About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 29 ஜனவரி, 2018

சர்வதேச வணிகச் சந்தை

மதுரைக்காஞ்சி நூலில் நகரத்தின் அல்லங்காடி நாளங்காடி சந்தைகளில் என்னவெல்லாம் விற்றது என்று மதுரையின் வளத்தினைக் கூறுகிறது. ஏலம், கிராம்பு மிளகு வகைகள், சங்கு வளையல்கள், கற்பூரம், தங்கம், செப்புப் பாத்திரங்கள்,  உப்பு, புலி, எண்ணெய், பட்டாடைகள், சந்தனக் கட்டைகள், வாசனாதி திரவியங்கள் என்று கணக்கில் அடங்கா. அக்கம்பக்கத்து ஊர்களிலிருந்து மாட்டு வண்டியில் சந்தைக்கு வரும் வணிகர்களுக்கு பாதுகாப்பும் தந்தார்களாம். கொற்கை துறைமுகம் ஓய்வின்றி இயங்கியது.

பட்டினப்பாலை நூலில் இன்னும் சுவையான கட்சிகள் உள்ளது. சோழர் காலத்தில் கடல்வழி வணிகமும் உச்சத்தில் போனது. பண்டங்கள் எல்லாமே அளவின்றி சரக்கு மூட்டை குவியல்களாக பூம்புகார் துறைமுகத்தில்  சுங்கச்சாலையில் அடுக்கி வைக்கப்பட்டுக் கிடந்ததாம். சுங்க அதிகாரிகள் ஒவ்வொன்றின் மீதும் புலிச் சின்னம் பொருத்தி, கப்பலில் ஏற்றிப்போட்டுக்கொண்டே இருந்தார்களாம். முத்து, பவளம், வளமுறி சங்குகள், புளி, பிசின், உயர்ஜாதி குதிரைகள், மீன், மிளகு இலவங்கம் வைரக்கற்கள், என பலதும் ரொக்கமாகவும், பண்டமாற்றுக்கும் வாங்கிக்கொண்டார்களாம். சர்வதேச வணிகர்கள் அங்கே துறை முகத்தில் குழுமியபடியால் பல மொழிகள் பேசப்பட்டது. தென்கிழக்கு ஆசிய நாடுகளிருந்து வியாபார சரக்குக் கப்பல்கள் நேரடியாக முகத்துவாரம் அருகே வந்து நிற்கும் வசதியும் இருந்துள்ளது.

மதுரையில் தமிழ் பிராமி கல்வெட்டுகளில் அவ்வூர் மக்களின் தொழில்கள் பற்றி விரிவாக உள்ளது. ரதக்காரர், பொற்கொல்லர், நெசவாளர், கொப்பரை காரர், கருமார், உப்புவணிகர், கள் இறக்குபவர், தையல்காரர், குயவர், தச்சர், என்று இன்னும் பட்டியல் நீண்டுகொண்டு போகிறது. இதுபோக பிராமணர்களில் சில பிரிவுகளும் சொல்லப்பட்டுள்ளது. வேதம் ஓதி வேள்விகள் செய்வோர், அரசகுல ஆலோசனைப் பணிகள் மட்டும் செய்வோர், வேள்விகள் செய்யாமல் சங்கு அறுத்து வளையல் செய்வோர் என்ற குறிப்புள்ளது. சங்கப் புலவர் நக்கீரர் இப்பிரிவைச் சேர்ந்தவர். 'சங்கறுப்பது எங்கள் குலம் சங்கரனார்க்கு ஏது குலம்?' என்பது பிரசித்தமான வாக்கியம். ஒவ்வொரு குலத்தினர்க்கும் தனிததனி சேரி இருந்துள்ளதும் தெரிகிறது. ஆனால் எல்லோரும் சமூக கட்டமைப்பில் சார்ந்து வாழ்ந்தனர். பரங்குன்றம் முதல் யானைமலை வரை சமணர்கள் குடவரைக் கோயில்களை பயன்படுத்தினர். வணிகம் மிக அதிகமாகப் போனதால் ரோமாபுரி நாணயங்களை மதுரையிலேயே அச்சிட்டு வெளியிட்டனர் என்பது பொருளாதார உயர்வையும், அரசியல் நட்பையும் காட்டுகிறது.  இது ரொம்ப நல்லா இருக்கே!

ஒரு நாட்டைவிட்டு வேறொரு நாட்டுக்கு இடம்பெயர்ந்தால் சோதனை சாவடியில் உள்ளூர் நாணயத்தில் துளை (punch mark) அடித்தனர். மூன்றாம் நூற்றாண்டுவரை தமிழ் பிராமி இலக்கிய நூல்கள் முன்னேறிய கட்டமைப்போடு இருந்ததாம். இவற்றை எல்லாம் ஆழமாக திரு.நாகசாமியும், திரு. ஐராவதம் மகாதேவனும் படித்து பட்டியலிட்டு ஆவணபடுத்தியுள்ளனர். தமிழ் மற்றும் இலங்கை பிராமி எழுத்துகளில் ஒற்றுமை இருப்பதும் தெரிகிறது. பாநிட்யன் மதுரையில் உள்ள பிராமி எழுத்தும், குஜராத்தில் கிடைத்த பிராமி வெட்டுகளுக்கும் நிறைய ஒற்றுமை உள்ளதை கண்டுபிடித்தனர். பிந்தைய நூற்றாண்டுகளில் எழுத்துகள் மாறியது. பின்னாளில் இந்த கல்வெட்டுகள் எகிப்து, ரோம் போன்ற நாடுகளின் சில குகைப் பகுதிகளில் இருந்தது பதிவாகியுள்ளது.

Image may contain: text

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக