"நான் வீரபோகராக வரும் காலத்தில் பாவிகளையும் தர்மநெறி தவறியவர்களையும் தண்டிப்பேன். துர்முகி ஆண்டு கார்த்திகை மாதம் சுத்த தசமி நாள் முதல் இனி நிறைய பிரளயங்கள் நிகழ்த்துவேன்.. பூமியில் பேரிடர்களை ஏற்படுத்துவேன். எரிமலை சீற்றம் அதிகரிக்கும், பாதாள கங்கை நதி வற்றிப்போகும். ."
இதை கண்கூடாகப் பார்க்கிறோம். கடந்த டிசம்பர் மாதம் பெரும் சூறாவளி உலுக்கியது... பிறகு கடல் முழுதும் எண்ணெய் கொட்டி கடல்வாழ் உயிரனங்கள் அழிந்தும், நிலத்தடி நீரும் மாசுபட்டது... இப்போது அந்தமான் பகுதியில் நேற்று எரிமலை வெடித்து செந்நிற குழம்பை கக்கத் துவங்கியுள்ளது... போன வாரம் இந்தோனேசிய சுமத்ரா தீவிலும் எர்மலை வெடித்து கக்கி வருகிறது... இதன் சீற்றம் அடங்கும் போது, அடுத்த பிரளயம் வரும் ஏவிளம்பி புத்தண்டுக்குபின் வரத் தயாராகவுள்ளது... ஈசனின் கடுங்கோபத்திற்கு தகிஷண பகுதி ஆட்படும் என்ற நல்ல செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது.
மாலும்-முருகனுமான அந்த மகாசித்தர்தான் போகர், தன் சக்திகளை காட்டுகிறார். அவர் இன்னும் ஏனைய சித்தர்களையும் மகான்களையும் தர்மநெறியை நாட்ட வழிவகுக்கிறார். 2017 ஆண்டு முதல் சித்தர்களின் கட்டுப்பாட்டில் இப்பிரபஞ்சமே வருகிறது. கலியுகத்தில் அரசியல் மாற்றங்கள், யுத்தங்கள், அழிவுகள், எல்லாமே இவர்கள் கட்டுப்பாட்டில் நடக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக