மஞ்சள்நில அகமுடையாளே மகாமாரியே
மங்காத வாழ்வளிக்கும் அய்யம்பாளயத்தாளே
சஞ்சலம் தீர்ப்பாய் மூத்தவளே ஆதிசக்தியே
சந்ததிகள் காப்பாய் எம் சேயோளே பரையே!
மஞ்சள்பூசி பொன்பொலிவான பிரபையாளே
மாட்சிமையோடு கொலுவிருக்கும் நிலமகளே
மங்கலப் பொருளெட்டும் தரும் பெண்ணாளே
மாபுனல் காவிரியின் மகிமை உயிர்ப்பவளே!
மஞ்சளும் நெற்கதிரும் கரும்பும் மருத நிலத்தில்
மூன்று போகமும் மணம்வீச செழிப்புடன் தந்து
முன்னூறு காலம் காத்துவரும் குலதெய்வமே
மதிப்பான சக்தியே அபயம்தந்து இரட்சிப்பாயே!
-எஸ்.சந்திரசேகர்
மங்காத வாழ்வளிக்கும் அய்யம்பாளயத்தாளே
சஞ்சலம் தீர்ப்பாய் மூத்தவளே ஆதிசக்தியே
சந்ததிகள் காப்பாய் எம் சேயோளே பரையே!
மஞ்சள்பூசி பொன்பொலிவான பிரபையாளே
மாட்சிமையோடு கொலுவிருக்கும் நிலமகளே
மங்கலப் பொருளெட்டும் தரும் பெண்ணாளே
மாபுனல் காவிரியின் மகிமை உயிர்ப்பவளே!
மஞ்சளும் நெற்கதிரும் கரும்பும் மருத நிலத்தில்
மூன்று போகமும் மணம்வீச செழிப்புடன் தந்து
முன்னூறு காலம் காத்துவரும் குலதெய்வமே
மதிப்பான சக்தியே அபயம்தந்து இரட்சிப்பாயே!
-எஸ்.சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக