ஸ்ரீ வரதராஜபெருமாள் கோயில் செய்முறை
தேவையானவை
பச்சரிசி 1kg, புழுங்கலரிசி 1kg, உளுந்து 1kg,
வெந்தயம் 25gm,
மிளகு 100gm,
ஜீரகம் 100gm,
சுக்கு 100gm,
பெருங்காயம், கருவேப்பிலை கொஞ்சம்
நெய் 800gm,
உப்பு
வெந்தயம் 25gm,
மிளகு 100gm,
ஜீரகம் 100gm,
சுக்கு 100gm,
பெருங்காயம், கருவேப்பிலை கொஞ்சம்
நெய் 800gm,
உப்பு
செய்முறை:
ஒரு மணி நேரம்
உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயம், அரிசியை ஊறவைக்கவும். இதை நைசாக அரைக்காமல் கொஞ்சம்
குருணையாக (கொரகொரப்பாக) அரைக்கவும். உப்பு சேர்த்து இரவு முழுவதும் வைக்கவும். காலையில் இந்த மாவில் தாளித்த கருவேப்பிலை பெருங்காயம் பொடித்த மிளகு ஜீரகம் சுக்கு முந்திரி மற்றும் நெய் சேரத்து, நன்கு கலந்து இட்லி வார்த்து எடுக்கவும்.
சாதாரண முறையில் ஒரு மணி நேரம் எடுக்கும். குக்கரில் சமைத்தால் 15 நிமிடம் எடுக்கும். கோயிலில் மந்தாரை இலையை இட்லிதட்டில் பரப்பிவைத்து அதில் ஊற்றி வார்த்து எடுப்பார்கள். வீட்டில் இட்லிதட்டில் ஊற்றும்முன் எண்ணெய்/நெய் தடவி ஊற்றவும்.
முதலில் 1-2 ஆழாக்கு போட்டு செய்து பார்த்தபின் அதிக அளவில் செய்யுங்கள். இன்னும் சில ஊர்களில், அரிசி - உளுந்து அளவு மாறுபடுகிறது. இதற்கு side dish தேவையில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக