கடப்பாவில்
உள்ள ஸ்ரீ வீர்ப்பிரம்மம் அவர்களின் சஜீவசமாதி மடத்தில் ஒரு பகுதிதான் ஸ்ரீஈஸ்வரிதேவி மடம். சுவாமிகளின் பேத்தியும், அவருடைய மூத்தபுதல்வர் கோவிந்தையா-கிரிமாம்பா தம்பதியின் மகள் இவர். இவருக்கு நான்கு சகோதரிகள். தன் பாட்டனாரைப் போலவே இவரும் ‘காலக்ஞானம்’
நூல் இயற்றினார். அத்வைத சித்தாந்தம் பரப்பினார். இவருடைய காலஞான நூல் இன்றும்
கொங்கல ராமாபுரம், கோனசமுத்ரம் ஆகிய ஊர்களில் உள்ள கோயில்களில் வைத்து பூஜை
செய்கிறார்கள். "ஓம்-ஐம்-ஹ்ரீம்-க்லீம்-ஸ்ரீம் ஸ்ரீஈஸ்வரி தேவினே நமஹ" என்பது அவருக்கான பீஜ மந்திரம்.
ஸ்ரீ வீரபிரம்மேந்திரர் படுவெல் கிராமத்தில் காட்டுவழியே வரும்போது
ஒரு பிரம்மராக்ஷசியை கட்டிப்போட்டு செயலிழக்கவைத்தார். பிற்காலத்தில் அவ்வழியே
போகும் ஸ்ரீ ஈஸ்வரம்மா மூலம்தான் அதற்கு
சாபவிமோசனம் கிடைக்கும் என்றும் அதனிடம் சொல்லிவிட்டுப் போனார். அதுபோலவே ஈஸ்வரிதேவி தன்
சீடர்களான சதுகொண்ட செங்கைய செட்டி, யோகி சுப்பையாசாரியா ஆகியோருடன் வரும்போது
அந்த ராக்ஷசிக்கு சாபவிமோசனம் தந்தார். வினுகொண்ட கிராமத்தல் எண்ணெய்க்கு பதில் நீரூற்றி
விளக்கு ஏற்றியும், பல அற்புதங்கள் நிகழ்த்தினார். இவர் வாழ்ந்த காலம் கிபி11ம்
நூறாண்டு என்று நம்பப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக