About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வெள்ளி, 21 ஏப்ரல், 2017

கிபி 3906 வரை சென்றுவந்த மனிதர்

அமேடியுஸ் டைனாக் என்ற ஸ்வீடன் நாட்டு ஆசிரியர் ஒருவர் 1921ல் உடல்நலப் பிரச்சனைகளால் நினைவிழந்து  ஒருவருடகாலம் 'கோமா' நிலைக்குப் போனார். அப்போது அவரது ஆழ்மனதின் பிரக்ஞை நினைவுகள் எதிர்காலத்திற்கு போயுள்ளது.  கிபி3906 காலகட்டத்தில் வாழும் ஒரு நபரின் உடலுக்குள் போய்வந்துள்ளது. அவர் அப்போது பார்த்து உணர்ந்தவற்றை கோமாவிலேயே பேசியுள்ளார். அதை ஒரு நூற்றாண்டுக்கு முன் பதிவு செய்தனர். அதாவது  21 - 39ம் நூற்றாண்டு வரை நடந்ததை சொல்லியுள்ளார்.


அப்போது அவர் 20ம் நூற்றாண்டில்தான் இருகிறார் என்று மருத்துவர்கள் குறுக்கிட்டு சொல்லவில்லை. ஏனென்றால் இது அவருடைய மனதின் ஆழத்தில் ஒரு அச்சம் கலந்த வடுவாக இருந்துவிட்டால் அதை சரி செய்வது கடினம் என்று மருத்துவர்கள் கருதினார்கள். ஓராண்டுக்குப் பிறகு அமேடியுஸ் உடல்நலம் தேறி கண்விழித்தார். அது வருடம் 1922. தனக்கு கனவுபோல் எதிர்காலத்தில் அடுத்த ஆயிரம் வருடங்களில் கண்டவற்றை தீர்க்க தரிசனம்போல் பார்த்து ஆச்சரியப்பட்டு பேசினாராம். கோமாவில் அதை மருத்துவர்களிடம் சொல்லியுள்ளதை பிறகுதான் தெரிந்துகொண்டாராம். அதை ஒரு கையேடாக 'எதிர்கால டயரி' யில் குறிப்பிட்டார். அது பின்னாளில் ஒரு பரபரப்பை உண்டாக்கும் என்று அவரே  எதிர்பார்க்கவில்லை.

டைனாக் கண்ட காட்சிகள்:

2000-2300 A.D. :- மனிதகுலம் அதிக ஜனத்தொகை, சுற்றுச்சூழல் சீரழிவு, பொருளாதார சமமின்மை, தவறான நிதிநிலை கொள்கை, மக்களுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்காதது, அவ்வபோது நடக்கும் சிறு சண்டைகள்/போர், பொருள் தேடும் உலகில் அவர்கள் தங்களுக்குள்  மெய்ஞானம் தேடவோ ஆன்ம பாதையில் போகவோ நாட்டம் இருக்காது.

2204 A.D.:- செவ்வாய் கிரகம் 20 மில்லியன் ஜனத்தொகையோடு முழுதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2265 A.D. வாக்கில் எதிர்பாராத பேரிடர் அங்கே ஏற்பட, அத்தனை மனித கூட்டமும் இறந்தனர். அதன்பிறகு செவ்வாய் கிரகத்தில் குடியேறும் யோசனையே இல்லை.

2309 A.D.:- தீர்வுகாணப்படாத உள்நாட்டு பிரச்சனையாலும், உலகப் போரினாலும்  பூமிக்கு பெரிய இன்னல் ஏற்படும். இதனால் பொன்னிறம்  மற்றும் கருப்புத் தோல் வாழும் மனிதர்களின் தேசங்கள் அழியும்.

2396 A.D. :- சுற்றுஹோழளுக்கான பாராளுமன்றத்தில் பல ஆக்கபூர்வ தீர்வுகள் பிறக்கும். இது முற்றிலும் அரசியலோ வர்த்தகமோ சாராத ஒரு அமைப்பு. இதில் விஞானிகள், மனிதகுல ஆர்வலர்கள் மட்டுமே  இருப்பார்கள். இன்று புழக்கத்தில் இருக்கும்  பணம் அன்றைக்கு இருக்காது.  பூமிக் கோளின் வளங்கள் எல்லோருக்கும் சமமாகப் பிரிக்கப்பட்டு அதை வளர்ச்சியடைய வைப்பார்கள். அதிக ஜனத்தொகை பிரச்சனை, வெப்பமயம், சுற்றுச்சூழல் சமன்பாடு எல்லாமே சரி செய்யப்படும். மனித வாழ்க்கை மிகவும் எளிமையாகும். வாழ்நாளில் அவர்கள் மிகவும் குறைவாகவே வேலை செய்கிறார்கள். ஆனால், மீண்டும் வருடம் 1 என தொடங்குகிறது. (இயேசு காலத்தினைப் போல).  ஆனால் மனிதர்களுக்கு கோள்களும் அதன் வளம் காக்கும் பொறுப்பு வரவேயில்லை.  சுமார் 2-5 நூறாண்டிற்கு பிறகுதான் அதைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்துள்ளனர்.  எல்லோரும் பொருளாதார சமநிலை அடைந்துவிட்டனர் ஆனால் தொழிநுட்பத்தில் கட்டுப்பாட்டை வைக்க முடியவில்லை, நாளுக்கு நாள் அது விரிவடைகிறது. இந்த 'இருண்ட' காலம் கிபி 3400 வரை நீடிக்கிறது.

3382 A.D. :- திடீரென்று மக்கள் அனைவரும் ஆன்மிகத்தில் நாட்டம்பெற்று மெய்ஞான மார்க்கம் தேடி அலைகிறார்கள். எல்லோருக்குமே  சக்தியும் அமானுஷ்ய காட்சிகளும் புலப்படுகிறது. ஒரு பிரம்ம ஜோதி தோன்றி, அதில் எல்லோருமே நேரடியாக இணைந்து பல சக்திகளை பெறுகிறார்கள். மனித மூளை பல வினோதங்கள் செய்கிறது.

3400-4000 A.D. :- சுமார் ஆயிரம் வருடங்கள் கழித்து பொற்காலம் முடிவுக்கு வருகிறது.  ஒவ்வொரு மனிதனுமே விஞானி, தத்துவஞானி, ஓவியர், கலைஞர், என்று எல்லா சித்துகள் பெற்றவராக விளங்குகிறார்கள். என்ன ஆச்சரியம்!  உடை உணவு தங்க வீடு போக்குவரத்து என்று எல்லாமே சமுதாயத்தில் அனைவருக்கும் எல்லாமே இலவசமாக் கிடைக்கிறது.  எல்லாமே போதுசொத்து ஆகிவிட்டது, தனினபர் சொத்துக்கள் ஏதுமில்லை. புகழ்- கல்வி- கௌரவம் மட்டுமே சமநிலை இல்லாமல் உள்ளது. மக்கள் தங்களை சுயமாக முன்னேற்றிகொண்டு வருகிறார்கள். மொத்த வாழ்க்கையிலேயே 2 வருடங்கள்தான் வேலை செய்கிறார்கள். 17- 19 வயது வரைதான் வேலைசெய்கிறார்கள். பூமியில் ஜனத்தொகை ஒரு பில்லியனுக்கு குறைவாகவே இருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகிறது. எதிர்ப்பு, வஞ்சம் , களவு, கொலை என்று எந்த மாபாதகச் செயலும் எங்கும் நடந்ததாகக் கேள்விப்படவில்லை. சுய கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்தோடு உள்ளார்கள்.
-----------  ------------- --------------- --------------
என்ன நண்பர்களே, கலிகாலத்தில் இதெல்லாம் நம்பும்படியாக இல்லையா?  Relativity Time Travel செய்துவிட்டு வந்த கதைபோல இருக்கிறதே. அதெப்படி இன்றே இதெல்லாம் எதிர்காலத்தில் நடக்கும் என்று  ஊர்ஜிதமாக சொல்லுவது? கோரக்கர் அருளிய சந்திரரேகையில் அவர் சொன்ன தீர்க்க தரிசன நிகழ்வுகளோடு ஓரளவு ஒத்துப்போகிறது. அந்த பாடல்கள் சில இங்கே தந்துள்ளேன். அமேடியுஸ் சொன்னதுபோல மிகவும் ஆழமாக இன்னின்னது என்று கோரக்கர் அளந்து சொல்லவில்லை... மேலோட்டமாக நடப்புகளை சொல்லியுள்ளார்

.Image may contain: text


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக