மூத்த சித்தர் (கமலர்) காலாங்கியின் அழைப்பின் பேரில் போகர்
சீனம் சென்று அஷ்ட சித்திகளை மேற்கொண்டு உலகம் முழுதும் பயணித்தும் பல காலங்கள்
தங்கியும் தன் பணிகளை மேற்கொண்டார் என்பதை கடந்தபோன பதிவுகளில் விரிவாகக்கண்டோம்.
அங்கு அவர் கூடுவிட்டு கூடுபாய்ந்து ஒரு முதியவ் உடலில் பிரவேசித்தார். திடீரென்று
தத்துவம் பேசும் ஒரு முதியவர் யாரென அங்குள்ளோர், அறியாததால் அவரை ‘மூதறிஞர்’
(Laotsu லாவோட்சு) என்று அழைத்தனர். கூடுவிட்டு கூடுபாய்ந்த வேற்று தேகத்தோடு அவர்
அங்கு இருந்ததை “பரங்கியர் தேசத்தில் பன்னீராயிரம்
வருடங்கள் இருந்தேனே” என்று கூறியுள்ளார். ஆனால் கூடுவிட்டு பாய்ந்த ரகசியத்தை அவர் எங்கும்
நூலில் வெளிப்படுத்தியதில்லை. சீன
வரலாற்றின்படி லாவோட்சு பதிமூன்று பிறவிகள் எடுத்தார் என்றும், ஒவ்வொரு பிறவியும்
சுமார் 900 முதல் 1000 வருடங்கள் வரை நீடித்ததாகவும் அறியப்படுகிறது.
அதன்படி பார்த்தால் வேற்று தேசமாம் சீனத்தில் பன்னிரண்டாயிரம்
வருடங்கள் வாழ்ந்ததை உறுதி செய்கிறார். ஆனால் இப்படி திடீரென அந்த மூப்பு எய்தும் உடலுக்குள்
பாய்ந்து சக்தி சக்கரங்களை இயக்கி குண்டலினி தட்டி எழுப்பி சச்சிதானந்தத்தில்
லயித்தார். அதனால் தனக்குத்தானே ‘போயாங்’ என்று பெயர் சூட்டிக்கொண்டார். திடீரென தோன்றியவரை
(போகரை) அங்கு பெரிதும் மதித்தனர், லாவோட்சு என்று அழைத்தனர். ஒருபுறம் போகர் ஏழாயிரம்
பன்னீராயிரம், ஜெனன சாகரம், கற்பம், என்று பல்வேறு நூல்களை இயற்றினார். இன்னொரு
பக்கம், ‘டேங்’ Tang பேரரசில் ஆவணங்கள் காப்பாளராக பதவி வகித்தும், பல ரசவாத வைத்திய
முறைகளையும் இயற்றினார். அவர் காலத்தில் பாதரச உபயோகம் அதிக அளவில் இருந்தது.
ஆட்சியின் போக்கு பிடிக்காததால், சுமார் கிமு.5 ல் அவர் சீனம் விட்டு வெளியேறி
சீனப்பெருஞ்சுவர் கடந்து மேருமலை நோக்கி பயணித்தார். அங்கு கோட்டை வாயில்காப்பாளர்
கேட்டுக்கொண்டபடி இவர் Tao-te ching என்ற 81 தத்துவங்கள் கொண்ட திருக்குறளை
சீனமொழியில் வழங்கினார். இதன் பொருள் ‘மார்க்கமும் சக்தியும்’. சீனாவில் Taoism
தாவோயிசம் என்ற சமயத்தை நிறுவினார். அதாவது, யின்-யான் என்ற இருவஸ்துக்களான சிவ-சக்தி
சுழற்சி தத்துவத்தை இதன் வடிவமாக்கினார்.
அவருக்கு குருவாக இருந்தவர் குவாங்கி (எ) குங்ஃபூசு.
இவருடைய பெயரைத்தான் கன்பூசியஸ் (Confucius) என்று மேற்கத்திய மக்கள் அழைத்துள்ளனர். சீனாவில் இன்றும் கன்பூசியஸ்- லாவோட்சு கோயில்கள்
நிலைத்துள்ளது. சீனாவில்
போகர் இருந்த போது போயாங் என்ற பெயரை சூட்டிக்கொண்டத்தை
பின்னர் அகஸ்தியர் “பூமிதனில் கணநேரம் தங்கா பாலகா, பரங்கியர்தேசத்தில் போகர் என பெயர்க்
கொண்டாயே” என்று பாராட்டும்போது இதை கோடிட்டுக்
காட்டியுள்ளார். பிற்காலத்தில்
கிபி.2ல் போகர்-அகத்தியரின் சீடரான மகாவதார் பாபாஜி, "தன் குரு போகர் தான்
லாவோட்சு" என்று உறுதி செய்தார். சீன வரலாற்றையும், போகர் ச்பத்காண்டத்தையும் ஒப்பிடும்போது லாவோட்சுவின் குரு கன்பூசியசின் வாழ்க்கையும்,
போகரின் குரு காலங்கியின் வாழ்க்கையும் ஒத்துப்போகிறது. ‘அதிசய சித்தர் போகர்’ மற்றும் ‘போகர்
7௦௦௦: சப்தகாண்டம் ஒரு பார்வை” என்ற என் விளக்கவுரை நூல்களில் முன்கதைச் சுருக்கமாக இதைச் சொல்லியுள்ளேன்.
இனி, போகர் (எ) லாவோட்சு இயற்றிய தாவோதேஜிங் நூலின் குறள் பாடல்களை இங்கே காண்போம்.
- எஸ்.சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக