About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 28 ஜனவரி, 2018

சங்ககால முருகன் கோயில்

மகாபலிபுரம் அடுத்துள்ள ஒரு ஊர்தான் சாளுவான் குப்பம். சங்ககாலத்தில் புகழ் பெற்றிருந்த நீர்ப்பெய்யாறு எனும் துறைமுகம் பற்றி பெரும்பாணாற்றுப்படையில் குறிப்புகள் உள்ளன. அத்துறைமுகம் இப்பகுதியில் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இலக்கியத்தில் இந்த இடம் 'திருவீழ்ச்சில்' எனும் பெயரால் சோழர் காலத்தில் வழங்கப்பட்டிருப்பதும், இங்கு பிரசித்திப் பெற்ற சுப்ரமணியர் கோவில் ஒன்று வழிபாட்டில் இருந்துள்ளதும் பல பகுதிகளில் கிடைத்துள்ள கல்வெட்டு விபரங்களின்படி அறியப்படுகிறது. சென்றமுறை வந்த சுனாமியில் இந்த சங்ககாலக் கோயில் வெளியே தெரிந்தது. சோழர்கள் /பல்லவர்கள் கால கல்வெட்டுகளும் கிடைத்தது.

இராஜராஜ சோழனின் கல்வெட்டு ஒரு தூணில் கிடைத்துள்ளது. இராஜராஜர் ஆட்சிக்காலத்திலேயே இப்பகுதி முக்கியத்துவம் வாய்ந்தப் பகுதியாக இருந்திருக்க வேண்டும். மேலும் மூன்றாம் இராஜேந்திரன் கல்வெட்டும் கிடைத்துள்ளது. அப்படிஎன்றால் சோழர் காலம் முடியும் தருவாயில் இப்பகுதியை கடல்கொண்டதால், கோயில் புதைந்து போனது. பிற்பாடு 2004 சுனாமியில் இப்பகுதியை சுனாமி வெளிக்காட்டிவிட்டது.
அதில் பயன்படுத்திய செங்கற்கள் சங்ககால்த்தவை என்றும் தொல்லியல் கூறியுள்ளது. மூன்றாம் சங்கத்தில் சுனாமி வந்து மூடியிருக்கும். பிற்பாடு பல்லவர் காலத்தில் அதன்மீது கருங்கல் கட்டுமானம் எற்றியிருந்து அதுவும் பிற்பாடு வந்த கடல்கோளில் போயிருக்கும். இப்போது வந்த சுனாமி இதை திறந்து காட்டிவிட்டது.

இந்த படத்திலுள்ள தூணைப் போன்று இன்னும் ஏழு கல்வெட்டுகள் உள்ளது. சோழ, பல்லவ, ராஷ்ட்ரகூட்டம் மன்னர்கள் போக அந்த ஊரைச்சேர்ந்த கிழார்பிறையன் என்பவனும், வசந்தா என்ற பிராமணப் பெண்ணும் சுப்பிரமணியர் கோயிலுக்கு காணிக்கையாக 16 கழஞ்சு பொன் கொடுத்துள்ளனராம். மூலஸ்தானம் வடக்கு நோக்கி இருப்பதால் இது சிற்ப சாஸ்திர முறைப்படிதான் கட்டப்பட்டது. ஆகமங்கள் விதிப்படி இல்லை என்பதும், பெரிய அளவு செங்கற்கள் காவிரிபூம்பட்டினம் அரிக்கமேடு பகுதியில் கிடைத்த அதே அளவுக்கு உள்ளதும். இதன் வயது 1700- 2200 ஆண்டுகள் என்பதையும் கண்டுபிடித்தது. இது அக்காலத்து சுனாமியின் தாக்கமே என்கிறார் திரு.நாகசாமி. ஏனென்றால் கோயிலின் கிழக்குப் பகுதி அதிக சேதாரமாகியும், மேற்கு பகுதி அப்படியே உள்ளது என்றும் சொல்லியுள்ளார். மாமல்லபுரம் கல்பாக்கம் முன்பாக சதுரங்கபட்டினம் அன்றைக்கு ஒரு துறைமுகமாக விளங்கியிருக்கும். கோயிலின் நுழைவாயிலில் தூணில் குரவைக்கூத்து செதுக்கி இருந்தது. அப்படிஎன்றால் இது கிபி 1-3 நூற்றாண்டு என்பதில் ஐயமில்லை.

இருந்தபோதும், இதைப்பற்றி அதிகமாக சங்க இலக்கியத்தில் தெளிவான குறிப்புகள் இல்லாததால் இது பெரும்பாணாற்றுப்படையில் வரும் ஊர்தானா என்று சந்தேகம் இன்னும் உள்ளது என்கிறார் திரு.நாகசாமி. மூழ்கிப்போன ஏழு கோயில்களில் இதுவும் ஒன்றோ?

2006ல் நன் சென்றிருந்த சமயம் கடலோர குகைக்கோயில் முன்பாக இன்னும் பல கட்டுமானங்கள் கண்டுபிடித்திருந்தனர். இறங்கிப் பார்த்தேன். ஓரடி குழிக்குள்ளே நீர் பக்கவாட்டில் கிணற்று நீர்போல் இப்படியும் அப்படியுமாக ஆடிக்கொண்டிருந்தது. அதெப்படி? ஏதோ கடலலை அதை தள்ளுவதுபோல் இருந்தது.

என்னுடைய கருத்து:-
15ம் நூற்றாண்டு அருணகிரியார் காலத்தில் இந்தக் கோயில் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அதே ECR வழித் தடத்தில் உள்ள செய்யூர் ஸ்ரீகந்தசாமியை வழிபட்டவர், இந்த திருவீழ்ச்சில் சுப்ரமணியரைப் பற்றி பாடியிருக்க வேண்டுமே? ஆனால் அதைப்பற்றி எங்கேனும் பாடினாரா? அறிந்தவர் கூறவும்.
Image result for sangam era Murugan temple, mahabalipuram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக