About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

சனி, 25 பிப்ரவரி, 2017

உடல்நலம் பேண தூய தமிழ் படியுங்கள்

உயர்வான திருப்புகழில் சரவணனே அருணகிரிநாதருக்கு எல்லாமாகவும் இருக்கிறார், ‘முத்தைத்தரு’ என்ற சொல்லை முருகன் உபதேசித்து, பின்னாளில் ‘வாக்குக்கோர் அருணகிரி’ என்று பெயரும் புகழும் நிலை பெறச் செய்தான். "முத்தை தரு பத்தி திரு நகை அத்திக்கு..." படித்தாலே நரம்பு மண்டலம் சக்தி சக்கரங்கள் வலுப்பெறும்.
சமீபகாலமாக தமிழ் உச்சரிப்பை வேண்டுமென்று மாற்றி உச்சரிப்பதாலும், பள்ளியில் பயிற்றுவித்தல் சரியில்லாது போவதாலும், மூளை மற்றும் நரம்பு மண்டல பாதிப்பு வரும். சொற்களின் உச்சரிப்பை மாற்றிச் சொல்லும்போது, ஏற்கனவே அணுவில் பதிவான சொற்களின் சப்தங்களின் phonetics மாறும் போது, மூளையில் சில சமச்சீரற்ற அதிர்வலைகள் நிகழ்கிறது. கடந்த ஏழு பிறவிகளில் நாம் பிறப்பெடுத்த போதேல்லாம் நாம் என்ன மொழிகள் பேசினோமோ அந்த சப்தங்கள் கேட்டலாகிட்டு பதிவாகி உள்ளது. இந்த சப்தப்பதிவு பற்றி பலர் அறிவதில்லை. அதனால்தான் 12 வயதுக்குள் அநேகமாக பன்மொழிகள் கற்பது எளிமையாகுது. ஏன் எதற்கு என்று நீட்டி முழக்காமல், "இளமையில் கல்" "வைகறைத் துயில் எழு" போன்ற விஞ்ஞான நுண் விஷயங்களை நறுக்கென சொன்னார் சித்தர் ஔவை.
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக் கிரிமத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வது மொருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாட
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
 குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே.

வாரியார் சுவாமி சொற்பொழிவில் முருகனின் தோற்றம் குறித்து சொல்வார். 'உலகம் தோன்றிய நாள்தொட்டுத் தாய் குழந்தைப் பெறுவாள், அப்பா பெயர் வைப்பார். ஆனால், அப்பா குழந்தை பெற்று அம்மா பெயர் வைப்பது ஒரு புரட்சி. ஓர் ஆண் பிள்ளை குழந்தை பெற்றான் என்ற சரித்திரம் கிடையாது. கைலாயத்தில் சிவபெருமான் தன்னுடைய நெற்றிக்கண்ணிலிருந்து முருகப் பெருமானை சிருஷ்டி செய்கின்றார். அருணகிரிநாதர் இதைத்தான் திருப்புகழில் 'முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும்' என்கிறார். அப்படி ஒன்றுமில்லை என்று மறுக்கும் பகுத்தறிவாளர்கள் உண்டு. வெறும் பகுத்தறிவு கொண்டு தமிழையும் முருகனையும் ஆராய முடியாது. ஐம்பூதத்தானான ஈசனின் வெளிப்பாடே முருகன்.

முருகன் வேறு சிவன்வேறு அல்ல என்று கந்தபுராணம் பாடுகின்றது. ஈசனின் ஆக்ஞேயத்தின் ஒளிப்பிழம்புதான் முருகபெருமான். அதனைத் தெளிவு படுத்தும் பாடல்: 

'அருவமும் உருவு மாகி 
அனாதியாய்ப் பலவாய் ஒன்றாய் 
பிரமமாய் நின்ற சோதிப் 
பிழம்பதோர் மேனி யாகிக் 
கருணைகூர் முகங்கள் ஆறும் 
கரங்கள் பன்னிரண்டும் கொண்டே 
ஒருதிரு முருகன் வந்துஆங்(கு) 

உதித்தனன் உலகம் உய்ய.'
தமிழ் அருளிய முருகனைப் போற்றும் காவியங்களான திருப்புகழ், கந்தர் அநுபூதி, கந்தர்சஷ்டி கவசம், ஷண்முக கவசம், குமாரஸ்தவம், போன்றவற்றை பாராயணம் செய்தாலே சாலச்சிறந்தது. சித்தர் போகர், தன் நூலில் அகஸ்தியரையும் மூலரையும் தமிழ்சாகரங்களாகவும்; பாம்பன் சுவாமிகள் அருணகிரியாரை தமிழ் மகுடமாகவும் வைத்து ஆராதித்தது தெரிகிறது. என் குருநாதர்களுக்குப் போற்றி!

பேய்பிசாசுகளும் மந்திரங்களும்

இன்றளவும் பேய்பிசாசுகள் உள்ளதா? செய்வினை சூனியம் போன்றவைகள் ஜோராக நடக்கிறதா? பலர் இதை நம்புகின்றனர்.. சிலர் நம்பமாட்டார்கள். ஆ..ஊ.. என்றால் மன அழுத்தம், உளவியல் பிரச்சனை என்று இக்கால மருத்துவர்கள் அடித்துச் சொல்லிடுவார்கள். அவையெல்லாம் உளவியல் சோதனையில் சரியாகுமா?
மனநோய்க்கும் பேய் பிடித்ததற்கும் பல தெளிவான வேறுபாடுகள் உள்ளன. அக்காலத்தில் 'மணி-மந்திரம்- மருத்துவம்' என்று வைத்தியர்கள் இதற்காக பிரயோகம் செய்தார்கள். இன்று மனநல மருத்துவர்கள் என்ன செய்வார்களோ? இதோடு பகுத்தறிவு வைத்தியமும் உண்டு.
அப்படிப்பார்த்தால் அகஸ்தியர், போகர், கோரக்கர், ஔவையார், அருணகிரிநாதர், பாம்பன் ஸ்வாமிகள்... அனைவரும் பேய் பிசாசுகள் அண்டாமல் இருக்க, செய்வினைகள் ஓடிட, பல உபாயங்களைப் பாடலில் சொல்லியுள்ளனர். இக்கால மருத்துவர்கள் இவர்களை எந்த பட்டியலில் சேர்ப்பார்கள்? இவர்களுக்கு mental disorders, obsessions, irrational moods, mystic behaviour, என்று காரணம் சொல்லிககாட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.. ஆண்டவா!

படத்தில் நான் போட்டுள்ள பாடல்களின் சுருக்கமான பொருள்.
“மாடனின் மந்திரத்தை ஓதினால் எப்பேர்பட்ட பேய், பிசாசுகளையும் விரட்டிடும். பிரணவத்தின் ஒலிகேட்டால் அவை ஓடும்.” - போகர்.
“ஒலியுடன் சப்தம் எழுப்பி துரத்தும் பேய் பிசாசு கணங்கள், என்னை அண்டாது இருக்க, கெட்டவர்கள் ஏவும் வலிமையான சூனியம் மந்திர தந்திரம் எல்லாம் என்னை வருத்திடாமல் இருக்க உன் வேல் காக்கட்டும்.” – பாம்பன் சுவாமிகள்.
மண்டபத்தில் படுத்திருந்த ஔவையாரைப் அச்சமூட்ட வந்த பெண் பேயைப் பார்த்து, “பெண் பேயே! வெண்பாவை இரண்டுமுறை கற்றாலும் அறியாத மூடன், ஓலையில் எழுதமுடியாத பேதையை எல்லோரும் நகைக்கும்படி பெற்றாளே அவளைப் போய் எற்றி உதை “ –ஔவையார்
பூத வேதாளங்களும் வணங்கி சாப விமோசனம் பெற்ற வேலனான, கூதள மாலையை அணிந்து வேடர்குல வள்ளியை மணந்த சேயூர் கந்தசாமியே, மிகவும் தீய குணமுடைய அடியேனை ஆட்கொண்டு அருளிய நின் கருணையே கருணை. - அருணகிரியார். 

(இங்கு அருணகிரிக்கு சேய் வடிவில் முருகன் காட்சி தந்தான். இங்கு  வணங்கினால், கிரக தோஷங்கள் நீங்கி. பேய் பிசாசம்  தீவினைகள் அண்டாது ஓடிவிடும். வரும் பங்குனி மாதம் இங்கு தேரோட்டம் நடக்கும்.தலத்திற்கு சென்று வணங்கி தீவினை அகலப் பெறுங்கள். கிழக்கு கடற்கரை சாலை மார்க்கத்தில் கல்பாக்கத்தை தாண்டி உள்ளது. அதுபோல், மேல்மருவத்தூரிலிருந்தும் சேயூர்  செல்லலாம்.)
“பஞ்சாக்ஷர் மந்திரம் சொல்லி, கோழி பன்றி ஆடு காவு கொடுத்த பின், அஇஅரிஓம் மந்திரத்தை நூறு முறை உருபோட்டு, காரிஈயம்-செப்பு-தங்கம் இதில் எதிலாவது இந்த மந்திரத்தை கீறி எழுதி, அதை தாயத்தாக கழுத்தில் அணிய, எப்பேர்பட்ட பிசாசு பிரம்மராட்சசனும் அணுகாது.” - அகஸ்தியர்
"ஓம் உம் லம்.... ஹரிங்கே’ என்ற மந்திரத்தை ஜெபித்து (படத்தில் சிவப்பு குறியீடுக்குள் காட்டியுள்ளேன்) உருவேற்றி, ஒரு செப்பு தகட்டில் முக்கோணம் வரைந்து, ஓங்காரத்தை முக்கோணத்தின் சுற்றுபுறமும் எழுதி, அதன் மையத்தில் வட்டம் போட்டு அதில் ‘அஉஇ’ என்று நாட்டி, மந்திரம் ஜெபிக்க, பேய் பில்லி சூனியங்கள் அண்டாது." - கோரக்கர்.
(இங்கு சொல்லப்பட்ட தகுடு தாயத்து தக்க உபாசகர் மூலமே செய்து அணிய வேண்டும்..இப்பதிவை கருத்து பரிமாற்றம் அளவில்தான் சொன்னேன்.)

தன்னடக்கம் மிகுந்த போகர்


'போகர் ஏழாயிரம்' நூல் இயற்றியதற்கு அருள்புரிந்த அத்தனை சித்த ரிஷிகளுக்கும்   சித்தர் போகர் சரணம் சொல்கிறார். அவர்கள்:
அகஸ்தியர், வரரிஷி, சிவவாக்கியர், நந்தீசர், ரோமரிஷி, மச்சமுனி, தன்வந்திரி, ராமரிஷி, கௌபாலர், சுந்தரானந்தர், தேரையர், பூதனானந்தா, புண்ணாக்கீசர், இடைக்காடர், டமரகானந்தர், தட்சணாயர், அகப்பேய் சித்தர், யாக்கோபு, குறும்பர், ஜோதிமுனி, ஊர்வசியாள், வியாசமுனி, கௌதமர், திருமூலர், காலாங்கி, பாம்பாட்டி, கடுவெளியார், கமலர், கைலாசமுனி, நவகண்டரிஷி, ஜமதக்னி, திரணாக்கியர், அசுவினி தேவர், புஜண்டமகரிஷி, சுகபிரம்மர், கும்பீசர், கருவூரார், கொங்கணர், ஜெயகண்டி, வாலையானந்தர், புலஸ்தியர், சுப்ரமணியர், காலதூதர், இப்படி நவகோடி ரிஷிகளுக்கும் , பதினெண் சித்தருக்கும், நாற்பத்தெட்டு முனிவருக்கும், சரணம் சொல்லியுள்ளார்.
"அத்துணை ரிஷியார்கள் முன்னே பாடிவைத்த நூல் சப்த காண்டமானது பசுங்கிளி முன்னே காக்கை கரையும் சத்தம் போல் இருந்தாலும், புன்னகையுடன் அனேகரும் இந்நூலை படித்து அதில் சினமேதும் கொள்ளாமல், எந்நூலை குற்றம் குறை சொல்லாமல் என்மீது அன்பு கூர்ந்து ஆசிர்வதித்ததற்கு நன்றி. அதனால், என் உடல்-பொருள்-ஆவி எல்லாம் ஒப்பிவித்து கலியுக மக்கள் பிழைக்கவேண்டி நான் சொன்ன பல ரகசியங்கள் வெட்ட வெளிச்சமாச்சு. காலாங்கி கடாட்சத்தினால் பாடிய என் நூலுக்கு சாபமில்லை" என்று சொல்கிறார்.
சாகரத்திற்கு இணையான ஒரு நூலை முதலில் ஏழு லட்சம் பாடல்களோடு எழுதி, அதன் பிறகு அதன் பிரம்மாண்டம் கருதி ஒரு பங்காக சுருக்கி 7000 பாடல்களை ஏழு காண்டகளாக இயற்றினார். இத்தனை மாபெரும் பிரம்மிக்கவைக்கும் பணியை செய்துமுடித்த குருநாதர் போகர், மிகவும் சாதாரண நபராக தன்னை வெளிக்காட்டிய விதம் தெய்வீகமானது... திருமூலர், காலாங்கி மெச்சும் உன்னத பவ்யமான மாணாக்கராகவே இங்கு பரிமளிக்கிறார். அவருக்கு வாய்த்த சீடர் புலிப்பாணியும் ஆசான் மெச்சும் மாணவராகவே திகழ்ந்தார் என்பது பாடல்களில் புலப்படுகிறது.
சீன தத்துவஞானி கன்பூசியஸின் சீடராக லாவோசு என்ற பெயரோடு கிமு4 ல் அவர் இயற்றிய 'தவோதேசிங் 81' Tao te ching பற்றி இன்னொரு பதிவில் காண்போம். இங்கு படத்தில் பார்க்கும் சீன முதியவர் போல் உள்ளார். அரைதூக்கக் கண்களோடு நிர்விகல்ப சமாதி நிலை எப்படி இருக்கும் என்று காண்பித்தார். அவரைப் பார்த்து தரிசித்த அதே முகத்தை இங்கே ஓரளவுக்கு வரைந்துள்ளேன்.
எந்நேரமும் சிந்தையில் வைத்து அவர் பாதங்களை வணங்கி. சித்தர் போகருக்கு சரணம் சொல்லி அமைகிறேன்.

லாவோட்சு (எ) போயாங்


மூத்த சித்தர் (கமலர்) காலாங்கியின் அழைப்பின் பேரில் போகர் சீனம் சென்று அஷ்ட சித்திகளை மேற்கொண்டு உலகம் முழுதும் பயணித்தும் பல காலங்கள் தங்கியும் தன் பணிகளை மேற்கொண்டார் என்பதை கடந்தபோன பதிவுகளில் விரிவாகக்கண்டோம். அங்கு அவர் கூடுவிட்டு கூடுபாய்ந்து ஒரு முதியவ் உடலில் பிரவேசித்தார். திடீரென்று தத்துவம் பேசும் ஒரு முதியவர் யாரென அங்குள்ளோர், அறியாததால் அவரை ‘மூதறிஞர்’ (Laotsu லாவோட்சு) என்று அழைத்தனர். கூடுவிட்டு கூடுபாய்ந்த வேற்று தேகத்தோடு அவர் அங்கு இருந்ததை பரங்கியர் தேசத்தில் பன்னீராயிரம் வருடங்கள் இருந்தேனே என்று கூறியுள்ளார். ஆனால் கூடுவிட்டு பாய்ந்த ரகசியத்தை அவர் எங்கும் நூலில்  வெளிப்படுத்தியதில்லை. சீன வரலாற்றின்படி லாவோட்சு பதிமூன்று பிறவிகள் எடுத்தார் என்றும், ஒவ்வொரு பிறவியும் சுமார் 900 முதல் 1000 வருடங்கள் வரை நீடித்ததாகவும் அறியப்படுகிறது.

அதன்படி பார்த்தால் வேற்று தேசமாம் சீனத்தில் பன்னிரண்டாயிரம் வருடங்கள் வாழ்ந்ததை உறுதி செய்கிறார். ஆனால் இப்படி திடீரென அந்த மூப்பு எய்தும் உடலுக்குள் பாய்ந்து சக்தி சக்கரங்களை இயக்கி குண்டலினி தட்டி எழுப்பி சச்சிதானந்தத்தில் லயித்தார். அதனால் தனக்குத்தானே ‘போயாங்’ என்று பெயர் சூட்டிக்கொண்டார். திடீரென தோன்றியவரை (போகரை) அங்கு பெரிதும் மதித்தனர், லாவோட்சு என்று அழைத்தனர். ஒருபுறம் போகர் ஏழாயிரம் பன்னீராயிரம், ஜெனன சாகரம், கற்பம், என்று பல்வேறு நூல்களை இயற்றினார். இன்னொரு பக்கம், ‘டேங்’ Tang பேரரசில் ஆவணங்கள்  காப்பாளராக பதவி வகித்தும், பல ரசவாத வைத்திய முறைகளையும் இயற்றினார். அவர் காலத்தில் பாதரச உபயோகம் அதிக அளவில் இருந்தது. ஆட்சியின் போக்கு பிடிக்காததால், சுமார் கிமு.5 ல் அவர் சீனம் விட்டு வெளியேறி சீனப்பெருஞ்சுவர் கடந்து மேருமலை நோக்கி பயணித்தார். அங்கு கோட்டை வாயில்காப்பாளர் கேட்டுக்கொண்டபடி இவர் Tao-te ching என்ற 81 தத்துவங்கள் கொண்ட திருக்குறளை சீனமொழியில் வழங்கினார். இதன் பொருள் ‘மார்க்கமும் சக்தியும்’. சீனாவில் Taoism தாவோயிசம் என்ற சமயத்தை நிறுவினார். அதாவது, யின்-யான் என்ற இருவஸ்துக்களான சிவ-சக்தி சுழற்சி தத்துவத்தை இதன் வடிவமாக்கினார்.
Image may contain: 1 person, text 
அவருக்கு குருவாக இருந்தவர் குவாங்கி (எ) குங்ஃபூசு. இவருடைய பெயரைத்தான் கன்பூசியஸ் (Confucius) என்று மேற்கத்திய மக்கள் அழைத்துள்ளனர். சீனாவில் இன்றும் கன்பூசியஸ்- லாவோட்சு கோயில்கள் நிலைத்துள்ளது. சீனாவில் போகர் இருந்த போது போயாங் என்ற பெயரை சூட்டிக்கொண்டத்தை பின்னர் அகஸ்தியர் பூமிதனில் கணநேரம் தங்கா பாலகா, பரங்கியர்தேசத்தில் போகர் என பெயர்க் கொண்டாயே என்று பாராட்டும்போது தை கோடிட்டுக் காட்டியுள்ளார். பிற்காலத்தில் கிபி.2ல் போகர்-அகத்தியரின் சீடரான மகாவதார் பாபாஜி, "தன் குரு போகர் தான் லாவோட்சு" என்று உறுதி செய்தார். சீன வரலாற்றையும், போகர் ச்பத்காண்டத்தையும் ஒப்பிடும்போது லாவோட்சுவின் குரு கன்பூசியசின் வாழ்க்கையும், போகரின் குரு காலங்கியின் வாழ்க்கையும் ஒத்துப்போகிறது. ‘அதிசய சித்தர் போகர்’ மற்றும் ‘போகர் 7௦௦௦: சப்தகாண்டம் ஒரு பார்வை என்ற என் விளக்கவுரை நூல்களில் முன்கதைச் சுருக்கமாக இதைச் சொல்லியுள்ளேன். இனி, போகர் (எ) லாவோட்சு இயற்றிய தாவோதேஜிங் நூலின் குறள் பாடல்களை இங்கே காண்போம்.


- எஸ்.சந்திரசேகர் 

வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

2-Dimensional Shiva

இரு பரிமாணத்தில் சிவபெருமான்.. 2D closeup.. முன்னும் பின்னும் ஒன்றிலே.. செந்நிறத்தில் சூலத்தை நோக்கி உள்ள ஒரு பரிமாணம், மஞ்சள் நிறத்தில் நம்மை நோக்கி ஒன்று... தோளில் உள்ள பாம்பின் இரு கண்களும் தெளிவாக உள்ளது.. முழு தோற்றத்தில் சிவனின் இடது பாதத்திலிருந்து தலைமுடி பறக்க பார்வதி மெள்ள எழும்புகிறாள்.. ஈசனின் பிரம்மாண்ட சுவரூபத்தின் அடியும் முடியும், உமையாள் சமேதமாய் ஒருங்கே இங்கே கண்டு தரிசித்து விட்டோம். ஓம் நமசிவாய! 


விழித்துள்ள பரம்பொருள்!

இன்று மகாசிவராத்திரி. சிவபெருமானை வணங்கி, இரவு முழுக்க அவரை மனதில் நினைத்து பாடி மகிழ்ந்து ஆசிகள் பெரும் அற்புதமான சக்திமிக்க ராத்திரி. நம்மகி கடந்து சிவனே செல்லலாம், நம் அருகினில் கூட இருக்கலாம். இரவில் உண்ணாமல் ஒரு பொழுது மட்டும் விரதம் இருந்து, இரவு தோறும் தூங்காமல் கண்விழித்து ஈசனை தியானிக்கும் நல்ல சமயம் இது.

நவராத்திரி ஊரெல்லாம் கொண்டாடியது
Image result for mahashivratriநாயகிகள் மூவரின் திருவிழாகண்டது;
சிவராத்திரி ஊரெல்லாம் கண்விழிக்குது
சிவனேன்னு தூக்கம் கண்ணிழுக்குது;
ஒருராத்திரி சிவபுராணம் பாடவிரும்புது
ஒரு ஜாமம் முழிச்சாலே கண் எரியுது;
நடுராத்திரி உன் எண்ணம் வந்தெழுப்பும்
நாயகனே நீயின்றி எனக்கு தனிதுவமேது?
ராத்திரி பகலென ஐந்தொழில் புரிகிறாய்
ரட்சிப்பாய் கண்ணுறங்கும் உன் பக்தனை!


திங்கள், 20 பிப்ரவரி, 2017

போகர் விளக்கும் டைஃபூன் சூறாவளி

"சீனபதி பக்கம் (தைவான்) தீவுப் பகுதிகளின் அருகில் சர்வ ஜாகிரதையாக கப்பல் விடவேண்டும். எப்போது (typhoon) சூறாவளி வீசி கப்பலை புரட்டிபோடும் என்று கணிக்கமுடியாது. விரைந்து அடிக்கும் அந்த வாயு சீற்றத்தால் கடலில் சுழல் எழ, பறவைகளும் நீரில் மடிந்து விழும். இந்த சீற்றத்தால் நீராவிகப்பல் செல்ல தடமின்றிப் போகும். அதில் சிக்கிக்கொள்ளாமல், விடுபட்டு ஆகாய அக்னிக்கூண்டு (hot air baloon) அமைத்து, அதில் பறந்துபோய் பச்சை மலை தீவில் இறங்கிடவேண்டும்.
அதுபோல் கடலுக்கடியில் குன்றுகள் மறைந்திருக்கும். மோதினால் கப்பல் நொறுங்கும். அதில் மோதாமல் இருக்க, கப்பலின் முன்பகுதியில் கண்ணாடிக்கை தொலைநோக்கியை (underwater telescope) நீருக்குள் பொருத்திவைத்து ஆழத்தில் என்னவுள்ளது என பார்த்துக்கொண்டே எச்சரிக்கையுடன் மரக்கலம் செலுத்த வேண்டும். இப்படியே ஒதுங்கி போய் நங்கூரமிட்டு நிறுத்தியபின். கூண்டமைத்துப் பறந்து போய் பச்சை மலையில் இறங்கிடவேண்டும்.
அங்கு பச்சை கல்லையும், சிலாசத், பூநீர் வஸ்துக்களை சேகரித்து கவனமாக மேலெழும்பி நம் பதிக்கு திரும்பிட வேண்டும். அங்கு ஊரென்று ஒன்றுமில்லை. வட கோடியில் ஒரு ஆஸ்ரமத்தில் கரடிமுடி ரோமத்தால் படர்ந்திருந்த 'கம்பளிச்சித்தர்' ஒருவர் பொன்னுலக சித்தராக ஒளிவீசினார். எனக்கு உபதேசங்கள் தந்தார்."
No automatic alt text available.
பசிபிக் பெருங்கடலில் எப்போதுமே ஆடி-புரட்டாசி வரை டைஃபூன் (ஜூன்--அக்டோபர்) சூறாவளி நீடிக்கும். அப்போது அந்த வழித்தடத்தை கப்பல்களும் விமானங்களும் பயன்படுத்தாது. போகர் காலத்திலும் இயற்கையின் குணாதிசயங்கள் மாறாமல் இருந்துள்ளது! என்ன நண்பர்களே... விஞ்ஞான சித்தர் போகரின் செயல்களைப் பார்த்து அசந்து போகிறீர்களா? அவர் பெருமைகளைப் பற்றி அளந்து சொல்லி மாளாது... அகணிதர்!
Image may contain: one or more people
"போகர் ஏழாயிரம்: சப்தகாண்டம் ஒரு பார்வை" (Leo Book Publishers, Chennai) என்ற என் விளக்கவுரை நூலிலிருந்து சிறு பகுதியை மேலே படித்தீர்கள்.

போகர் சொன்ன வேற்று கிரகவாசிகளின் விமான தளம்


போகர் சப்தகாண்டத்தில், சீனாவில் ஒரு மலை ஓரமாக வளமிக்க நதியோர நிலமும் அங்கு குகைப்பற்றியும், வானூர்தி வந்துபோகும் தளம்பற்றி சொல்லியுள்ளார். அவர் அடிக்கடி எங்கு வேண்டுமாயின் ஆகாய வான் ரதத்திலோ, வாயில் குளிகை வைத்துக்கொண்டோ சப்த சாகரங்களையும் பறந்துவந்து பார்வையிட்டார். பல சமயங்கள் அந்த சீன மக்களை வான்ரதாத்தில் ஏற்றிக் கொண்டு அண்டமே கிடுகிடுக்க நீராவி அழுத்தம் வெளிப்பட சப்தம் எழுப்பிக்கொண்டு உலக சுற்றுலா போய்வந்தார் என்பது உங்களுக்கு ஆச்சரியத்தையும் சிரிப்பையும் வரவழைக்கும். ஆனால் இதுதான் உண்மை. அவர் இஷ்டப்பட்ட இடங்களில் விமானதளமாகிக் கொண்டார். பிரத்தியேகமாக தளம் ஏதும் வைக்கலை.
ஆனால், அவர் காலத்திலேயே வேற்றுகிரக வாசிகளும் இந்த முன்னேறிய தொழில் நுட்பம் வைத்திருந்ததும் அவர் பாடல் வாயிலாக புலப்படுகிறது. ஐந்தாம் காண்டத்தில் " பாலமுடன் சீனபதி கடலோரத்தில் பண்பான மலையொன்று குகைதானுண்டு; வானோர் முதல் வந்திறங்கும் வளமான மண்டபம் குகையும் அங்கொன்றுண்டு" என்று சொல்லியுள்ளார். சித்த ரிஷிகளை விட்டால், இலங்கையில் ராவணன்-குபேரன் செலுத்தியது போக, விமானம் செலுத்தியவர்கள் வேறு யார்? 'வானோர்' (எ) Aliens அப்போதே முன்னேறிய தொழில்நுட்பம் பெற்றிருந்தார்கள் போலும்.
No automatic alt text available. No automatic alt text available.
நான் செய்த ஆய்வில், அது சீன-திபெத் எல்லையோரம் பயங்க்ரா-யுலா மலைப்பகுதி என்று அறிந்து கொண்டேன். பிரம்மபுத்ராவின் வளமான பகுதியில் நூற்றுகணக்கான கற்பலகைகளும், வட்டவடிவ தட்டுகளும் கண்டெடுக்க ப்பட்டது என்றும்; அதில் அதிக அதிர்வுகளை தாங்கவல்ல கோபால்ட் உலோக பூச்சு இருந்ததாகவும்; அதை ஆராய்ச்சி செய்த சீன-ரஷ்ய ஆராய்ச்சியாளர், அந்த பலகைகளில் இருந்த கல்வெட்டில், "சுமார் 12000 வருடங்களுக்கு முன், விண்வெளியிலிருந்து பலர் வந்து இறங்கியதும், மீண்டும் கிளம்பிட வானூர்திக்கு சக்தி இல்லாமல் போனதாக அறியப்படுகிறது" என்றனர். அது விமானமா, பறக்கும் தட்டா, வான் ரதமா என்று எனக்கு தெரியவில்லை.. ஆக, போகர் சொன்ன அந்த இடம்தான் வேற்று மனிதர்கள் வந்திறங்கிய தளம்.
"சித்தர்களின் அறிவியல் பங்களிப்பு" Rs.70 (Vijaya pathippagam, Coimbatore) என்ற என் நூலிலிருந்து ஒரு சிறு பகுதியை மேலே படித்தீர்கள்.

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

போகர் இறங்கி அமர்ந்த எரிமலைகள்


"சீனபதி விட்டு பறக்கும்போது கடலின் மத்தியில் ஒரு தீவைக்கண்டு இறங்கினேன். அருகில் சென்று பார்த்தால் அது பச்சை போர்த்திய மலை.. பாசியோ என்று நினைத்தேன்.. ஆனால் மலையே பச்சை. அதன்மேல் கதிரொளி பட்டு நீர், வானம், பட்சி, மிருகம் என சுற்றியுள்ள அனைத்துமே பச்சையாய் ஜொலித்தது. வெகுகோடி காலம் வரை பச்சைமலையில் தங்கி ரிஷியார்களிடம் ஞானோபதேசம் பெற்றேன். இந்த மலைகளுக்குள் அக்னியும் நவதாதுவும் உள்ளது என்று அறிந்து கொண்டேன். அவை எரிமலைகள்."

இதைப்பற்றி போகர் எழாயிரம் நூலில், ஐந்தாம் காண்டத்தில் சொல்லியுள்ளார். சித்தர் போகர் சுட்டிக் காட்டிய இவ்விடம் தைவானிலுள்ள பச்சை, ஆர்கிட், குய்ஷன் தீவுகளிலுள்ள எரிமலை என்பது என் ஆய்வில் தெரிந்துகொண்டேன். அவர் பெரும்பாலும் இறங்கிய இடங்கள் தைவான், ஸ்ரீவிஜயம் சுமத்ரா மற்றும் அந்தமான் பகுதிகள் என்றும் அறிந்தேன். இதைத்தான் பொதிகைக்கு தென்கிழக்காக சுட்டிக்காட்டியுள்ளார். இன்று அவர் சொன்ன எரிமலைகள் வெடிக்காமல் தூங்கிக் கொண்டோ அல்லது செயலிழந்தும் இருக்கலாம். 
விஸ்வகர்மா வகுத்த வாஸ்து சாஸ்த்திரம்படி தென் கிழக்கு மூலையில்தான் அக்னி (சமையற்கட்டு) அமைய வேண்டும். அதன்படி பார்த்தால் பாரதத்திற்கு தென் கிழக்கில்தான் எப்போதுமே அக்னி தகித்துக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று சம்பந்தமேயில்லாமல் பாரதத்திற்கும் இந்த எரிமலைகளுக்கும் பல்லாயிரம் கிமீ தூரம் உள்ளது.. அன்று குமரிக் கண்டம் நம் தேச பூகோளத்தில் இருந்தது. அப்படியொரு பரப்பளவை மனதில் நினைத்துக் கொண்டு சுமத்ரா அந்தமான் (தென்கிழக்கு) பகுதியை கற்பனை செய்து பாருங்கள். புரியும்!

ஒரு வாரமாக இப்பகுதியில் எரிமலைகள் சீற்றமாகி வெடிக்கத் தொடங்கியுள்ளதால், இந்த பதிவை இட்டேன். "போகர் ஏழாயிரம் : சப்தகாண்டம் ஒரு பார்வை" (Leo Book Publishers) என்ற என் விளக்கவுரை நூலிலிருந்து சிறு பகுதியைத்தான் மேலே படித்தீர்கள்.

சனி, 18 பிப்ரவரி, 2017

மகாசித்தர் வருகை!


"நான் வீரபோகராக வரும் காலத்தில் பாவிகளையும்   தர்மநெறி தவறியவர்களையும் தண்டிப்பேன். துர்முகி ஆண்டு கார்த்திகை மாதம் சுத்த தசமி நாள் முதல் இனி நிறைய  பிரளயங்கள் நிகழ்த்துவேன்.. பூமியில் பேரிடர்களை ஏற்படுத்துவேன். எரிமலை சீற்றம் அதிகரிக்கும், பாதாள கங்கை நதி வற்றிப்போகும். ."

இதை கண்கூடாகப் பார்க்கிறோம். கடந்த டிசம்பர் மாதம் பெரும் சூறாவளி உலுக்கியது... பிறகு கடல் முழுதும் எண்ணெய் கொட்டி கடல்வாழ் உயிரனங்கள் அழிந்தும், நிலத்தடி நீரும் மாசுபட்டது... இப்போது அந்தமான் பகுதியில் நேற்று எரிமலை வெடித்து செந்நிற குழம்பை கக்கத் துவங்கியுள்ளது... போன வாரம் இந்தோனேசிய சுமத்ரா தீவிலும் எர்மலை வெடித்து கக்கி வருகிறது... இதன் சீற்றம் அடங்கும் போது, அடுத்த பிரளயம் வரும் ஏவிளம்பி புத்தண்டுக்குபின் வரத் தயாராகவுள்ளது... ஈசனின் கடுங்கோபத்திற்கு தகிஷண பகுதி ஆட்படும் என்ற நல்ல செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது.

மாலும்-முருகனுமான அந்த மகாசித்தர்தான் போகர், தன் சக்திகளை காட்டுகிறார். அவர் இன்னும் ஏனைய சித்தர்களையும் மகான்களையும் தர்மநெறியை நாட்ட வழிவகுக்கிறார். 2017 ஆண்டு முதல் சித்தர்களின் கட்டுப்பாட்டில் இப்பிரபஞ்சமே வருகிறது. கலியுகத்தில் அரசியல் மாற்றங்கள், யுத்தங்கள், அழிவுகள், எல்லாமே இவர்கள் கட்டுப்பாட்டில் நடக்கும்.