முகநூல் வாயிலாக வரும் கட்டுரைகளில் முரணான செய்திகளை சிலர் ஆர்வக்கோளாறில் பதிவிடுவதுண்டு. அப்படியொன்றுதான் அண்மையில் நான் படித்த உத்தரகோசமங்கை பற்றிய செய்தி.
'பல யுகங்களுக்கு முன்பு பூமியில் இலவந்திகைப்பள்ளி (எ) உத்தரகோசமங்கை தலத்தில்தான் முதன்முதலாக இறைவன் சிவபெருமான் மங்களநாதராக மரகதக்கல்லில் வடிக்கப்பெற்ற நடராஜராக, இறைவி மங்களாம்பிகையாக எழுந்தருளினர் என்றும்; உமையவளுக்கு சிவபெருமான் வேத ரகசியங்களை உபதேசித்த தலம் என்றும்; இங்குதான் இராவணன்-மண்டோதரி திருமணம் நடந்ததாகக் கல்வெட்டு உள்ளது என்றும்; நவகிரகங்கள் உருவாகும் முன்பே இத்தலம் தோன்றியதாகும்' என்றும் அப்பதிவில் செய்தி இருந்தது.
இப்பிரபஞ்சத்தில் கிரகங்கள் எல்லாமே சூரிய சந்திரர் தோன்றிய காலத்திலிருந்தே இருக்கின்றன. நவகிரகங்கள் ஒன்றையொன்று பார்த்துக் கொள்ளாத வகையில் சன்னதியில் வழிபடுவது வேண்டுமாயின் பிற்காலத்தில் இடைக்காடர் முறைப்படுத்தியதாக இருந்திருக்குமே தவிர, கிரகங்கள் உருவாகும் முன்பே இத்தலம் வந்தது என்ற செய்தி புதிதாக இருக்கிறது.
நவகோள்களில் சனீஸ்வரனின் பாதிப்பு இராவணனுக்கு அதிகமாக இருக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் சொன்னது. இதனை முறியடிக்க நவகோள்களை சிறைப்பிடித்தான். அவர்களை தன் சிம்மாசனத்தின் படிகளாக அமைத்து மிதித்து ஏறிச்சென்றான். பூவுலகில் மனிதர்களின் ஊழ்வினைக்கேற்ப திசாபுக்திப்படி யோகம்/தண்டனை என எதுவும் தரமுடியாமல் கட்டுண்டுக் கிடந்தனர். அங்கு வந்த நாரதர், 'இராவணா! இவர்களைக் குப்புறப் படுக்கவைத்து ஏறுவது உன் வீரத்திற்கு அழகல்ல' என்று கூற, இராவணன் உடனே இவர்களைப் புரட்டிப் போட்டான். போட்டதுதான் தாமதம் சனீஸ்வரனின் பார்வை இவன்மீது விழ உடனே எழரைச்சனி பீடித்தது. அதன் பிறகு இவனுக்கு அவப்பெயர்களும் தோல்விகளும் வந்து இராமன் இவனைப் போரில் வீழ்த்தினான்.
இதை எதற்குச் சொன்னேன் என்றால், புராண/இதிகாச/வரலாற்றுப் பதிவுகளைப் பலபேர் படித்தும் பகிர்ந்தும் வரும் நிலையில் தல புராணத்தில் குறிப்பிடாத வாய்மொழியாக பரப்பப்படும் சில ஐதீகக் குறிப்புகளை உயர்வு நவிற்சியாகச் சொல்லும்போது முரணான அச்செய்தி தவறாகவே கிரகிக்கப் படுகிறது. “மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது" என்னும் பழமொழியை உள்ளபடி நேரடியாகவே பொருள் கொள்வோமாக!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக