இந்தப் பதிவு பகுத்தறிவாளர்களுக்கும், ஆரிய மொழி எதிர்பாளர்களுக்கும், சுயம்பு தத்துவத்தை எதிர்க்கும் முற்போக்குவாதிகளுக்கும் ஏற்புடையதல்ல. இவை சத்தியமாக அவர்களுக்குப் புரியாது.
இப்படத்தில் விராட் பரப்பிரம்மம் பிரம்மனைப் படைத்து சுயம்பு தேவமொழியாம் சமஸ்கிருதம் படைத்து, பல மனுகாலங்கள் உருண்டோடின. நடப்பு மன்வந்திரம் ஓட்டத்தில் சதுர்யுகங்களின் சுற்றில் கிருத யுக காலத்தில் ரிஷிகள், அரக்கர்கள் இருந்தனர். அதன்பிறகு மேல்தட்டு பரிணாமம் நரசிம்மர் காலத்திலிருந்து உயர்கிறது. அதுவரை stone age எனலாம். அதன்பின் கிருத இறுதியிலிருந்து புத்தி ஞானம் உலோகம் கருவிகள் எல்லாம் படிப்படியாக உயர்ந்து இன்றுவரை வந்துள்ளோம். ஒவ்வொரு யுகத்தின் வருடங்கள் எவ்வளவு என்றும் தந்துள்ளேன். ஹிரண்யன்/பிரஹலாதன் காலம் முதல் மொழி மூலம் பக்திசேவை தொடங்கியது என்று வைத்துக்கொண்டாலும், தமிழின் வயது என்ன என்பதை நீங்களே கணக்கிடுங்கள். படத்தில் இராவணனுக்கும் இராமனுக்கும் ஏன் இம்மா தூரம்? என்று குழம்ப வேண்டாம். இராமன் சின்னப் பையன். இராவணன் அவனைவிட 43 தலைமுறைகள் பெரியவன்.
இந்த கணக்கு நமக்கு பலலட்ச வருடங்களாக வியப்பாக இருக்கும். ஆனால் இதுவரை பிரம்மனின் ஒரு நாளில் பகல் பொழுதுமட்டும் முடிந்துள்ளது. சமஸ்கிருதமும் தமிழும் சொடக்கு போடும் காலப்பிரமாணத்தில் படைப்பாயின என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்னொரு சமயம் நேரம் கிடைத்தால் ஆழமாகப் பேசுவோம். அதுவரை நான் வரைந்த இந்தப் படமே மொழியின் தொன்மையைப் பேசும்.😃
எந்த மொழி தொன்மையானது என்று சண்டைபோட இனி ஏதுமுண்டோ? கற்காலம் முதலே தமிழ் உள்ளது என்று ஔவை சொன்னது உண்மைதானே? இது உங்களுக்கே இந்நேரம் புரிந்திருக்கும். நாம் சமஸ்கிருதத்தை சந்திக்கு இழுப்பது ஈசனையே நிந்தித்த பாவதிற்கு சமம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக