About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

செவ்வாய், 2 ஜனவரி, 2018

மந்திரத்தால் மாங்காய் விழும்

என்னுடைய பதிப்பாளரின் தகப்பனார் உயர்திரு இராமையா அவர்கள் பல்லாண்டுகளாக தேவாரம் பாடுபவர். தொண்ணூறு வயதுக்கான உடல் பலகீனம் இருந்தாலும், பக்தி நெறி தவறாதவர். நான் பதிப்பாளரின் கடைக்குப் போகும்போதெல்லாம் இவர் அங்கு இருப்பார். நிறைய விஷயங்களைப் பேசுவோம்.
ஒருமுறை தன் அண்டைவீட்டு மாமர கிளையில் பழுத்த மாம்பழம் ஒன்று இவர் வீட்டுக்கு மேலே தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டார். இவருக்கு அதை சுவைக்க வேண்டும்போல் ஆசை வந்தது. உடனே ஒரு தேவாரம் பாடினார். பத்து வினாடிக்குள் தொப் என்று மாங்காய் தன் கைமேல் விழுந்தது.
தன் நீண்டநாள் நண்பர் ஒருவரை சந்தித்து வெகு காலம் ஆனது. இப்போது அவர் எங்கிருக்கிறாரோ என்னவோ என்று அன்று முழுக்க அவர் நினைவாகவே இருந்துள்ளார். அவரைக் காண மாட்டோமா என்ற ஏக்கம் மேலெழுந்தது. அவர் வாய்விட்டு ஒரு தேவாரப் பதிகம் பாடினார். அன்று மதியம் அந்த முதிய நண்பர் எங்கோ போகும் நிமித்தமாக மகனுடன் வரும்போது இங்கே ஐயாவை பார்த்துவிட்டுப் போனார்.
மறைக்காடு கோயிலில் அப்பரும் சம்பந்தரும் தாளிட்டுக்கிடந்த கதவை பதிகம் பாடி திறந்ததையும் மூடவைத்ததையும் நாம் படித்துள்ளோம். அதைப்போல் ஆத்மசுத்தியுடன் பதிகம் பாடி மாங்காய் விழ வைக்கலாம் என்பதை என்னிடம் சொல்லி உணர்த்தினார். இந்த காலத்து புள்ளைங்க பகுத்தறிவு பேசுறவங்க, மொழிகளை கிண்டல் செய்யறவங்க. அவங்களை நம்மால திருத்த முடியாட்டி அந்த சிவபெருமான்தான் திருத்தணும் என்று ஆதங்கத்துடன் சொன்னார்.

கற்பகம் புத்தகாலயம் அலுவலகம் காலையில் திறந்ததும் அங்கே ஐயாவின் குரல் பதவில் தேவாரப் பதிகங்கள் ஒலித்துக்கொண்டிருக்கும். தான் பாடியதை கேட்டுக்கொண்டே பணி செய்வார். இது அவருக்குக் கிடைத்த பேறு!


1 கருத்து:

  1. I wish I could also bring rain, get mangoes from trees, and get all good things done out of true love for god. Please share the details of this person. Let me get some tips to improve myself.

    பதிலளிநீக்கு