சில மாதங்களாக போகர்/ நவபாஷாணம் விஷயங்கள் முகநூலில் நிறைய வலம் வந்துகொண்டிருக்கிறது என்பது உண்மை. நாமெல்லோருமே அந்த உரையாடலில் பங்கு பெற்றோம், நினைவிருக்கா?
திருப்பூர் பகுதியிலிருந்து அண்மையில் ஒருவர் என்னிடம் பேசவேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். நாம் என்ன முக்கியஸ்தரா, நம்மிடம் பகிர என்ன இருக்கும்? என்று நினைத்தேன். டிவி நிகழ்ச்சியையும் என் நூல்களையும் படித்துள்ளார் போலும்.
அவர் பெயர் திரு.சேகர், வயது 55, ஏழாம் வகுப்பு வரை படித்துள்ளார். இணைய தளம், மின்னஞ்சல் பற்றி எதுவும் தெரியாது. வரும் SMS தகவல்களை எங்குபோய் திறந்து படிக்கணும்னு தெரியாது. சில கம்பனிகளில் மெகானிக் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 20 வருடங்களாக ஏதோ ஈர்ப்பின் காரணமாக சித்த வைத்தியம் பயின்று வந்துள்ளார்.
சில வருடங்களுக்குமுன் இவர் நாகபட்டிணம் -பேரூர் சென்றபோது, அங்கு இவர் கனவில் ஒரு முதியவர் வந்தாராம், அவர் இவருடைய இரு தோள்களுக்கு இடையே முதுகுக்கு பின்னே இருந்து (ஸ்டிக்கர் பிய்த்து எடுப்பதுபொல்) ஒரு பனையோலையை எடுத்துள்ளார். அதிலிருந்து சில பாடல்களை இவருக்குச் சொல்லி கொடுத்துள்ளார்.
அதன் பிற்பாடு அவர் ஒன்பது வகையான பாஷாணங்களை தன்போக்கில் வாங்கி அவற்றை மூலிகை சாற்றில் சுத்தி செய்துள்ளதாக சொன்னார். முன்பின் செய்த அனுபவம் இல்லாமலே இவற்றை செய்துள்ளார். சுமார் 4 கிலோ பாஷண சாமான்கள் வாங்கினர் போலும். 'நீங்க வாங்கி போட்ட பாஷாணங்கள் என்னென்னனு சொல்லுங்க' என்று நான் கேட்டேன்'. அவர் நவபாஷானங்களை பட்டியலிட்டு சொன்னார். கடைசியாக அதை எத்தனை ஜாமம் வைத்தீர் என்று நான் கேட்க 'மூணு' என்றார்.
என்னென்ன பாஷாணம் என்று பட்டியலிட்டு அதை மளிகை சாமான் லிஸ்ட் போல நாட்டுமருந்து கடையில் கொடுத்துள்ளார். 'ஏங்க, இதெல்லாம் கொடிய விஷமாச்சே, அதெப்படி மறுபேச்சின்றி கடைகாரர் பொட்டலம் கட்டி கொடுத்தார்? என்றேன். [எந்த வினாவும் எழுப்பாமல் இவற்றை கொடுக்க சித்தர் அந்த ஏற்பாடு செய்தாரோ என்னவோ..!]. 'தெரிலிங்க' என்றார். பதினஞ்சாயிரத்துகு கூட ஆச்சு என்றார். சரியா கணக்கு வெக்கலைங்க என்றர்.
மூலிகைகள் பத்தி எப்படி கத்துகிடீங்க, சுத்தி செய்யும் அளவுல அத்தனை பரிச்சயம் வந்தது எப்படிங்க என்றேன்.
'நான் தாராபுரம் பக்கம் போன போது, சாலையோரம் பழைய புத்தக கடையில் 'மூலிகை தாவரங்கள்' அப்படின்னு புத்தகம் கண்ணில் படவே, வாங்கியாந்தேன் அய்யா' என்றார். அத பாத்துட்டு சதுரகிரில இருந்து இலைகள பறிச்சுக்கிட்டு வந்தேன் என்றார். [இவருக்காக ஒரு புத்தகம் அங்கே கன்ணில்படுமாறு வைத்தாரோ என்னவோ..!]
எந்த தாவரம் எந்த இடத்துல இருக்குனு உங்களுக்கு எப்படி தெரியும்? தேடாம எப்படி முதல்தடவை நீங்களே சுயமா போயிடுவந்தீங்க?
'தெரிலீங்க. மடமடனு எல்லாம் பரிச்சி பயில போட்டுகிட்டேன். நான் பாஷாணம் பிரிச்சு வேலை செய்ய தொடங்கியதும் அடுத்து இன்னது சேக்கணும், இந்த முறையில சுத்தி செய்யணும்னு ஏற்கனவே நான் பழக்கப்பட்ட மாதிரி செய்துகிட்டு போனேன்' என்றார். நான் மட்டும் தான் இந்த பணி செய்தேன் என்றார். எத்தனை ஸ்புடம் போட்டேங்க ?
ஒரு புடம் போட்டு எடுத்தேன், 45 நிமிஷத்துல வந்துடுச்சுங்க என்றார்.
ஒரு புடம் போட்டு எடுத்தேன், 45 நிமிஷத்துல வந்துடுச்சுங்க என்றார்.
சிலை வார்ப்படம் எந்த வகையினை சேர்ந்தது என்று கேட்டேன். தானே மண்ணில் ஒரு முருகன் சிலை செய்து, அந்த அச்சில்தான் இந்த கரைசலை ஊற்றி சிலை வடித்ததாக சொன்னார். ஆனால் சிலைக்கு அவர் இன்னும் கண்ணை திறக்கவில்லையாம். அதாவது அதற்கு உயிர் தரவில்லை. சிலை சுமார் 13.5 அங்குலம் உள்ளது (1அடி 2 செமீ ). சிலை செய்த அதே நவபாஷான கலவையிலிருந்து எடுத்து கொஞ்சம் உருண்டைகள் (கோலி) செய்துள்ளார். (இங்கே உள்ள முருகன் சிலை மாதிரிக்காக போட்டுள்ளேன்.)
அவரே இந்த கலவையின் தீர்த்தத்தை தனக்கு பரிசோதனை செய்து கொண்டுள்ளார் என்றும், அது இதுவரை இவருக்கு எதிராக ஒன்றும் செய்யவில்லை, நல்லபடி உடல் ஆரோக்யமாக உள்ளது என்றார். இதுபோக ரசமணிகளும் செய்துள்ளார். இவருடைய பெரியப்பா மகனுக்கு பக்கவாதம் தாக்கப்பட்ட நிலையில், அவருக்கு இந்த நீரை தொடர்ந்து ஒன்றரை மாதங்கள் கொடுத்துவர, இப்போது கை விரல்கள் நன்கு அசைகிறது என்றார்.
'பெரிச்சியூர்' பைரவர் எபிசோடில் என்னுடைய சிறிய உரையாடலை பார்த்துவிட்டு, இந்த விஷயங்களை எல்லாமே என்னிடம் சொல்ல வேண்டும் என்று அவர் மனசுக்கு பட்டதாம். பல வருடமாக இவற்றை செய்து பழகிகொள்வதாகவும், அவருக்கு கைதேர்ந்த சித்த முறைகள் விளக்க முடியுமா என்பது சந்தேகமே என்றார். எல்லாம் தெரிந்துள்ளது ஆனால் விளக்கத் தெரியவில்லை.
அவருக்கு வேறு ரசாயன முறைகள் தெரியவில்லை என்று தெரிகிறது. அதை விளக்க போதிய கல்வி ஞானம் அவரிடம் இல்லை ஆனால் இவற்றை செய்துள்ளார் என்று சொல்கிறார். சிலசமயம் அனுபவஸ்தர் போல் பதில் அளிக்கிறார். 'சந்திரசேகர் அய்யா, உங்களுக்கு நேர்ந்த போகர் அமானுஷ்யம் போலதான் எனக்கும் ஆச்சுங்க' என்றார் அவர்.
நான் அவரிடம் 'உங்களுக்கு கோரக்கர்தான் வந்து வழிகாட்டி இருக்கணும். அந்த ஊர்லதான் அவர் சமாதி உண்டு.அவரும் போகருடன் நவபாஷான சிலை செய்த குழுவில் இடம்பெற்றவர். உங்களுக்கு அவருடைய ஆசிகள கிடைத்து இருக்கு' என்றேன். உங்களுடைய பூர்வ ஜென்மத்தில் நீங்கள் அந்த சித்தர் குழுவில் இடம்பெற்று இருந்ததால் சுத்தி செய்து காய்ச்சும் முறைகள் செய்யும்போது எல்லாமே நினைவில் வந்துள்ளது என்றேன். இவை சித்தர்களின் விளையாட்டுதான்.
எதற்காக அந்த உருண்டைகள் செய்தார் என்றால்... நாளை இதை யாரேனும் வந்து Lab test டெஸ்ட் க்கு கொடுத்து அனுப்பவேண்டும் என்று கட்டாயபடுத்தினால், முருகனின் சிலையை பின்னப் படுத்த கூடாது என்ற நோக்கத்தில் அந்த கரைசலில் கொஞ்சம் வைத்துகொண்டு 4 கிராம் எடையில் சில உருண்டைகள் செய்தார். இவற்றை அவர் செய்து பல காலங்கள் ஆகிவிட்டது, இப்போதுதான் என்னிடம் இந்த உண்மைகளை பகிர்ந்தார். சித்தர்கள் முன்ஜாகிரதாயக இவருள் செயல் படுத்தி்யுள்ளனர்..*!?
நீங்கள் செய்திருகும் பட்சத்தில் அதை இந்த கலியுக சூது-வாது உலகம் எப்படி பார்க்கும் என்று எண்ணுங்கள் என்றேன். உங்களை பலர் வந்து வியாபரமாக செய்து கொடுங்கள் என்றால் என்ன செய்வீர் என்று நான் கேட்டேன், 'அப்படி கட்டாய படுதுவாங்கள அய்யா?' என்றார் வெள்ளந்தியாய். உங்களை கடத்தவும் வாய்ப்புண்டு என்றேன். அப்படிப்பட்ட உலகில் அல்லவா நாம் வாழ்கிறோம் என்றேன்.
'உங்களுக்கு எப்போ தோணுதோ அப்போ என்னைபத்தி வெளியுலகத்துக்கு சொல்லுங்க' என்றார். அதனால்தான் தற்சமயம் இந்த பதிவில் இவருடைய விலாசம் கைபேசி தகவல் விவரங்கள் ஏதும் வெளியிடவில்லை.
காகபஜண்டர் கணித்த காலம் கண்முன் வருகிறது. பழனியில் புதிய நவபிஷாண லை நிருவப்படும். அச்சமயம் குரு ோகரின் தவம் கலையும். மீண்டும் வருவார்
பதிலளிநீக்குPlease share more details about Kaagapujandar predictions brother. Which book? Can you share the verses?
நீக்கு