போகர் சப்தகாண்டத்தில், சீனாவில் ஒரு மலை ஓரமாக வளமிக்க நதியோர நிலமும் அங்கு குகைப்பற்றியும், வானூர்தி வந்துபோகும் தளம்பற்றி சொல்லியுள்ளார். அவர் அடிக்கடி எங்கு வேண்டுமாயின் ஆகாய வான் ரதத்திலோ, வாயில் குளிகை வைத்துக்கொண்டோ சப்த சாகரங்களையும் பறந்துவந்து பார்வையிட்டார். பல சமயங்கள் அந்த சீன மக்களை வான்ரதாத்தில் ஏற்றிக் கொண்டு அண்டமே கிடுகிடுக்க நீராவி அழுத்தம் வெளிப்பட சப்தம் எழுப்பிக்கொண்டு உலக சுற்றுலா போய்வந்தார் என்பது உங்களுக்கு ஆச்சரியத்தையும் சிரிப்பையும் வரவழைக்கும். ஆனால் இதுதான் உண்மை. அவர் இஷ்டப்பட்ட இடங்களில் விமானதளமாகிக் கொண்டார். பிரத்தியேகமாக தளம் ஏதும் வைக்கலை.
ஆனால், அவர் காலத்திலேயே வேற்றுகிரக வாசிகளும் இந்த முன்னேறிய தொழில் நுட்பம் வைத்திருந்ததும் அவர் பாடல் வாயிலாக புலப்படுகிறது. ஐந்தாம் காண்டத்தில் " பாலமுடன் சீனபதி கடலோரத்தில் பண்பான மலையொன்று குகைதானுண்டு; வானோர் முதல் வந்திறங்கும் வளமான மண்டபம் குகையும் அங்கொன்றுண்டு" என்று சொல்லியுள்ளார். சித்த ரிஷிகளை விட்டால், இலங்கையில் ராவணன்-குபேரன் செலுத்தியது போக, விமானம் செலுத்தியவர்கள் வேறு யார்? 'வானோர்' (எ) Aliens அப்போதே முன்னேறிய தொழில்நுட்பம் பெற்றிருந்தார்கள் போலும்.
நான் செய்த ஆய்வில், அது சீன-திபெத் எல்லையோரம் பயங்க்ரா-யுலா மலைப்பகுதி என்று அறிந்து கொண்டேன். பிரம்மபுத்ராவின் வளமான பகுதியில் நூற்றுகணக்கான கற்பலகைகளும், வட்டவடிவ தட்டுகளும் கண்டெடுக்க ப்பட்டது என்றும்; அதில் அதிக அதிர்வுகளை தாங்கவல்ல கோபால்ட் உலோக பூச்சு இருந்ததாகவும்; அதை ஆராய்ச்சி செய்த சீன-ரஷ்ய ஆராய்ச்சியாளர், அந்த பலகைகளில் இருந்த கல்வெட்டில், "சுமார் 12000 வருடங்களுக்கு முன், விண்வெளியிலிருந்து பலர் வந்து இறங்கியதும், மீண்டும் கிளம்பிட வானூர்திக்கு சக்தி இல்லாமல் போனதாக அறியப்படுகிறது" என்றனர். அது விமானமா, பறக்கும் தட்டா, வான் ரதமா என்று எனக்கு தெரியவில்லை.. ஆக, போகர் சொன்ன அந்த இடம்தான் வேற்று மனிதர்கள் வந்திறங்கிய தளம்.
"சித்தர்களின் அறிவியல் பங்களிப்பு" Rs.70 (Vijaya pathippagam, Coimbatore) என்ற என் நூலிலிருந்து ஒரு சிறு பகுதியை மேலே படித்தீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக