About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

வாங்க மாத்துவோம்!

சென்னை சென்ட்ரல் இனி எம்ஜிஆர் ரயில் நிலையம் ஆனாலும் அது என்றென்றும் Chennai Central என்றுதான் அழைக்கப்படும். புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமசந்திரன் என்றெல்லாம் அழைக்க யாருக்கும் சத்தியமாகப் பொறுமை இல்லை. ஏற்கனவே மருத்துவ பல்கலைக் கழகமும்,  திரைப்பட கல்லூரியும் MGR பெயரில் உள்ளபோது புதிதாய் இது எதற்கோ? பெயரை மாற்றினால் போதுமா? நிலைய உள்கட்டுமான வடிவம் லன்டன் ரயில் நிலையத்தை ஒத்துள்ளது. அந்த விக்டோரியா காலத்து பாணியை இடித்துக் கட்டினால் தமிழ் கலாச்சாரம் வாழும். எம்ஜிஆரின் பெயர் வைத்தபின் இரட்டை இலை சின்னம் அங்கே இல்லாமல் போனால் தலைவர் மன்னிப்பாரா? அதையும் வைத்தால்தான் முழுமையாகும்.

திடீரென அரசியல் காரணங்களுக்காக இதன் பெயரை இவர்கள் மாற்றினால் மற்ற ரயில் நிலையங்களின் பெயர்களை நம் இஷ்டப்படி மாற்றி வைத்தால் ஆச்சு.

சென்னை கடற்கரை வள்ளலார்
சென்னை எழும்பூர் பெரியார்
மாம்பலம் காமராஜர்
தாம்பரம் கலைஞர்
ஆலந்தூர் ஜெயலலிதா
தேனாம்பேட்டை கக்கன்
சின்னமலை நன்னன்
திருவான்மியூர் ருக்மணிதேவி
திருவொற்றியூர் பட்டினத்தார்
திருநின்றவூர் பூசலார்
திருவல்லிக்கேணி உவேசா
ஷெனாய்நகர் பச்சையப்ப முதலியார்
கிரீன்வேஸ் சாலை மாபோசி
அசோக்நகர் ராமசாமி முதலியார்
நந்தனம் பசும்பொன் தேவர்
நடேசன்பார்க் கண்ணதாசன்
பனகல்பார்க் சௌந்தர பாண்டியன் ...

இப்படி நகரத்திலுள்ள (இனி வரவுள்ள நிலையங்களுக்கும்) பல ரயில் நிலையங்களின் பெயர்களை ஆன்மிகம் - அரசியல் - கல்வி -கலை சார்ந்ததாக மாற்றினால் மக்களுக்கும் அரசியலாளர்களுக்கும் பொழுது போகும்.

1 கருத்து:

  1. இன்றய சிந்தனைச் செய்தியாக இடம் பெற்றுள்ள பெயர் மாற்றம் குறித்த கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கதே.நான் வசிக்கும் ஊரில் சுமார் 20 வருடங்களுக்கு முன் பேருந்து நிறுத்தத்திற்கு அடையாளமாக வைக்கப்பட்ட இடம்(இன்று முற்றிலுமாக மாறிய நிலையிலும்) தொடர்கிறது.பேருந்து நடத்துனர்கள் வேறு பெயரினை பரிந்துரைப்பதில்லை.அதே தொடர்கிறது.பெயர்மாற்றம் பெரிய மாற்றத்தினை தராது.பதிலாக குழப்பத்தை மட்டுமே விளைவிக்கும்.

    பதிலளிநீக்கு