கூர்க் அருகே எங்கள் எஸ்டேட் வீடு 'சந்திர விலாஸம்' இப்படித்தான் இருக்கும், மலையைச்சுற்றி வளைவு பாதை, தாழ்வான பகுதியில் சிறிய ஓடை, பறவைகளின் ஒலி, எப்போதுமே மழையில் நனைந்த வனப்பகுதிபோல மூலிகை வாசம் இருக்கும், சூரியசக்தியில் வெந்நீர் எந்நேரமும் வரும், மளிகை சாமான்கள் மொத்தமாய் வாங்க அடுத்த ஊருக்குத்தான் போகணும், காய்கறிகள் எல்லாமே பின்புறம் பயிர் செய்வோம், பசு இருக்கும், மந்தமான வானிலை இருக்கும், கனமழை பெய்தால் அவ்வப்போது எங்கேனும் நிலச்சரிவு நடக்கும்...வீட்டுக்கு ஒரு கார் நிச்சயம் இருக்கணும். பாக்கு, வெற்றிலை, காப்பி, ரப்பர் அதிகம் பயிர் செய்வோம். தினசரி உணவு ராகி 'முத்தே' களி, கீரை சாம்பார், கொஞ்சம் பொறியல், அரிசிச்சோறு, ரசம், தயிர், ஊறுகாய்.
தினமும் எனக்கு நடைபழக சரியான இடம்.. எளிதில் வியர்க்காது. கோடைகாலத்தில் சுமாராக சூடு தெரியும். அக்கம்பக்கத்து எஸ்டேட் காரர்கள் எல்லோருமே சொந்தத் தொழில் செய்வோர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ராணுவ படைவீரர்கள்.. தூங்கி எழுந்து குளித்தபின், தினமும் அவர்கள் மிடுக்காக உடையணிந்து கொண்டுதான் காலை செய்தித்தாளை படிப்பார்கள். அவர்களுக்கு பீர் குடிப்பது நமக்கு காபி குடிப்பது போல ஒரு பானம். வீடுகள்தோறும் கம்பீரமாக துப்பாக்கி உண்டு. எங்களுடைய எஸ்டேட் தோட்டம் மொத்த பரப்பளவு 80 ஏக்கர் இருக்கும்.. இதுபோன்ற இடம் மெய்யாகவே சொர்க்கபுரிதான்.. எங்க எஸ்டேட்டுக்கு விருந்தாளியா வாங்க..இயற்கையோடு சந்தோஷமா இருங்க.
ஹூம்ம்.. இப்படி எல்லாம் உங்ககிட்ட சொல்லனும்னு ஆசைதான்!! பெரிதாகக் கனவு காணுங்கள், அது ஒருநாள் மெய்ப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக