திற்குச் சென்று இந்த சேவையை இலவசமாகப் பெறலாம். ஒவ்வொரு முறையும் Biometric விரல் கைநாட்டு தேவைப்படும். இந்த சேவையை எல்லா ரீசார்ஜ் கடைகளிலும் செய்து கொடுக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு SIM கார்டு இணைப்பிற்கும் ரூ.20 வசூல் செய்கிறார்கள். எதுக்கு இவ்வளவு வாங்கறீங்க என்று கேட்டதற்கு, 'பையோமெட்ரி கருவி மூவாயிரம் விக்கிது, அந்த பணத்தை இப்படித்தான் எடுக்கணும், ஓசில செய்யமுடியாதே சார்' என்றார்.
மத்திய அரசு கொண்டுவந்த இத்திட்டத்தால் ரீடைல் கடைகள் நன்கு சம்பாதிக்கிறது. இந்தியாவில் 1.2 பில்லியன் மொபைல் உபயோகிப்பாளர்கள் இன்றைக்கு இருக்கிறார்கள். அதில் சுமார் பத்து சதவிகிதம் பேர் நேரடியாகப் போய் இலவச சேவை பெற்றாலும், எஞ்சிய இணைப்புகளுக்கு ரூ.20 வீதம் வசூல் என்றால் அது நாடு முழுதும் மொத்தமாக எவ்வளவு கோடி பெறும் என்று நினைத்துப்பாருங்கள். மலை பிரதேச ஊர்களில் இன்னும் அதிகமாக வசூல் செய்கிறார்களாம். தீவிரவாதிகளை கட்டுப்படுத்த இந்த திட்டமாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக