நான்
காலையில் செய்தித்தாள் வாங்கப்போகும் கடைக்கு 65 வயதான மூதாட்டி வருவர்.
அவர் தினத்தந்தி பேப்பர், ஒரு
பீடி கட்டு, உதிரியாக
3 சிகரெட்டு
என எல்லாம் சேர்த்து ரூ.50 க்கு வாங்குவார். அவர் வாங்கும் அரை லிட்டர் பால் விலை
ரூ.23தான்.
ஆனால் அதைவிட இந்த புகைப் பொருட்களின் விலைதான் அதிகம். ‘பீடி கட்டுக்கு ப்ரீ
தீப்பெட்டி நேத்து தரலியே... எங்கேனு வூட்ல என்ன கேக்க சொல்ல நியாபம் வந்துச்சு’ என்று கடைக்காரரிடம்
சொன்னார். டாஸ்மாக்கில் இதுபோல் எத்தனை மூதாட்டிகள் வந்து வாங்குவார்களோ
நமக்குத் தெரியாது. கல்லூரிப் பெண்கள் வாங்கி அங்கேயே சரக்கு அடிக்கும்
படத்தைத்தான் பார்த்துள்ளோம்.
இந்த
மூதாட்டியின் முகத்தில் எப்போதும் ஒரு சோகம். அது கணவனுக்கா மகனுக்கா மாமனாருக்கா? கணவன் சீக்காளியா அடக்கியாள்பவரா? எதுவும் தெரியாது. இப்படியும் சமூகத்தில் பெண்கள்
வாய்மூடிக்கொண்டு தினமும் கடமையைச் செய்கிறார்கள். இவர்களுக்கே மூப்பு வந்தும்கூட
கணவன் போடும் சோற்றுக்காக தரும் நிழலுக்காக இதற்கெல்லாம் கட்டுப்படுகிறார்கள். அந்தோ பரிதாபம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக