பங்குனி மாதம் நடக்கும் முக்கிய விழா. விநாயகர் உள்ளே வர, அடுத்து ஸ்ரீகபாலீஸ்வரரைத் தொடர்ந்து கற்பகாம்பிகை, முருகப்பெருமான் மண்டபத்துக்கு எழுந்தருளுகின்றனர். சம்பந்தர் பாடல் பாட, சிவநேச செட்டியார் தன் மகள் பூம்பாவையோடு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கும். அதைத் தொடர்ந்து சமயக் குரவர்கள் நால்வரும் தனித்தனி பல்லக்குகளிலும், நாயன்மார்கள் ஒவ்வொரு பல்லகிலும் அவரவர் திருப்பெயர்களுடன் எழுந்தருளி, அருள்மிகு கபாலீஸ்வரை வலம் வந்து தீபாராதனையை ஏற்று, முன்னே செல்வர்.
திருஞான சம்பந்தப் பெருமான் மயிலாபுரியில் இயற்றியது 'பூம்பாவை திருப்பதிகம'. பாம்பு கடித்து இறந்து தகனம் செய்யப்பட்ட பூம்பாவையை பாடல் பாடி அந்த சாம்பலிலிருந்து உயிரத்தெழுப்பிய பதிகம் இது.
"மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்கு
அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்!"
கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்கு
அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்!"
'அட்டிட்டல் விழா' என்று சம்பந்தப் பெருமான் பாடியதை நிரூபிப்பதுபோல் பத்தடிக்கு ஒரு அன்னதான, பானகம், நீர்மோர், குளிர்பான பந்தல்கள் இருக்கும்.
மயிலையின் கிராம தேவதையான கோலவிழி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தபின்தான் வீதி உலா தொடங்கும். (அதோடு ஜேப்பிடி திருடர்களும் உலா வருவார்கள்... சங்கிலி/ பணம்/ செல்போன், உஷார்!)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக