கறிவேப்பிலை, முருங்கை, பொன்னாங்கண்ணி, கரிசாலை, ஆகியவற்றை ஒரு கைப்பிடி எடுத்து இலைகளையும் இளம்காம்பையும் உருவி ஒரு துணியில் பரப்பிப் போட்டு, அதை வெயிலில் வைத்து துணியால் மூடவும். சாயிந்திரதிற்குள் அது சருகு போல நன்கு காய்ந்து விடும். மிஞ்சிப்போனால் மறுநாள் வைக்கவும். மாடியில் வெயில் படுவதில்லை என்ற நிலை இருந்தால் வெறும் வாணலியில் லேசாக வறுத்துக் கொள்ளவும். மிக்சி ஜாரில் இலையை அழுத்தி அழுத்தி வைத்து பொடியாக அரைக்கவும். இல்லாவிட்டால் லேசில் அரைபடாது.
1/2 கப் துவரம் பருப்பு+ 1/2 கப் உளுந்து+ 1/2 ஸ்பூன் மிளகு சேர்த்து வெறும் வாணலியில் வறுத்து, அதை மிக்ஸியில் போட்டு இந்த இலைப்பொடியும் சேர்த்து, உப்பு போட்டு பொடியாக்கி டப்பாவில் மூடி வைக்கவும். தினம் காலையில் சாப்பாட்டின் போது ஒரு பிடி சுடு சாதத்தில் இந்த கீரைப்பொடி இரண்டு ஸ்பூன் போட்டு, உருக்கிய நெய் விட்டு பிசைந்து இரண்டு கவளம் சாப்பிடவும். அதன்பின் குழம்பு, ரசம், மோர் சாதம் உங்கள் விருப்பம்போல் உண்ணுங்கள். தினம் அத்தனை கீரையும் உண்ட சத்து கிடைக்கும். எங்கள் வீட்டில் அப்படித்தான் செய்கிறோம்.
இதில் கொத்துமல்லி சேர்த்தால் சுவை இருப்பதில்லை, அது பச்சை துவையலுக்குத்தான் சரிப்படும். தனியாக மிளகாய்ப்பொடியுடன் கொத்துமல்லி சேர்த்து பொடியாக்கி இட்லி/தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக உள்ளது. தினம் நெய் ஒரு ஸ்பூன் உருக்கி சாப்பிடுங்கள். அது LDL கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்தும். HDL நல்ல கொழுப்பை உயர்த்தும்.. நெய் வேண்டாம் என்றால் எள் எண்ணெய் ஊற்றிக்கொள்ளுங்கள். இத்தனையும் செய்து உணவே மருந்தாக உட்கொண்டு வரும்போது மாமிசம் உண்டால், பாடுபட்டு உடலைப் பேணியது வீணாய் போகும். ஏன், மாமிசம் தின்னா குறைஞ்சா போகும்? என்று மல்லுக்கு நிற்போரும் உண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக