'மனோன்மணியம்' என்ற நாடகநூல் எழுதிய பேராசிரியர் பெ. சுந்தரம்பிள்ளை அளித்த 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடலில் 'தெக்கணமு மதிற்சிறந்த திராவிடநற் றிருநாடும்' என்ற வரியில்,
திராவிடம் என்றால் தமிழ்நாடுதான் தமிழர்தான் என்று
இன்றும் பலபேர் சொல்லிக் கொள்வது சகஜமாகிவிட்டது. அதில் தெலுங்கு கன்னடம் மலையாளம்
துளு வகையறாக்கள் வராது என்றும் சொல்கின்றனர். தெக்கணம் என்றால் தென்னகமாம், திராவிடம் என்றால் தமிழ்நாடு தானாம்.
நியாயமாகப் பார்த்தால் தெக்கணமும்-திராவிடமும் எல்லை விஸ்தீரணம் குறைவுதான்.. தென்னாடு என்று வந்திருக்கணும்.
ஆதிசங்கரர் தன் சௌந்தரியலஹரியில் (பாடல்-75) ஞானப்பால் உண்ட 'திராவிட சிசு' என்று சொன்னார். "தயாவத்யா தத்தம் த்ரவிடஶிஶு ராஸ்வாத்ய தவ யத்".. அதாவது தனக்கு தேவியே பாலூட்டியதை விவரிக்கும் வரிகளாகும். அப்படிப்பார்த்தால் மலையாள நம்பூதிரி தன்னை 'தமிழ் பாலகன்' என்று சொல்வதாக பொருள் படுமா? அல்லது ஒருவேளை நம் 7ம் நூற்றாண்டு சீர்காழி திருஞானசம்பந்தரைப் பற்றி முற்காலத்து சங்கரர் புகழ்ந்தார் என்று வைத்துக்கொண்டால், 'தமிழ் பாலகன்' என்ற பொருள் சரியாக வரும். இன்றுவரை இதில் தெளிவு இல்லை.
திருவாசகத்தில் மணிவாசகர் சொன்னபடி 'தென்னாடுடைய..' சொல்லே சாலப் பொருந்தும்.. சீனத்தின் தெற்கே மேருவின் தெற்கே பாரதத்தின் தெற்கே தெக்கணத்தின் தெற்கே தென்னாடு வரை சொல்ல வேண்டும். அந்த குமரிக்கண்டத்தைதான் அவர் குறிப்பிட்டார். சங்கம் கூட்டிய பாண்டிய திராவிட நாடு அதுவரை பரந்துபட்டது என்று பெருமை கொள்ளலாமே தவிர அதைத்தாண்டி இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு இதன் உயர்வு எந்த மாற்றத்தையோ தாக்கத்தையோ உண்டாக்காது என்பதே யதார்த்தம். ஆகவே, ஆதிசங்கரர் சொல்வதைப்போல் 'திராவிடம்' என்றால் தென்னகம் என்ற பொதுப்பொருள் விளங்குகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக