ஆதியில் சிதம்பரத்தில் ஈசன் நவபஞ்ச (14) முறை தன் டமருவை அடித்தார். அதிலிருந்து எழுந்த சப்தங்கள்தான் தேவமொழி (எ) சம்ஸ்கிருதம். சரி, அந்த சப்தங்கள் என்னவாகயிருக்கும்? ஒவ்வொரு முறை அடிக்கும்போதும் கோர்வையாக அதிலிருந்து சப்தங்கள் வெளிப்பட்டது. நாமும் அவற்றை பூஜை மந்திரத்தில் கேட்டுள்ளோம். ஆனால் இதுதான் அது என்று பலருக்கும் தெரியாது.
"அ.யி.உ.ண்; ரு.லு.க்; ஏ.ஓ.ங்; ஐ.ஒள.ச்;ஹ.ய.வ.ர.ட்; ல.ண்; ஞ.ம.ங்.ண.ந.ம்; ஜ.ப.ஞ்; க.ட.த.ஷ்; ஜ.ப.க.ட.த.ச; க.ஃப.ச.ட.த.ச.ட.த.வ்; க.ப.ய்; சஷ.ஸ.ர்; ஹ.ல்"
இப்போது நினைவுக்கு வருதா? இதுதான் மகேஸ்வர சூத்ரம். இதில் ஏன் 'ழ'கரம் இல்லை? ஏனென்றால் தமிழ் என்பது தன்னுடைய மற்றொரு படைப்பு, அது மனுமொழி. டமருவில் வெளிப்பட்ட சுயம்புவடிவ தேவமொழி சப்தங்களை ஆதாரமாகக்கொண்டு, அதிலிருந்து சில வடமொழி சப்தங்களை நீக்கி தனியே திராவிடதேச மொழியை உருவாக்கினார். இரண்டுமே செம்மையான பூரண மொழிகள்தான். பதஞ்சலியை சமஸ்கிருதத்திற்கு வியாகரணம் எழுதவைத்து, அகத்தியரை தமிழுக்கு இலக்கணம் எழுதுமாறு பணித்தார்.
"ஐந்திறம்” நிறைந்த தொல்காப்பியம் என்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். அது என்ன? இலக்கணம் கூறும் தொன்மையான காப்பியம். இத்தனை செய்த ஈசன், விஸ்வகர்ம மயனுக்கு ஒரு வேலை தந்தான். சமஸ்கிருதம்-தமிழ் மொழிகளுக்கான பொது இலக்கண நூல் எழுதும் பணி. அதெப்படி இரு மொழிகளும் சமனாகும்? வைவஸ்வத மன்வந்திரத்தில் ஒரே மொழிதான் பேச்சு மொழியாக இருந்தது.
வேதகால தமிழ் என்று நிலவ, அதன் பிற்பாடு பிராகிரதம், பாலி என்று பல மொழிகள் பிறந்தது. புலம் பெயர்ந்த பிறகு அங்கிருந்து புது மொழிகள் பிறந்தன. அப்படித்தான் தமிழின் தொன்மைக்கு 'சுமேரிய' (ஈராக்) தமிழை பிடித்துக்கொண்டுள்ளனர். அதற்கும் முந்தையது கீழடியின் அடியிலேயே உள்ளது. வடமொழிதான் தமிழ் என்றால் ஏன் வேதங்களும் மந்திரங்களும் நமக்கு புரிவதில்லை? மந்திர சப்தங்களின் உச்சரிப்பு நிலைகள் தமிழைப் போல் இல்லையே? உதாரணம்: க, க2, க3, க4, Ka kka Ga Gha.
தமிழ்மொழி எத்தனை பழமை என்பதை இன்னொரு 'நீண்ட' பதிவில் பார்ப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக