About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

செவ்வாய், 30 மே, 2017

Sri Veerabrahmmendraswami Matam

Brahmamgari Matam, Kandimallayapalle Village, Cudappa District, Andhra Pradesh


Route: From Cudappa railway/bus station, matam is 62 km via Mydukur

Mutt timings:  6.30 am -12.30pm, 3pm - 9pm
Contact no.: 8569 286023
email:  svbmattam@gmail.com

Accommodation at the mutt: Brahmmamgari Sadan / Govindamma Sadan. Rent. 300/- per day
Other lodges available are:
Veerbrahmendra Hotel – 94404 90158
Veerabhadra Hotel – 99853 60889
Sowjanya Hotel – 96409 66681

Donations (kaanike /காணிக்கை ) can be made to the following account.

Sri Madvirat Veerabrahmmendra Swami Mattam
State Bank of India, Mallepalle Branch, Kandimallayapalle Road,
A/c. No: 30830570574
IFS code: SBIN 0012672

Veerabrahmmendraswami Aradhana Urchavam falls on Vaisaka month - Shukla paksha Dasami day, usually it comes in May and celebrated for 6 days. It was on this day in the year Kali-4094, (i.e. 992 AD), Bramamgaaru entered into samadhi after living for 175 years.


வியாழன், 25 மே, 2017

திருக்குறளில் சைவ சித்தாந்தம்

முகநூலில் திருவள்ளுவரின் மேன்மையைப் பற்றி ஒரு பதிவு வலம் வந்து கொண்டிருக்கிறது. அதில் : 'அவன் படைத்த திருக்குறளில் எந்த ஒரு தெய்வத்தின் பெயர் இல்லை, ஒரு மதத்தையோ சாதியையோ குறிப்பிட்டுப் பதிவுகள் இல்லை, ஓர் அரசையோ ஆளும் வர்க்கத்தையோ உயர்த்தியோ தாழ்த்தியோ ஏதுமில்லை. எம்மதமும் போதிக்காத கருத்தை இப்படி எழுத முடியுமா?' இதுதான் அதிலுள்ள சங்கதி.
பொய்யாமொழிப் புலவர் சைவ சித்தாந்த சாரத்தை அருமையாக திருக்குறளில் தந்துள்ளார். அதை கட்சிகள் தங்கள் வசதிக்கேற்ப மாற்றி அமைத்துக் கொண்டு பேசுகின்றனர். சைவத்துக்கு மேல் ஒரு மதமும் இல்லை, தமிழுக்கு மேல் ஒரு மொழியும் இல்லை. குழப்புவது போல் வள்ளுவர் எழுதினார் என்றால் அவருடைய மறைப்பு encryption பரிபாசைத் திறன் உச்சத்தில் உள்ளது என்று பொருள். இது சித்தர்களுகே உரிய செயல்.
திருவள்ளுவர் சிவசித்தன் இல்லை, எந்த சமயத்தையும் சார்ந்ததில்லை, எந்தவொரு தெய்வத்தையும் குறிப்பிட்டு வணங்கியதில்லை என்று கூறிப் பழிப்பது நாம்தான். இது பெரும் பாவம். நான்கு வேதங்களின் சாரத்தை திருக்குறளில் சொன்னதால் அதை உத்தர வேதம் என்கின்றனர். முதல் குறளிலேயே 'ஓம்' என்ற சொல்லி, அகர முதலான எழுத்தெல்லாம் (அ,உ,ம) சிவசக்தியே என்று கடவுள் வாழ்த்தில் சொல்லியுள்ளார். (அ-சிவன், உ-சக்தி,ம-உயிர்சக்தி, அதுவே ஓம் Oum) அகாரம், உகாரம், மகாரம்.
"தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்
."
என்று ஔவையார் சொன்னால் அது எப்படி சைவ சமயம் சாராதா நூலாக இருக்கும்? அப்படிப்பட்ட ஒரு நூலை பொற்றாமரையும் சங்கப்பலகையும் ஏற்றிருக்குமா? நாம் யோசிக்கவேண்டாமா? நான்மறைகள், தேவாரத் திருமுறைகள், திருவாசகம், திருமந்திரம் ஆகியவற்றுக்கு திருக்குறள் சமமானது என்ற பெருமையை பெற்றிருக்குமா? அதனால் அதனை 'உலகப் பொதுமறை' என்றனர். 'ஓம்' என்ற அகர முதல எழுத்தில் தொடங்கி , பிறவிப் பெருங்கடல், எழுபிறப்பு, இம்மை மறுமை, மலர்மிசை, பிறவாமை, ஊழ்வினை, வேள்வி, அவி உணவு, என இன்னும் எத்தனயோ சொற்கள் அவர் சைவ சித்தாந்தர் என்பதற்கு சான்று. இக்கூற்றை நம் தமிழர்கள் அனேகம்பேர்  யாருமே ஏற்கமாட்டார்கள்.


Image may contain: drawing
இதுதான் குறளின் பொருள் என்று அறுதியிட்டு சொல்ல முடியாது. ஏனென்றால் திருக்குறள் மறைப்பு நிறைந்த சித்த நூல். அவரவர் பார்வையில் பலவித விளக்கங்கள் புலப்படும். இது வரை: மணக்குடவர், பரிமேலழகர், மு.வரதராசர், வீ. முனுசாமி, கலைஞர், சாலமன் பாப்பையா, அய்யம்பெருமாள் கோனார், ஆகியோர் உரை எழுதியுள்ளனர். 

இவற்றில் சில உரைகளில் கடவுள் கான்சப்ட் நன்கு வெளிப்படும் / இலைமறையாக வெளிப்படும்/ சுத்தமாக வெளிப்படாது.. ஆகவே, ஆன்மிகத்தை /சமயத்தை வெளிக்காட்டும் ஒரு உரை, காட்டாத ஒரு உரை என்று இருப்பதால், நாம் நம் மெய்யறிவு கொண்டு ஆராய்வதே சிறந்தது. குருடர்கள் யானையின் தோற்றத்தை விளக்குவது போல் ஆகி விட்டது. 'ஆவதானி' கவனகர் திரு.கனக சுப்புரத்தினம் அவர்களின் திருக்குறள் விளக்கத்தைக் கேட்டால் மெய்பொருள் வெளிப்படும். 
தேவாரப் பாடல்களில் திருக்குறள் வரிகள் அப்படியே சொல் மாறாமல் இடம் பெற்றுள்ளது. ஞானப்பால் உண்ட சம்பந்தபெருமான், மறைப்பு குறட்பாக்கள் தந்த திருவள்ளுவரின் சிந்தை அறியாதவரா என்ன? அதனால்தான் தன்னுடைய பாடல்களில் அதையே மேற்கோள் காட்டி ஆழமாகக் கையாண்டு குறளின் பொருளை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார். தமிழ்வேதம் என்ற போற்றுதலையும் பெற்றது. சேக்கிழார் பெருமான் மெச்சிய சம்பந்தனின் எழுதுமறை நூலில் திருக்குறளின் பிம்பத்தைக் காணலாம். ஞானசம்பந்த பெருமானின் பதிகங்களை பொறுமையாகப் படித்தால் நான் சொல்வது புரியும். தேவாரத்தில் முதல், இரண்டாம், மூன்றாம் திருமுறை என்று அழைக்கப்படும் தேவாரத் திருமுறைகளைப் பாடியவர் திருஞானசம்பந்தர் ஆவார். 
நம் ஆய்வாளர்களும் புலவர்களும் ஆயிரம் அர்த்தங்கள் சொல்வார்கள். நாம்தான் மெய்ஞான அறிவு மூலம் குறளமுதை விளங்கிக் கொண்டு பருக வேண்டும். 'சித்தர்கள் நூலுக்கு பொய் இலக்கணம் வகுத்து பழித்துப் பேசும் கலியுக மாண்பர்கள் சாபத்திற்கு ஆளாவர்' என்று போகர் உரைத்துள்ளார்.

Image may contain: 2 people, text

திருமுறை, திருவாசகம், திருமந்திரம் ஆகியவற்றுக்கு இணையானது திருக்குறள் என்று ஔவை சொல்லும்போது, 'எந்த மதமும் போதிக்காத கருத்தை திருவள்ளுவர் சொல்லியுள்ளார்' என்பது முற்றிலும் அபத்தமான பேச்சு! 

காலங்காலமாக திருவள்ளுவரை இப்படிச்சொல்லியே சித்தரித்ததால், அவர் ஓவியத்தை பலமுறை வரைந்து வரைந்து கடைசியில் அதிகாரபூர்வமாக ஒரு படத்தை அரசு ஏற்றது. அதில் சைவ சமயம்  வெளிப்படாமல் இருக்கும். இந்த விஷயத்தை மறைந்த ஓவியர் வேணுகோபால ஷர்மாவின் குடும்பத்தினர் அளித்த பழைய பேட்டியில் படித்துள்ளேன்.

எனக்குத் தெரிந்து திருக்குறளை நாம் யாரும் சிரத்தையுடன் இதுவரை படித்தோ மனனம் செய்ததோ இல்லை. பள்ளிக்கூடத்தில் தேர்வு சமயம் 2 மதிப்பெண் வாங்க இதை படித்திருப்போம். சொற்ப சிலரே அத்தனை குறட்பாக்களையும் நெற்று செய்து ஒப்பிக்கும் வல்லமை பெற்றவர்கள்... அனைவருமே திருக்குறளை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் விதமாய் இருந்தால் நம் தேசத்தில் நாம்தான் உயர்வாக இருந்திருக்க வேண்டும். ஏன் இல்லை? ஏன் இந்த அவலம்? எல்லா வகையிலும் தீயநெறியுடன் ஏன் இப்படி கீழ்த்தரமாய் உள்ளோம்? குறள்நெறிப்படி யாரும் வாழவில்லை என்று தானே பொருள்? அதனை பின்பற்ற இயன்றதா? அப்படி என்றால் திருக்குறள் பெயரவில் கொண்டாடப்படுகிறது என்பது கண்கூடு.  


Image may contain: text

ஆனால் திருக்குறளை வைத்துக் கொள்வதாலோ, படிப்பதால் மட்டுமோ எல்லோருமே ஒழுக்க சீலர்களாக தர்மநெறி பின்பற்றுபவராக மாற முடியாது, என்பதற்கு திருக்குறள் போற்றும் நம் மாநிலம் அதற்கு உதாரணம். அதை உலகப் பொதுமறை என்று சொல்லி விட்டோமே தவிர, அதைப் படித்ததால் மக்கள் இன்னும் செம்மைபடவில்லையே! ஏனைய வகை சமய நூல்களும் அப்படியே... எல்லா நூல்களும் மிக நல்லதுவே.. ஆனால் இக்காலத்திற்கு பொருந்தாது. போகர் தன் சீடர் புலிப்பாணிக்கு கலியுகத்தின் கேவலங்கள் பற்றி சொல்லும்போது தர்மநெறி நூல்கள் மதிப்பின்றி போகும் என்று சொல்கிறார்.. இவை எல்லாம் புத்தக அலமாரியில் வைத்து கொண்டாடவே சிறந்தது. அதனால் உலகம் அமைதியுறாது.

ஞாயிறு, 14 மே, 2017

உடையவருக்கு மணிமண்டபம்.

ஸ்ரீமத் ராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தியை (1-5- 2017) முன்னிட்டு, சேலம் மாவட்டம் எருமாபளையம், ஏரிக்கரையில் மணிமண்டபம் ஒன்றை 'ஸ்ரீ பகவத் ராமானுஜ கைங்கர் அமைப்பினர் சிறப்பாக கட்டியுள்ளனர்.  கோயிலைச் சுற்றி நம் கழுத்தை உடைக்கும் உயரத்தில் மலைகள் வானளாவி நிற்கிறது. பிரதான சாலையில் இருந்து 10 நிமிடத்தில் போய் சேரலாம். இயற்கை சூழலில் மிக ரம்மியமாக இது அமைந்துள்ளது என்பதைப் பார்க்கும்போது இது பெருமாளின் மன விருப்பமாக இருக்கும் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
Image may contain: 1 person, outdoor

இங்கு 18 அடி உயரமுள்ள ஸ்ரீ ராமானுஜரின் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. மண்டபத்தைச் சுற்றி அவருக்கு உகந்த 4 திருக்கோயில்கள் அமைந்துள்ளன. அவை: வெங்கடாசலபதி கோயில், ரங்கநாதர் கோயில், காஞ்சி வரதராஜபெருமாள், மேல்கோட்டை சம்பத்குமார கோயில், ஆகியவை. நேற்று அதை ஒவ்வொரு கோணத்திலிருந்தும் படம் எடுத்தேன். இன்னும் ஏதோ கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. பிரபந்தம் படிக்க நூலகமும் ஆராய்ச்சி நிலையமும், ஒலி-ஓளி காட்சிக்கூடமும் அமைக்க திட்டமுள்ளதாம். இங்கு நுழைவுக் கட்டணம் ஏதுமில்லை.
கோயில் நேரம்: காலை:7 - 10, மாலை: 4 -7 வரை.

நம்புங்க இதுதான் அது.

ஏனுங்க... இந்தப் படங்களப் பார்த்தா, இது விளையாட்டு மைதானமோ, தரிசு நிலமோ, பொட்டல் வெளியோனு சிந்தனை ஓடுதுங்களா? அது எதுவும் இல்லீங்க. இதுதான் காவேரி.
எங்கள் ஊரான கொடுமுடியில் (ஈரோடு மாவட்டம்) 'அகண்ட' காவேரி இப்போது 'வறண்ட' காவேரியாக உள்ளது. நான் நேற்று இந்த இடத்தில் நின்று படம் எடுத்த மையப்பகுதிதான், நதியின் ஆழமான பகுதி. ஊர் மட்டத்திலிருந்து சுமார் 20அடி ஆழமிருக்கும். இப்போதைக்கு சிறுவர்கள் விளையாடுவதற்கும், பரிகார சுற்றுலா வருவோர் பந்தல் போட்டு ஓய்வு எடுக்கவும், விறகு-புல்லுக்கட்டு அடுக்கி வைக்கும் களமாகவும் பயன்படுகிறது. கண்ணெதிரே படகு-பரிசல் தலைகுப்புற போடப்பட்டுள்ளது.
இங்குதான் நதி கிழக்கே திசை மாறிப் பாய்கிறது. ஏன்? காவேரி நதியின் மொத்த நீளம் 765 கிமீ. அதில் சரி பாதியாக 382 வது கிமீ இடத்தில் இங்கு திசை மாறும். விநாயகர் இங்குதான் காக்கை வடிவில் வந்து அகத்தியரின் கமண்டலத்தை உருட்டிக் கவிழ்த்து விட, அடைப்பட்டிருந்த காவேரி திசை மாறிப் பாய்ந்தது. சுமார் முக்கால் கிலோமீட்டர் தூரம் அகண்டு விரிந்த காவேரி முழுவதும் படித்துறையைத் தாண்டி பொங்கி வழிந்து ஓடுவதே அழகுதான். இப்போது வறண்ட பூமிதான்... ஹூம்ம்..! நதிக்குள்ளே சாலை வசதி என்பது வரக்கூடிய விபரீதத்தையே என்ற மனசுல உணர்த்துதுங்க. ஈசன் விட்ட வழி!
Image may contain: outdoor and nature

சொந்த ஊருக்கு ஒரு பயணம்

குலதெய்வ ஆசிகள்...
ஈரோடு மாவட்டத்தில் எங்கள் சொந்த ஊரான கொடுமுடியிலிருந்து சுமார் 10கிமீ தொலைவில்தான் குலதெய்வம் கோயில் உள்ளது. இன்று குலதெய்வம் அய்யம்பாளையம் மகா மாரியம்மன் கோயிலில் அபிஷேகம், வஸ்திரம் சாற்று, மற்றும் வழிபாடு நடந்தது. திருப்பாண்டிக் கொடுமுடியில் மகுடேஸ்வரர் - வீரநாராயணப் பெருமாள்-பிரம்மன் தரிசனமும் கிட்டியது. கடுமையான வெயில் இருந்த போதும் தரிசனம் குளிர்ச்சியாகவே இருந்தது.
அகண்ட காவிரியில் இன்று முதன்முறையாக சிற்றுந்தில் பயணம் செய்தது புதிய அனுபவம். இதுவரை பரிசல் ஓடி பார்த்துள்ளேன், ஆனால் காவேரியின் மையப் பகுதியில் பாறைகளும் சில சிலைகளும் கண்ணில் பட்டன. 'வட்டவாசிகை கொண்டடி தொழுதேத்தும் பாண்டிக் கொடுமுடி' என்று சுந்தரர் பாடிய திருப்பதிகமே (பா-7:2) அப்போது எனக்கு நினைவுக்கு வந்தது. அவர் பாடிய பெருமைகள் எதையும் நதி வெளிக்காட்டவில்லை. தெற்கிலிருந்து வரும் காவிரி இங்குதான் கிழக்குமுகமாகத் திரும்புகிறாள். 
அகத்தியரின் கமண்டலத்தில் இருந்து நதியை வழிந்தோடச் செய்த விநாயகப் பெருமான் அங்கே வறண்ட காவேரியின் சாட்சியாக அமர்ந்துள்ளார். வினோதம்!

நடந்தாய் வாழி காவேரி ...

Image may contain: outdoor and nature
ஏனுங்க... இந்தப் படங்களப் பார்த்தா, இது விளையாட்டு மைதானமோ, தரிசு நிலமோ, பொட்டல் வெளியோனு சிந்தனை ஓடுதுங்களா? அது எதுவும் இல்லீங்க. இதுதான் காவேரி.
எங்கள் ஊரான கொடுமுடியில் (ஈரோடு மாவட்டம்) 'அகண்ட' காவிரி இப்போது 'வறண்ட' காவிரியாக உள்ளது. நான் நேற்று இந்த இடத்தில் நின்று படம் எடுத்த மையப்பகுதிதான், நதியின் ஆழமான பகுதி. ஊர் மட்டத்திலிருந்து சுமார் 20அடி ஆழமிருக்கும். இப்போதைக்கு சிறுவர்கள் விளையாடுவதற்கும், பரிகார சுற்றுலா வருவோர் பந்தல் போட்டு ஓய்வு எடுக்கவும், விறகு-புல்லுக்கட்டு அடுக்கி வைக்கும் களமாகவும் பயன்படுகிறது. கண்ணெதிரே படகு-பரிசல் தலைகுப்புற போடப்பட்டுள்ளது.
தெற்கிலிருந்து வரும் நதி இங்குதான் திசை மாறி கிழக்கே பாய்கிறது. ஏன்? காவிரி நதியின் மொத்த நீளம் 765 கிமீ. அதில் சரி பாதியாக 382 வது கிமீ இடத்தில் இங்கு திசை மாறும். விநாயகர் இங்குதான் காக்கை வடிவில் வந்து அகத்தியரின் கமண்டலத்தை உருட்டிக் கவிழ்த்து விட, அடைப்பட்டிருந்த காவிரி திசை மாறிப் பாய்ந்தது. சுமார் முக்கால் கிலோமீட்டர் தூரம் அகண்டு விரிந்த காவிரி முழுவதும் படித்துறையைத் தாண்டி பொங்கி வழிந்து ஓடுவதே அழகுதான். இப்போது வறண்ட பூமிதான்... ஹூம்ம்..! நதிக்குள்ளே சாலை வசதி என்பது வரக்கூடிய விபரீதத்தையே என்ற மனசுல உணர்த்துதுங்க. ஈசன் விட்ட வழி!

வாங்க சுற்றிப் பார்க்கலாம்!

1. கொடுமுடியில் எங்கள் பூர்வீக வீடு இருந்த கிழக்கு அக்ரகார வீதி.
2. நூற்றாண்டு கண்ட மேல்நிலைப்பள்ளி. (நி:1912)
3. மகுடேஸ்வரர் கோயில் பிரசாதம் கடை.
4. கோயில் பின்பக்கத்திலிருந்து எடுத்த படம்.
5. நான் பிறந்த வீடு... இன்று பயணியர் சத்திரம்... No.23, கிழக்கு அக்ரகார வீதி,

கோயில் உள்ளே போவோம்... 

 
இறைவன் சிவ பெருமானுக்கு: மகுடேஸ்வரர், கொடுமுடி நாதர், மலைகொழுந்தீசர், போன்ற பெயர்கள் உண்டு. இறைவிக்கு வடிவுடையநாயகி, திரிபுரசுந்தரி, சிவகாமசுந்தரி, மதுரபாஷினி என்ற பெயர்களும் உண்டு. சயன கோலத்தில் மகா விஷ்ணு இங்கே 'வீரநாராயண பெருமாள்' என்ற நாமத்தொடும், மகாலட்சுமி இங்கே திருமங்கை நாச்சியார் என்றும் அருள் பாலிகிறார்கள். இங்கு தலவிருட்சம் வன்னி. இதன் கீழ் பிரம்மா அமர்ந்து அருள் பொழிகிறார். இம்மரம் சமார் 3000 ஆண்டுகள் பழையது. சற்றுத் தொலைவில் ஊர் கிராம தேவதை மலையம்மனுக்கு கோயில் உண்டு.

சுமார் ஒரு நூற்றாண்டாக பராமரிக்கப்பட்டு வரும் பிராமண அன்னதான சத்திரம். நலிந்த ஏழை பிராமண சமூகத்தினர் தங்கி உணவு உண்டு யாத்திரை செய்ய  ஏதுவாய் வகை செய்யப்பட்டது. இது கிழக்கு அக்ரகார வீதியில் உள்ளது. 

இன்று அநேகமாக எல்லா வீடுகளுக்கும் குழாய் தண்ணீர் விநியோகம் நடக்கிறது. சாலை அகலமின்றி அன்று பார்த்ததுபோல்தான் உள்ளது.. கடும் வெயில் நிலவும்.. அன்றைய பொலிவு இல்லை. எங்கள் தாத்தா -பாட்டி (Pitchu Someswaran @ Mamaadu - Nagammaal) வாழ்ந்த வீடு... No.18, கிழக்கு அக்ரகார வீதி. கொடுமுடி - 638151. 


வெள்ளி, 12 மே, 2017

மதுரையில் எழுகடல்


மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் என்றால் உலகப் பிரசித்தம். ஆனால் நம்மில் பலரும் அறியாத கோயில் ஒன்று மதுரையில் உண்டு.
மீனாட்சியின் தாய்-தந்தை மலையத்துவச பாண்டியன்- காஞ்சன மாலை, இவர்களுக்கு எழுகடல் தெருவில் ஒரு கோயில் உண்டு. இங்கே தேங்காய் உடைத்து பூஜை செய்வது இல்லை என்கிறார்கள். எழுகடல்களில் நீராட வேண்டும் என்ற காஞ்சனையின் விருப்பத்தை நிறைவேற்றித்தர வேண்டி மீனாட்சி கோரிக்கை வைக்க, மருமகன் சுந்தரேஸ்வரர் அங்கே புண்ணிய நீர் சங்கமத்தை உருவாக்கினார் என்பது ஐதீகம். குலசேகர பாண்டியனின் மகன்தான் மலையத்துவச பாண்டியன்.
தல பெருமை:
கௌதம முனிவர் காஞ்சனமாலையிடம், ”புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, சிவனாரை வணங்கினால், உனக்கு முக்தி கிடைக்கும்” என அருளினார். புண்ணிய தீர்த்தத்தில், கணவரின் கரம் பற்றியோ, மைந்தனின் கரம் பிடித்துக்கொண்டோதான் குளிக்கவேண்டும் என்பது மரபு. ஆனால், காஞ்சனமாலைக்குக் கணவரும் இல்லை; மகனும் இல்லை. என்ன செய்வது என்று தவித்தாள்.
காஞ்சனமாலை என்பவள், வேறு யாருமில்லை; மதுரையம்பதியை அருளாட்சி செய்து கொண்டிருக்கும் மீனாட்சியின் தாயார்தான். தன் கவலையை மகளிடம் சொன்னாள் காஞ்சனமாலை. அதை அப்படியே கணவர் ஸ்ரீசொக்கநாதரிடம் தெரிவித்தாள் ஸ்ரீ மீனாட்சியம்மை.
உடனே சிவனார் கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, சரஸ்வதி, கோதாவரி, காவிரி ஆகிய ஏழு நதி தீர்த்தங்களையும் ஒருசேரத் திரட்டினார். காஞ்சனமாலையின் கணவரான மலையத்துவச மன்னனை மேல் உலகத்தில் இருந்து வரச்செய்து, அவரின் கரம் பற்றி, புண்ணிய தீர்த்தத்தில் அவளை நீராடச் செய்தார். பிறகு, ஸ்ரீஉமையவளுடன் ரிஷப வாகனத்தில் காட்சி தந்து அருளினார் ஸ்ரீபரமேஸ்வரன். அதையடுத்து, மலையத்துவச மன்னனையும் காஞ்சனமாலையையும் சிவகணங்கள் மேல் உலகத்துக்கு அழைத்துச் சென்றனர் என்கிறது ஸ்தல புராணம்.
மூலவரின் திருநாமம் – ' எழுகடல் அழைத்த எம்பிரான்'. அம்பாளின் திருநாமம்- 'ஸ்ரீதடாதகை எம்பிராட்டி'.
மலையத்துவச பாண்டியனை அழைத்தல், எழுகடல் அழைத்தல் ஆகிய திருவிளையாடல்கள் நிகழ்ந்த தலம் எனும் பெருமை கொண்ட இவ்வாலயம் சுமார் 1800 வருடப் பழைமை வாய்ந்தது. இங்கே, காஞ்சனமாலையும் மலையத்துவச பாண்டியனும் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றனர்.
No automatic alt text available.

செவ்வாய், 9 மே, 2017

NEET பரிசோதனை மையங்கள்


சமீபத்தில் May-7 அன்று நடந்த அகில இந்திய NEET நீட் நுழைவுத் தேர்வில் பல அக்கப்போர் சம்பவங்கள் நடந்த விதம் நமக்கு ஆச்சரியத்தை தரும்.
தேர்வு எழுத வந்த மாணவர்களின் காதுகளில் உள்ள தோடுகளை கழட்டி எடுப்பது, தலை சடைப்பின்னலை அவிழ்த்துக்காட்டச் சொன்னது, காதுக்குள் நுண்ணோக்கி குழாய் வைத்துப் பார்ப்பது, முடியை கத்தரிப்பது, மூக்குக்குள்ளே விரல்விட்டு மூக்குத்தியை பிடுங்கி இழுப்பது, முழுக்கை சட்டை அணிந்தவரின் துணியை கத்தரிக்கோல் கொண்டு வெட்டிக் கிழிப்பது, உள்ளாடைகளை களையச் சொன்னது,.. என்று நடந்த பல நூதன சோதனைகளைப் பற்றி தினசரிகளிலும் தொலைக்காட்சியிலும் வந்தது. தேர்வுமைய நுழைவுச் சீட்டில் இந்த சோதனைகள் பற்றி முழு விவரம் உள்ளது என்று தேர்வாணையம் சொல்கிறது.
திடீரென பார்க்கும்போது, தேர்வு மையங்களில் எல்லாம் எதோ காது-மூக்கு-தொண்டை பரிசோதனை, முடி வெட்டுதல், தையலக வேலைகள் நடக்கும் முகாமாகவே பார்ப்பவர்களுகுத் தெரிந்திருக்கும். "ஓஹோ.. மெடிக்கல் சீட் கிடைகிறதுக்கு முன்னாடியே காது மூக்கு வாய் உடம்பெல்லாம் எல்லாம் டெஸ்ட் பண்ணி உள்ளே அனுப்புறது ரொம்ப புதுசா இருக்கே!" என்று விவரம் தெரியாதவர் சொன்னாலும் ஆச்சரியமில்லை.
நல்ல வேளையாக தேசம் முழுக்க இந்த சோதனைகள் நடந்துள்ளது. இல்லாவிட்டால் இங்கே அது அரசியல் பிரச்சனையாக எப்படி வேண்டுமானாலும் வெடித்திருக்கும். அப்படியும் வடக்கே சில 'விருப்ப' இடங்களில் இதுபோன்ற தீவிர சோதனைகள் எதுமே நடத்தாமல் விட்டுவிட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.

OMR மூலம் விடைத்தாள் திருத்தப்படுவதால், அதை திருத்துவோர் தப்பித்தனர். இல்லாவிட்டால் அவர்களும் இந்த கதிதானோ என்னவோ? பொது இடத்தில் தனிநபர் இப்படிப்பட்ட கீழ்தரமான செயல்களைச் செய்தால் அது IPC Sec 66A, 654 சட்டங்கள் கீழ் குற்றம். இதை அரசு 'பரிசோதனை' என்ற பெயரில் செய்ததால் தவறில்லையோ?


ஞாயிறு, 7 மே, 2017

என்ன பெயர் வைக்கலாம்?

உத்தமரா அண்ணலா அடிகளா மகாத்மாவா?
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற பெயர் அநேகமாக இளைய தலைமுறையினர் மறந்து போயிருப்பார்கள். 'மகாத்மா காந்தி' என்று ரபீந்திரநாத் தாகூர் அழைக்க அதுவே நிலைத்துவிட்டது. இப்போது உலகமே 'மஹாத்மா காந்தி' என்று அழைக்கும் போது, தமிழ்நாட்ல மட்டும் அவரை அப்படி அழைக்காமல் 'உத்தமர்' 'அண்ணல்' 'அடிகள்' இப்படி வாய்க்கு வந்தபடி சாலை பெயர்ப் பலகையில் போடுவதால் குழப்பம் தான் வரும்... அப்போ அவர் 'மகாத்மா' இல்ல போலிருக்கு என்ற சந்தேகமே வரும். தேசப் பிதா, காந்தி தாத்தா என்பதை 'அப்பர்' 'பாட்டர்' என்று அழைக்காதவரை நல்லது.
அண்மையில் தமிழரல்லாத ஒருவர் எனக்குப் பக்கத்தில் நின்றிருந்தார், அந்த பெயர்ப் பலகையில் ஆங்கில வரியைப் பார்த்து 'அத்தமார் காந்தி சலை' என்று வாய்விட்டுப் படித்தார். எனக்கு சிரிப்புத்தான் வந்தது! அத்தைமார் மாமன்மார் ரேஞ்சுக்கு தேசபிதாவை சொந்தம் கொண்டாடுகிறார்கள். பட்டப்பெயர்களை இப்படி முன்னொட்டு பின்னொட்டுமாய் மொழிவாரியாக சூட்டி அழைக்க வேண்டியதுதான். முதல் முறையாக திரு.வி.க அவர்கள் காந்திஜியை அப்படி அழைத்து ஏற்படுத்திய மரபு இப்படிப் போகும்னு யாரும் நினைக்கலை! ஏன், நாம் மட்டும் தேசத்தோடு என்றுமே யாரோடும் ஒட்டாமல் இருக்கிறோம்? 'தமிழன்டா' என்ற பதில்தான் வரும்.

சனி, 6 மே, 2017

பூரி ஜெகன்னாதர்

பூரி ஜெகன்னாதர் கோயிலின் எட்டு அற்புதங்கள்...
1. கோயிலின் கொடி காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் பறக்கும்.
2. கோயில் இருக்கும் பூரி என்ற ஊரின் எந்த இடத்தில்,எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும் கோயிலின் உச்சியில் இருக்கும் சுதர்சன சக்கரம் நம்மை பார்ப்பது போலவே இருக்கும் .
3. பொதுவாக காலையிலிருந்து மாலை வரையான நேரங்களில் காற்று கடலில் இருந்து நிலத்தை நோக்கியும் மாலை முதல் இரவு முழுவதும் நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசும்,ஆனால்
பூரியில் இதற்க்கு நேர் எதிராக நடக்கும்.
4. இக்கோயிலின் முக்கிய கோபுரத்தின் நிழல் பகலில் எந்த நேரத்திலும் கண்களுக்கு தெரிவதில்லை.
5. இந்த கோயிலின் மேல் விமானங்களோ அல்லது பறவைகளோ மறப்பதில்லை .
6. இந்த கோயிலின் உள்ளே சமைக்கப்படும் உணவின் அளவு வருடத்தின் அனைத்து நாட்களிலும் ஒரே அளவாகவே இருக்கும். ஆனால் வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சமானாலும் சரி இருபது லட்சமானாலும் சரி சமைக்கப்பட்ட உணவு பத்தாமல் போனதும் இல்லை. மீந்து போய் வீணானதும் இல்லை.
7. இந்த கோயிலின் சமையலறையில் ஒன்றன் மேல் ஒன்றாக ஏழு பாத்திரங்கள் அடுக்கப்பட்டு விறகு அடுப்பில் உணவு சமைப்பார்கள் அப்படி சமைக்கும்போது அடியில் உள்ள பானையில் உணவு வேகும் முன் மேலே உச்சியில் உள்ள முதல் பானையில் உணவு வெந்து விடும் அதிசயம்.
8. சிங்கத் துவாராவின் முதல் படியில் கோயிலின் உட்பறமாக காலெடுத்து வைத்து நுழையும் போது கடலில் இருந்து வரும் எந்த விதமான சப்தமும் நமக்கு கேட்காது .
ஆனால் ...
அதே சிங்கத்துவராவின் முதல் படியில் கோயிலின் வெளிப்புறமாக நுழையும் போது கடலில் இருந்து வரும் அனைத்து சப்தமும் நமக்கு கேட்கும் . இதை மாலை நேரங்களில் தெளிவாக உணர முடியும்.
No automatic alt text available. 
போகர் அருளிய ஜெனன சாகரம் நூலில், தன் முந்தய அவதாரங்களை விளக்கிக்கொண்டு வரும்போது, தானே கிருஷ்ணா வடிவாகி, பூரி ஜகன்னாதனாக உருவெடுத்ததை விவரிக்கிறார். ரிஷி விசுவாமித்ரரின் சாபத்தால் அங்கே தான் மரமாகி விட்டதாகவும். அதன் பொருட்டு இன்றும் அங்கே மூலவர் சிலை மரத்தால் தான் செய்யப்படுகிறது. கற்சிலை இல்லை. 'ஜகன்நாதம் உற்பவம் கூறல்' என்ற தலைப்பின் கீழ் வரும் போகருடைய பாடல் இங்கே:

வடுக செந்தூர் வேலாரே!

திருப்போரூர் கந்தசாமி கோயில். இது சென்னையிலிருந்து 45 கிமீ தொலைவில் உள்ளது.

இத்தலத்தில் அகத்தியர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், வள்ளலார் முதலானோர் வந்து முருகனை வழிபட்டுள்ளனர். சூரபத்மனை மூன்று இடங்களில் நின்று போரிட்டான். திருபோரூர் - விண், திருபரங்குன்றம்-நிலம், திருச்செந்தூர்-கடல். அழித்த பின்னர் தோஷம் நீங்குவதற்கு முருகன்  இங்கு வீற்றிருக்கும் சிவ பெருமானை வணங்கியதாகவும் வரலாறு சொல்கிறது. இது சுயம்பு கந்தசாமி. யத் தளத்தை 'சமராபுரி' என்று கந்தசஷ்டி கவசத்தில் பாலதேவராய சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார்.  இங்கு சிதம்பர சுவாமிகளின் சமாதி உள்ளது.

முருகன் சில ஆண்டுகளுக்கு முன் என் கனவில் 'வடுக செந்தூர் வேலாரே' என்று ஒரு பாடலின் ஈற்றடியை காண்பித்தான். அதுவரை அது திருப்போரூர் என்று எனக்குத் தெரியாது. பின்னர்தான் முகத்தில் வடுவுள்ள முருகன் கோயில் எது என தெரிந்துண்டேன். அங்கு தரிசிக்கப் போனபோது அங்கு கோயில் அர்ச்சகரை கேட்டறிந்தேன்.


வெள்ளி, 5 மே, 2017

விண்ணை நோக்கி...

எங்கள் வீட்டு மாடியிலிருந்து நானும் பார்த்தேன்.
அதிவேகமாய் சீறிப்பாய்ந்து தடம் பதித்தது ஜெட் விமானமா, ஏவுகணை சோதனையா என்று ஒரு கணம் நினைத்தேன். ஆனால் சற்றுமுன் வானில் ஐந்து மணியளவில் அதிவேகமாய் பறந்து என் பார்வையை விட்டு மறைந்தது GSLV ராக்கெட். அது GSAT-9 தெற்காசிய SAARC செயற்கைக்கோளை விண்ணில் ஏவிட பறந்தபோது படம் எடுத்தேன்.

Image may contain: sky and cloud