நாகபட்டினத்தில் சுமார் பத்து நூற்றாண்டுகளுக்கு முன் எழுப்பட்ட புத்த விஹாரங்கள் இருந்துள்ளது. சூடாமணி விஹாரம் புதுவெளிப்பளையம் பகுதியில் இருந்ததற்கான தடயமும் இருந்துள்ளது. நீங்கள் படத்தில் பார்க்கும் அடுக்கு மாடி விஹாரம் ‘சீனா கோபுரம்’ Chinese Pagoda 1867ல் இடிக்கப்பட்டது என்ற குறிப்புகள் உள்ளன. இராஜேந்திர சோழன் காலத்தில் புத்தமதம் கடலோர தமிழ்நாட்டில் பரவலாக இருந்தது.
ஜப்பானிலுள்ள ராக்ஃபெல்லர் அருங்காட்சியகத்தில் புத்த வெண்கல சிலை இருந்தது. அதன் கமல பீடத்தில் தமிழ் எழுத்துக்கள் வடிக்கபட்டிருந்தது. "இராஜேந்திர பெரும்பள்ளி ஆக்கசைப் பெரும்பள்ளி ஆழ்வார் கோயிலுக்குத திருவாவுட்சவம் எழுந்தருள ஆழ்வார் இவ்வாள்வரை எழுந்தரளவிட்டார் சிறுதாவூர் நலன் குணக்கர உடையார்... ஸ்வஸ்திஸ்ரீ பதினெண் விஷயத்துக்கும் ஆக்கசாலைகள் நாயகர்" என்று இருந்துள்ளது. 'பதினெண் விஷயம்' என்பது ஆக்கசாலை என்னும் தங்கம்/வெள்ளி காசுகள் அச்சடிக்கும் நாணயச்சாலை உள்ளது. இங்கே நாயகர் என்பது புத்தரைக் குறிக்கும். ராஜராஜன் காலத்திலேயே இதற்கு இசைவு பெறப்பட்டது என்றும் ராஜேந்திரன் காலத்தில் முடிந்தது என்றும் தெரிகிறது.
200 ஆண்டுகளுக்கு முன் கிறித்துவ மிஷனரிகள் வந்தபோது இது இடிக்கப்பட்டது. அப்போது முன்னூறுக்கும் மேற்பட்ட புத்தர் சிலைகள் 1865 முதல் 1930 வரை அங்கு கண்டெடுத்தனர். நாகபட்டினத்தில் இரண்டு விஹாரங்கள் இருந்துள்ளது தெரிகிறது. ஸ்ரீவிஜயம் சுமத்ராவின் மன்னன் மகரத்வஜ சூடாமணி வர்மன் இங்கு ராஜேந்திர சோழனிடம் விஹாரம் கட்ட அனுமதி பெற்று இதை நாகபட்டின கடலோர துறைமுக பகுதியில் எழுப்பினான் என்பதை ஆனைமங்கலம் செப்பேடுகள் உறுதி செய்கிறது. ஆனைமங்கலம் கிராமத்தை அந்த விஹாரத்திற்கே தானம் தந்தற்கு சாசனம் எழுதிவைத்தான். இதுபறிய குறிப்புகள் பர்மாவிலுள்ள அருங்காட்சியக செப்பேடிலும் உள்ளதாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக