About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 29 ஜனவரி, 2018

பல்லவனின் காஞ்சி

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டை மண்டலத்தில் வரும் தொண்டைமான் இளந்திரையன் காஞ்சி நகரத்தை ஆண்டதை பரிபாடல், மணிமேகலை மூலம் அரிய முடிகின்றது. அவர்களது தலைநகரான காஞ்சி ஒரு கல்வி நகரமாகும். காஞ்சிக் கடிகை மிகவும் சிறப்பு வாய்ந்த கல்விக் கூடமாகும். இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தும் அயல்நாடுகளிலிருந்தும் மாணவர்கள் காஞ்சி கடிகைக்கு வந்து கல்வி பயின்றனர். 'நகரேஷு காஞ்சி' என்பார்கள்.
விஷ்ணுகோபன், சிம்மவிஷ்ணு இவர்களுக்குப்பின் மகேந்திர வர்மன், நரசிம்மவர்மன் காலத்தில் பல போர்களும், அரசியல் வியூகங்களும், கல்விச் சாலைகள் விரிவு படுத்துவதும், கலைகளை வளர்ப்பதும் நடந்தது. காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு இவர்கள் ஆட்சி செய்தார்கள். விஷ்ணுகோபன்வரை ஆட்சிமொழி சமஸ்கிருதம், அதன்பின் சிம்மவிஷ்ணு காலம்முதல் தமிழ்தான் ஆட்மொழியாக இருந்ததாம். இருந்தாலும் சிம்மவிஷ்ணுவின் மகன் மகேந்திரவர்மன்-1 இரண்டு மொழிகளிலுமே நூல்கள் இயற்றினான் என்பது வரலாறு. இவனுடைய மகன் நரசிம்மவர்மன்-1 க்கு மாமல்லன், ஸ்ரீபரன், வாதாபி கொண்டான் என்று பல பட்டப்பெர்யர்கள். எட்டாம் நூற்றாண்டில் இவன் மகன் நரசிம்மன்-2 கைலாசநாதர் கோயில் மற்றும் வைகுந்த பெருமாள் ஆலயத்தையும் எழுப்பினான். அதன்பின் மகன் நந்திவர்மநும் கட்டினான்.
முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் வந்து தங்கி குறிப்பெடுத்த் சீன பயணி யுவான் சுவாங் காஞ்சியை உயர்வாகச் சொல்லியுள்ளார். 6 மெயில் சுற்றளவு இருந்ததாம். பல்லவர்களின் சின்னம் நந்தி. இந்த மகேந்திரவர்மன்-1 திடீரென சமணம் தழுவினான். அதன்பின் அப்பர் (எ) திருநாவுக்கரசர்தான் சைவ சமயத்திற்கு மாற்றினார். அக்காலத்தில் சைவம் வைணவம் பௌத்த விகாரமும் இருந்ததாம். புத்தர் வந்து தங்கிய இடமாதலால் ஆயிரக் கணக்கில் புத்த பிக்குகள் குழுமி இருந்தனர் என்று பயணக் குறிப்பில் உள்ளது.
இதன்பிற்பாடு சீனர்களின் வருகளை பெரியதாகியதால், சீன மன்னனும் இரண்டாம் நரசிம்ம வர்மா பல்லவனும் (700-728) வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். சீன மன்னன் வேண்டியதற்கு இணங்க இரண்டாம் நரசிம்ம வர்ம பல்லவன் நாகபட்டினத்தில் முதல் கோபுரத்தை கட்டினான். எனவே இக்கோபுரம் புதுவெளி கோபுரம், சீன பகோடா, மல்லன் கோபுரம் என்று அழைக்கப்பட்டது. அதன்பிற்பாடு சோழர் காலத்தில் சீனர்கள் வந்துபோவதும், ராஜேந்திரன் காலத்தில் இன்னொரு கோபுரம் கட்டியதையும் ஆனைமங்கலம் செப்பேடு சொல்கிறது. செப்பேட்டில் தமிழும்-சமஸ்கிருதமும் கலந்துள்ளது. இந்த விஹாரம் பற்றி நேற்றைய பதிவில் பார்த்தோம்.
ஆனால் மூன்றாம் நூற்றாண்டில் அசோகர் இலங்கைக்கு போகும்முன் அங்கே ஏழு விஹாரங்கள் கட்டச் சொன்னதாகவும் உள்ளது. (பொன்னியின் செல்வன் கதையிலும் இதுபற்றி நாம் படித்துள்ளோம்.)
பல்லவர்கள் ECR அருகே குகைக்கோயில்களையும், அங்கு துறைமுகம் அமைத்து, இலங்கை மற்றும் தூர கிழக்கு நாட்டுடன் வணிகம் செய்ய போக்குவரத்து வைத்துகொள்ள எப்படி முடிந்தது? அதற்கு பாலாறு தான் காரணம் என்கிறார்கள் வரலாற்று நிபுணர்கள். படத்தில் பார்த்தால், பாலாறு காஞ்சியைத் தொட்டுக்கொண்டு போய் அப்படியே செங்கல்பட்தைத் தாண்டி கடலில் சென்று கலக்கிறது. இந்த மார்க்கம்தான் பல்லவர்களுக்கு மிக அனுகூலமாக இருந்துள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக