---------------------
மகுடேசனென அருள்பொழியும் மலைக்கொழுந்தீசர்
மதுரபாஷினியென பன்மொழியருளும் திரிபுரசுந்தரி
கிளர்புனல் காவிரியாள் கிழக்குமுகம் வட்டமடித்து
கலசமுனி திருக்கரத்தால் ஜீவநதியென பொங்கியோட
கொங்குதல சுந்தர தேவாரம் பாடப்பெற்ற ஆதியனே
வைரமணி மின்னும் திருப்பாண்டிக் கொடுமுடியானே
அழிவில்லா ஓங்காரமென நிலைத்த சுயம்புரூபனே
அகம்நோக்கி இவ்வடியவனை உன்னுள் கொள்வாய்!
ஓம் நமோ நாராயணாய!
--------------------------
மல்லாண்ட திண்தோள்களோடு சயனத்தில் கிடப்பவனே
மலர்ப்பங்கய நாபியனே திருப்பாண்டி வீரநாரயணனே
மங்கலங்கள் அருளும் பூமாது உறையும் கொடுமுடியில்
மனங்குளிர பாடுகிறேன் சேவடிகளுக்குப் பல்லாண்டு!

-------------
பிரம்மத்தை உரைக்கும் நான்முகன் வடிவே
பரப்பிரம்மமாய் ஓங்குவுயர் நிலைத்தவனே
பரத்வாஜதல தென்கயிலாய கொடுமுடியில்
பச்சை வன்னிமரம் கொண்டவனே போற்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக