பஞ்சபூதத் தலங்கள் போக இன்னபிற ஷேத்திரங்களான வடகாசி, தென்காசி, திருக்கடையூர், சீர்காழி, திருத்தணிகை, பழனி, சதுரகிரி, பொதிகை, ஆவுடையார் கோயில், திருப்பதி, திருக்கழுக்குன்றம், திருவொற்றியூர், திருபரங்குன்றம், திருவாரூர், திருவிடைமருதூர், திருப்புவனம், இங்கெல்லாம் ஒரு நுணுக்கமான உண்மை மறைந்துள்ளதை இன்றுதான் தெரிந்து கொண்டேன். அதை இன்றுதான் போகர் அறியவைத்தார் என்று சொல்வேன்.
கடந்த ஆண்டில் எனக்கு ஒரு சொப்பனம். பூமியிலிருந்து திடீரென்று உந்துவிசை என் பாதத்திற்கு அடியிலிருந்து மேல்நோக்கி என்னைத் தள்ளவும், மேலிருந்து ஏதோ என்னை இழுப்பதுபோலவும் தெரிந்தது. பறந்து போய்விடாமல் கெட்டியாக பிடித்துக்கொண்டேன். பிறகு வேப்பமரத்தின் அடியில் நின்று பேசிக்கொண்டிருக்கும்போதே மீண்டும் அதே உணர்வு. கொஞ்சம் எழும்பி விட்டேன். கிளைகளை பிடித்து விட்டேன். மெல்ல மரத்திலிருந்து இறங்கி வந்தேன். மூன்றாவது முறை வெட்டவெளியில் இருக்கிறேன். அப்போது அதிக விசை என்னை தூக்கிட, ஜெட் வேகத்தில் நான் ஆகாயத்தில் உரியப்படுகிறேன். டைஃபூன் சூறாவளி funnel போல் நீளமாக இருக்குமே அதைபோல் அந்த குழாய் பாதையில் அதிவேகமாகப் பயணிக்கிறேன். வான் மண்டலத்தில் எங்கோ குறிப்பிட்ட ஓர் இடத்தில் இறங்குகிறேன். காற்று வெப்பம் குளிர் ஏதுமில்லை, எந்த சலனமும் இல்லாத ஓர் இடத்தில் அமைதிதான் நிலவியது. இது பூமிப்பகுதி இல்லையே என்று உணர்ந்து கொண்டபோது அச்சத்தில் விழித்து எழுந்தேன். அன்று நடந்த சொப்பனத்தை அப்படியே மறந்துவிட்டேன். இன்று ஏனோ திடீரென அவ்வனுபவம் விழித்துக்கொள்ள அதற்கான விடையும் தெரிந்தது.
நான் போன பாதை என்ன? பரவெளியில் வேற்று கிரகங்களை இணைக்கும் காந்த குழாய்வழி. Wormhole என்று சொல்வார்களே அந்த ஆகாய சுரங்கம்தான் இது. ஆனால் Balckhole என்று சொல்லும் கருந்துளை அல்ல என்பதை நிச்சயமாக சொல்வேன். நான் பூமியிலிருந்து புறப்பட்ட தலம் எது என்று அறியமுடியவில்லை. சித்தர்கள் எல்லோருமே குறிப்பிட்ட பாகையில் உள்ள தொன்மையான சிவதலங்களையே நாடியது ஏன் என்ற விடை தெரிந்தது. காலப்பெருவெளி பயணத்திற்கு உகந்த யுக்திதான் இது!
போகரும் இப்படித்தான் கிரகங்களுக்குப் பயணித்தார் என்பதை புரிந்து கொண்டேன். எனக்குப் புரியவைக்க demoவில் என்னை வைத்தே காட்டி விளக்கினார் போலும். கெவுன குளிகை ஏதுமின்றி இலவச கல்விச் சுற்றுலா முடிந்தது. ஐன்ஸ்டீனும், ஸ்டீபன் ஹாக்கிங்கும் தோராயமாகச் சொன்னதை பயிற்சியில் நேரடியாகவே புரிந்து கொண்டத்தில் ஒரே மகிழ்ச்சி. சிவ பிரபஞ்சம் மர்மம் நிறைந்த ஆழ்கடல் போன்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக