பேயன் சிவனார் மலைப்பழமே
பஞ்ச அமிருதம் மலையனுக்கு
முகுந்தனான மாலவனுக்கோர்
மொந்தன் பழமே ஏற்புடையது
பிரம்மன் பெயரில் பொன்பழம்
பூவில் அமர்ந்த பூவனுமாமே
மஞ்சள் கற்பூரம் சுவை மணக்க
மரபின் உணவே மென் ரசுதாளி
மிரட்டும் கோட்டான் சிங்கம்பாரு
மருந்தில் மிகுவகை பழமேயுண்டு
ஏலம் நேந்திரம் பச்சை என்பார்
ஏற்க உகந்தது எவ்வயதினர்க்கும்
தினமுண்ண போகும் மலச்சிக்கல்
திரட்டும் மாவும் நார்சத்துகூடும்
கனிந்தபழம் திங்க பேதியே நிற்கும்
கனித்தோல் கட்ட படையே ஓடும்
பார்க்கும் இரையில் இறைப் பாரு
போற்றத் தகுந்த மும்மூர்த்திகளே!
பஞ்ச அமிருதம் மலையனுக்கு
முகுந்தனான மாலவனுக்கோர்
மொந்தன் பழமே ஏற்புடையது
பிரம்மன் பெயரில் பொன்பழம்
பூவில் அமர்ந்த பூவனுமாமே
மஞ்சள் கற்பூரம் சுவை மணக்க
மரபின் உணவே மென் ரசுதாளி
மிரட்டும் கோட்டான் சிங்கம்பாரு
மருந்தில் மிகுவகை பழமேயுண்டு
ஏலம் நேந்திரம் பச்சை என்பார்
ஏற்க உகந்தது எவ்வயதினர்க்கும்
தினமுண்ண போகும் மலச்சிக்கல்
திரட்டும் மாவும் நார்சத்துகூடும்
கனிந்தபழம் திங்க பேதியே நிற்கும்
கனித்தோல் கட்ட படையே ஓடும்
பார்க்கும் இரையில் இறைப் பாரு
போற்றத் தகுந்த மும்மூர்த்திகளே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக