About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வியாழன், 1 டிசம்பர், 2016

தங்க பாரதம்!


பண மதிப்பு ரத்தை அடுத்து தங்கத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் 62.5 பவுன் நகை வைத்திருக்கலாம். திருமணமாகாத பெண்கள் 31.25 பவுன் நகை வைத்திருக்கலாம். ஆண்கள் 12.5 பவுன் நகை வைத்திருக்கலாம். இந்த நகைகள், கணக்கு காட்டிய பணத்திலிருந்து வாங்கப்பட்டிருந்தால், விவசாய வருமானத்தில் இருந்து வாங்கப்பட்டிருந்தால் வரி விதிக்கப்படாது. பாரம்பரிய நகைகளுக்கும் வரி விதிக்கப்படாது:- மத்திய அரசு அறிவிப்பு.
இதெல்லாம் பழைய சட்டம்தான், திருத்தமில்லை என்கிறது மத்திய அரசு. இதை அமலாக்கம் செய்யவும், பணம் முடங்குவதை தடுக்க வருமானவரித்துறை புதுசா என்ன கபளீகரம் செய்யப்போகுதோ? வெள்ளி பஸ்பம், தங்கபஸ்பம் வித்தவங்களை /தின்னவங்களை பற்றி ஏதும் சொல்லலை.
அடுத்து உடனே வரவுள்ள அதிரடிகள் என்ன? நிலம் உச்சவரம்பு, பினாமி சொத்துகள், வீட்டு வாடகை உச்சவரம்பு சட்டம், போன்றவைகளில் கடுமையான அமலாக்க திருத்தங்கள் வரவுள்ளனவாம். வந்தாதான் சரி! வீட்டு ஓனர் தன் குடும்பம் நடத்த ஆகும் ஒரு மாத செலவை வாடகையா இல்ல இப்போல்லாம் வசூல் பண்றாங்க. 
பொற்கொல்லர்களிடம் தங்கம் கையிருப்பு, யார் யாருக்கு எத்தனை பவுன் செய்துகொடுத்தனர், PAN அத்தாட்சி நகல் பெற்றுக்கொண்டு நகை செய்து கொடுத்தார்களா என்று விபரம் கேட்டு இம்சிக்காதவரை சரி. வருமானத்திற்கு சம்பந்தமில்லாமல் இனி தங்கத்தை அதிகமாய் முடக்கிக்கொள்ள முடியாது. அப்படி தேவைபட்டால் அதிகப்படியான தங்கத்திற்கு வரி கட்டிகொள்ள வேண்டியதுதான். ஆனால் கல்யாண சீர், பூர்விக குடும்ப நகைகள், சேமிப்பில் வாங்கிய நகைகள் எல்லாம் இந்த இக்கணக்கில் வராது. இதன் காரணமாக ஒரு கட்டத்தில் தங்கம் விலை வீழ்ந்து கட்டுக்குள் வர, கோடிக்கணக்கான கீழ் நடுத்தர மக்கள் தங்கம் வாங்க ஏதுவாக இருக்கும். இது 3 மாதம் கழித்துதான் பலன் தரும். இரண்டு வருடங்களுக்கு முன்பே gold bond scheme வந்தது இதன் முன்னோடி. ஒரு குடும்பத்தில் எவ்வளவு தங்கம் இருக்கலாம் என கிட்டத்தட்ட ரேஷன் முறை வருகிறது. அனைவரும் இதனால் பயன்பெறுவர். இனிதான் பொற்கொல்லர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு... படு பிஸிதான்.

இன்றைக்கு ஜனத்தொகை 125 கோடி என்பதில் குறைந்தது 90% நடுத்தரம், 5% கீழ்தட்டு, 5% மேல்தட்டு. ஆக மொத்தத்தில் ஒரு 25% சிறார்+பணக்கார்கள் என்று நீக்கிவிட்டு பார்த்தாலும், என்ஜியது 75%. ஆக, விலை வீழ்ச்சி ஆனால், சுமார் 90 கோடி பேர் ஓராண்டில் தலைக்கு குறைந்த பட்சம் 5 கிராம் வாங்கினாலே, நினைத்து பார்க்க முடியாத அளவில் பொற்கொல்லர் தொழில் வாய்ப்பு கணிசமாகும். அந்த இறைவன் அருள் புரிவார்.



திங்கள், 28 நவம்பர், 2016

ரசவாத சித்தர் தங்கம்


பசுவின் கோமியம் அன்றாடம் வீணாகிப்போகிறது. பஞ்சகவ்வியம் செய்யவும். வீடு தெளிக்கப் பயன் படுத்துவதற்கும், சித்த வைத்தியத்திலும் போக வேறெதுக்கும் அன்றாடம் இது பயன்படுவதாய் தெரியவில்லை. ஆனால் இந்த கோமியம் செம்பை பொன்னாக்கும் வல்லமைப் பெற்றது. ஆச்சரியத்தோடு பார்கிறீங்களோ?
அதுபோல், ஆழ்கடலிலுள்ள அடர் பாசிகளும் இரும்பை /செம்பை, தங்கமாக்கும். இதிலுள்ள பாக்டீரியாக்கள் முதலில் நீர்ம தங்கமாய் மாற்றி பிறகு திடப்படுத்துகிறது.
ஓரிலைத் தாமரையின் வேறை ஒரு ஜான் அளவு வெட்டி, அதில் பழுக்க காய்ச்சிய குண்டூசியை (ஒரு ஜாமம் வரை) செருகி வைத்து எடுத்தால், அது செப்பு ஊசியாக மாறியிருக்கும்.
இதுபோல எத்தனயோ தாவரங்கள் செம்பை தங்கமாக்க எளிமையாய் உதவுகிறது என்பது சித்தர் பாடல்களில் உள்ளது. செம்பை தங்கமாக்க அவர்கள் பயன்படுத்திய வஸ்துதான் முப்பூ. இதனோடு பச்சிலை சாற்றை பிழிந்து அரைத்து அதை அந்த செம்பின் மீது பூசி, அதன் மீது மண் சீலை அப்பி, ஒரு ஜாமம் வரட்டி புடத்தில் வைத்து எடுத்தால் பத்தரை மாற்று பொன் கிட்டும். யாருக்கு? எல்லோருக்கும் அல்ல. தன்னலம் கருதாமல், பரோபகார எண்ணம் கொண்டு தர்மநெறி வாழ்வபவர்களுக்கு மட்டுமே வாய்க்கும் என்று சொல்கிறார். பலர் கையில் இருக்கும் பணத்தை கொட்டி, மூலிகைகளை பாஷாண்ங்களை அதிக விலை கொடுத்து வாங்கி தங்கம் செய்கிறேன் என்று முயன்று தோல்வி கண்டோரே அதிகம். அது சித்தர்களுக்கான 'பிறவித்' தங்கம் என்கிறார் போகர். கதிர்வீச்சு பௌதிக முறையில் இதை 'டிரான்ஸ்முடேஷன் ஆஃப் மெடல்ஸ்' என்போம்.
வலிமையான தங்க உலோகத்தை சங்குப்பூ தாவர சாறு கரைக்கும் வல்லமை பெற்றது. சூடு படுத்த அது பஸ்மம் / தவளம் போல் வெண்மை நிறமாய் மாற்றிடும். சில சமயம் கீழ்கண்ட மூலிகைகளின் தைலம் கூட அதில் பூசி வாத வேலை செய்யலாம்.
மேலே சொன்ன அந்த அதிசய மூலிகைகள் எவை? அவை: பொன்முசுட்டை, பொன்னின்னாவாரை, பொன்னூமத்தை, சிறியாநங்கை, பெரியாள், கருப்பு கோடாலி, சிவப்பு கொடிவேலி, போன்றவை. இதுபோல இன்னும் நிறைய உண்டு. இதற்கு மூலிகை பரிச்சயம் இருந்தால்தான் சரிப்படும். இதில் தோல்வி கண்டோரை பார்த்து "தங்கம் பண்றேன்னு பொய் சொல்லிகிட்டு திரியரானுங்கோ" என்று இன்றும் ஏளனமாய் பேசுபவர்கள் உண்டு. தங்களுக்கு கிடைக்காத போது ஒரு ஏக்கம் /கோபம் வருவது ஞாயம்தானே !
இவையெல்லாம் 'போகர் 7000 -சப்தகாண்டம் ஒரு பார்வை' (லியோ புக் பப்ளிஷர்ஸ்) என்ற நூல் நான் எழுதும்போது விரிவாகத் தெரிந்து கொண்டேன். நான் தங்கம் செய்ததில்லை, செய்ய எண்ணமில்லை, சற்றும் ஆர்வமில்லை. அதுவாக வாய்க்கப்பெற்றதால் என்னிடம் சித்தர் தங்கம் வந்தது.
எல்லோரும் எங்க கிளம்பிட்டீங்க? மூலிகையை தேடிப் பறிப்பதற்கா?

வியாழன், 24 நவம்பர், 2016

Divine photo -3

Yesterday I participated in the gruhapravesam function of my cousin in Bangalore. When I clicked the homam, there came a mesmerizing photo. Lord Muruga wearing a garland, holding a sharp Vel, hair style turban, peacock neck and head are neatly visible. Om Muruga! For the 4th successive time, gods have posed for my camera.

வெள்ளி, 18 நவம்பர், 2016

விஸ்வகர்மா புரோஹிதர்களின் உரிமைகள்




இளங்கோவின் சிலப்பதிகாரம் பாடல்கள் வாயிலாக சைவ சமய திருமணங்கள் எல்லாமே அந்தணர்கள் மறை ஓத நடந்து வந்ததைப் படித்துள்ளோம். அதில் அக்னி வளர்க்கப்படாத எந்தவொரு சடங்கையும் நம் சமயத்தில் கேள்விப்பட்டதில்லை. (சீர்திருத்தத் திருமணத்தில் கூட பகுத்தறிவு நாத்திகர்கள் தங்களை அறியாமலே தமிழ் மரபு என்று சொல்லி குத்துவிளக்கு ஏற்றி அக்னியை ஆவாகனம் செய்தபின் மங்கல நாண் கட்டச் சொல்லுகிறார்கள்.)
பண்டையகாலம் முதலே மறை ஓதும் அந்தணர்கள் வந்த படியால், ஏனைய வர்ணத்தவர்கள் மற்றவர்களை அழைக்கும் பழக்கம் குறைந்துபோனது அல்லது அறவே இல்லை என்று சொல்லலாம். இன்று விஸ்வகர்மா குல குடும்பங்களில் அதே குலத்து பண்டிதர்களை முன் வைத்து திருமண சடங்குகளை செய்விக்கும் முறை குறைந்து வந்துள்ளது.
விஸ்வகர்மா புரோஹித ஆச்சாரிகளின் உரிமையை நிலைநாட்டி சுமார் 200 வருடங்கள் முன்பே இது குறித்த வந்த ஒரு சுவாரஸ்யமான கோர்ட் தீர்ப்பை இங்கு பதிவிடுகிறேன்.
- எஸ். சந்திரசேகர்

வியாழன், 17 நவம்பர், 2016

Quiz - இங்கு பதிவிட்ட படங்களின் பின்னணி என்ன?

சிவபெருமான் தன்னுடைய தேகத்தின் இடபாகத்தை சக்தியோடும், திருமாலோடும் பங்கிட்டுள்ளபடி இரண்டு படங்கள் உள்ளது. இதில் ஏன் பிரம்மாவோ இந்திரனோ சூரியனோ சரஸ்வதியோ லக்ஷ்மியோ இடம் பெறவில்லை? அப்படியான படங்கள் பார்த்துள்ளோமா?
இதன் தாற்பரியம் பற்றி தெரிந்த விஸ்வகர்மா அன்பர்கள் கமென்ட் செய்யலாம். உங்களில் யாருடைய விடை சரி என்று நாளை கழித்து பார்க்கலாம். பின்னர் வரவுள்ள பதிவுகளில் இதைப்பற்றி ஆழமாகப் பார்க்கவுள்ளோம்.


Quiz- வினாவுக்கான விடை
------------------------------------------
கடந்த பதிவுகளில் சுயம்பு விஸ்வகர்மாவின் தோற்றம் பற்றி பார்த்தோம். அவரிலிருந்து வெளிப்பட்ட மற்ற ஜீவன்களும் அவரும் வெவ்வேறு இல்லை. அவரே எல்லாமாக உருவாக்கிக்கொண்டுள்ளார்.
சத்யோஜாத, வாமதேவ, தத்புருஷ, அகோர, ஈசான என்பவையே ஐந்து முகங்கள். இதில் பிரம்மா விஷ்ணு இந்திரன் ருத்திரன் சதாசிவம் தோன்றினார்கள். இதைத்தான் ஐந்து புத்திரர்கள் என்று பார்த்தோம்.
சக்திகளில் : இச்சா சக்தி லக்ஷ்மி (வாமதேவ), கிரியா சக்தி பார்வதி (சத்யோஜாத), ஞான சகத் சரஸ்வதி (அகோர), முகங்களிருந்து சிருஷ்டிக்கப்பட்டு வெவ்வேறு விதமாகப பிறந்து உருவெடுத்தனர். இவர்கள் எப்படியெல்லாம் வந்து பிறந்தனர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
விஷ்ணுவும் பார்வதியும், வாமதேவ முகத்திலிருந்து பிறந்ததால் அவர்கள் உடன் பிறப்புகள். சிவன் தன் இடப்பாகத்தை சக்திக்கு அளித்ததால், அதே பாகத்தை விஷ்ணுவுக்கும் அளித்தார். அதனால் தான் இந்த மாதிரி படத்தை மேலே பார்க்கிறோம். "ஓம் சிவாத்மிகாய நமஹ" என்கிறோம். அதாவது 'சிவனின் ஆத்மாவாக இருப்பவர்' என்பதாகும். அது பொதுவாக, விஷ்ணு- பார்வதியை குறிக்கும். விஷ்ணுவுக்கு பார்வதி உறவு என்பதால் பார்வதிக்கு 'கிரிஜா' என்ற பெயருண்டு. அதாவது விஷ்ணுவின் உடன்பிறப்பு என்று பொருள்.
சிருஷ்டித்த சக்திகளை வெவ்வேறு முறைகளில் பிறப்பெடுக்க வைத்தார் ஈசன். எல்லா சக்திகளும் விஸ்வகர்மாவுக்குள்ளேயே தோன்றி, உறவுகள் கொண்டாடி, மீண்டும் அவருக்குள்ளேயே ஒடுங்குகிறது. நிறைய கதைகளில் சரஸ்வதியானவர், பிரம்மாவின் மகளா, மனைவியா என்று கேள்விகள் எழும். எந்த உறவானாலும் அது விஸ்வகர்மாதானே?
நாம் நம் ஒவ்வொரு பிறப்பிலும், நம்முடைய சொந்த பந்தங்களுக்கு தாயாக, தந்தையாக, மகனாக, மகளாக, மனைவியாக, மருமகனாக, இப்படி பல ஜென்மங்கள் எடுக்கிறோம். இந்த ஆத்மா பல உறவுகளை எடுக்கிற போது, விஸ்வகர்மாவும் பல சக்திகளை உருவெடுத்து பல உறவுகளாகக் காட்டியுள்ளார். அதெப்படி நீங்களே அப்பாவாகவும் கணவனாகவும் மகனாகவும் வருவீங்க? என்று யாராவது கேட்டால், முதலில் உங்களுக்கு சிரிப்பும் கோபமும் வரும், பிறகு இந்த தாற்பரியம் புரியும்போது அஞ்ஞானம் விலகும். (மறுஜென்மம ஊழ்வினை போன்ற கான்செப்டில் நம்பிக்கை இல்லாதோருக்கு இந்த சங்கதி சுத்தமாகப் புரியாது. அதனால் கிண்டல் செய்வார்கள்.) இப்படியாக, தானே நம் ஆத்மாவாக நம்முள்ளிருந்து பிறந்து புருஷ-ஸ்திரீ உறவுகளை மாற்றிப்போட்டு விளையாடுகிறார்.
அப்படியிருக்க தெய்வங்ளுக்குள் சொந்தங்கள் பற்றி சர்ச்சை எழுப்புவது 'சும்மா' என்பது நமக்குத் தெரிகிறது. இறைவனே எல்லாமாக உருவாகிக்கொண்டு ஐந்து தொழில்களை நடத்தி வருகிறார். நாதமும் பிந்துவும் விஸ்வகர்மாவுக்குள்ளிருந்து தோன்றி பிரபஞ்ச இயக்கத்தில் வெவ்வேறு உறவுகளும் பணிகளையும் தந்து புரியவைக்கிறார்.
திருப்பதியில் 'முருகனுக்கு அரோகரா' என்றாலும், பழனியில் 'கோவிந்தா கோவிந்தா' என்றாலும், சமயபுரத்தில் 'ஓம் நமச்சிவாய' என்றாலும் ஒரு தவறுமில்லை. (அப்படி மாற்றிச சொல்லும்போது, இவ்விவரம் எதுவும் தெரியாதவர்கள் அதைக் கேட்டால் சிரிப்பார்கள்.) இப்போற்றிகள் எல்லாம் பரசிவனையும்- பரசக்தியையும சென்றடைகிறது என்பது இப்போது உங்களுக்குப் புரிந்ததா?
பின்னொரு சமயம் ஒவ்வொரு முகம் பற்றி ஆழமாகப் பார்ப்போம்.

விஸ்வகர்மா குலத்தில் பிறக்க புண்ணியம் வேண்டும்

பஞ்சக்ருத்யம் எனப்படும் ஐந்து தொழில்களை விராட் விஸ்வக்ரம சதாசிவர் புரிந்து வருகிறார். இவருடைய மனைவியே விஸ்வப்பிராம்மணி (காயத்ரி) . அவருடைய பஞ்ச முகத்திலிருந்து தோன்றியவர்களால் ஐந்து ஆக்கப் பூர்வ தொழில்கள் படைக்கப்பட்டது. கொல்லர், தச்சர், கன்னார், ஸ்தபதி, தட்டார், ஆகிய பிரிவுகள் தோன்றின. ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு வேதத்தை (சாகை), ரிஷியை, பஞ்ச பூதத்தை, சூத்திரத்தை, கோத்திரத்தை ஆதாரமாகக் கொண்டு, ஹோமம் வளர்த்து, திரிபுண்டரம் இட்டு, பூணூல் அணிந்து விஸ்வகர்ம காயத்ரி மந்திரம் ஜெபித்து தங்கள் ஆசார அனுஷ்டானங்களை கடை பிடிப்பது சம்பிரதாயம்.
ஆனால் இன்று அவையெல்லாம் அடியோடு மாறிப்போய் அழிந்துவிட்டது. நிறைய விஸ்வகர்மா குலத்தினர் புலால் உண்டும் வேண்டாத செயல்களிலும் ஈடுபடுவதைக் காண்கிறேன். அவர்களுடைய ப்ரவரம் (அபிவாதனம்) தெரியாமல் உள்ளனர். ஏன்? காலத்தால் பொருளாதார வீழ்ச்சியும், வம்சங்கள் வழியே சொல்லி கொடுக்க யாரும் இல்லாமல் போனதும், நவ நாகரிகத்தின் வெளிப்பாடும், இவற்றுக்குக் காரணம்.
விஸ்வகர்மா குலத்தினரே விழித்து எழுங்கள்.! ஆன்மிக எதிர்காலம் உங்கள் கையில்தான் உள்ளது. உலகின் ஓட்டத்தை சீராக்கியும், பாரத்ததின் அத்வைத பீடங்களை நிர்வகிக்கும் மடாதிபதிகளாகவும் வரவுள்ளீர்கள். இனி வேதம் கற்றுக்கொள்ளுங்கள். திருமால் 'கல்கி' அவதாரம் எடுக்கபோவதே உங்கள் குலத்தில்தான். பிரபஞ்சத்தை சிருஷ்டித்த மயன் வம்ச சுடர் நீங்கள்தான். குமரிக் கண்டம் (எ) லெமுரியாவின் ஊர் கட்டுமான பணியை வாஸ்துபடி வடிவமைத்ததே மயன் பிரம்மரிஷி என்பதை மறவாதீர். கர்ம சாரம்படி சாபங்கள் விலகி இனி வரும் கலியுகத்தில் நீங்கள் பிரகாசிப்பீர்கள். விஸ்வகர்மா குலத்தில் பிறந்தற்கு பெருமை படுங்கள். பூர்வ புண்ணியம் செய்யாமல் மாயன் வம்சத்தில் ஜனிக்க முடியாது.
"விஸ்வகர்ம குலே ஜாத கர்ப பிராமண் நிஸ்ச்சயம், சூத்ரத்வம் நாஸ்தி தத பீஜம் பிரார்த்னம் விஸ்வகர்மனஹா |" என்று மனஸரா சில்ப சாஸ்திரம் சொல்கிறது. அதாவது "பிறப்பால் விஸ்வ பிராமணனின் பீஜத்தை சூத்திரதுவம் அண்டுவதில்லை" என்கிறது. இக்கூற்றின்படி விஸ்வ பிராமணர்கள் அனைவரும் பிறப்பால் 'பிராமணர்களே'. தேவ பிராமணர்கள், பௌருஷேய பிராமணர்கள் என்றும் அழைக்கபடுவர்.
நீங்கள் எல்லோரும் யஞ்யோபவீதம் உபநயனம் மூலம் பூணூல் போட்டுள்ளீர்கள் (?) என்று நினைக்கிறன். இனி தினம் காலையில் குளித்து முடித்ததும், இறை வழிபாடு செய்து கிழக்கு முகம் நோக்கி அமர்ந்து கீழ் காணும் விஸ்வ காயத்ரி 54 (அ) 108 முறையேனும் ஜெபிக்கவும்.
“ஓம் விராட்புருஷாய வித்மஹே விஸ்வகர்மனாய தீமஹி தந்நோ பரப்பிரம்ம ப்ரசோதயாத்.”
என் குருநாதர் சித்தர் போகர் பிறப்பால் பொற்கொல்லராக இருந்தும் மேற்படி ஐந்து தொழில்களையும் செய்துள்ளார். அவர் ஆசியுடன் எழுதி அடுத்த மாதம் வெளிவரவுள்ள பெரிய நூலில் இதன் பெருமைகளைக் கூறியுள்ளேன். வெளியீடு பற்றி விரைவில் பதிவிடுவேன்.
ஏனோ திடீரென்று என்னுள் ஒரு சிந்தனை எழ, இதை தட்டச்சு செய்து பதிவேற்றினேன்.
- எஸ்.சந்திரசேகர்
Image may contain: 1 person

வெள்ளி, 14 அக்டோபர், 2016

வண்ண விளக்கில்..




அருள்மிகு வடபழனி ஆண்டவர் கோயில் வண்ண விளக்கில்...
இன்று மாலை என் அன்பு நண்பர் சிவாவுடன் சென்றேன். பக்தர்கள் கூட்டத்தோடு வரிசையில் நின்று தரிசித்து, முருகனுக்கு சந்தன காப்பு முடிந்து சோடச உபசாரங்கள் கண்டோம். விபூதிப் பிரசாதம் வாங்கிக் கொண்டபின் பிரகாரத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். பிறகு, புறப்படும் நேரத்தில் ஏதோ என் சிந்தையில் தோன்ற "சிவா, உள்ளே சென்று முருகனை மீண்டும் தரிசித்து வருவோம்" என்று சொல்லிக் கொண்டே மூலவரை அருகில் தரிசிக்க முன்னே செல்ல, அங்கிருந்தோர் எதுவுமே கேட்காமல் கதவை திறந்து எங்களை உள்ளே விட, விஐபி தரிசனமே கிட்டியது. கருவறை முன் சில நிமிடங்கள் நின்று தரிசித்தோம். அங்கு புனைந்த பாடலே இது.
"வல்வினை போக்கும் பழனி முருகா
வள்ளி மணாளா செவ்வேள் அழகா;
வல்லமைத் தாராய் கலியுக வரதா
வீரபோகா அருள்செய் குருநாதா
."
எங்களை உள்ளே வருமாறும், எங்களுக்காக அவர்கள் சிறப்பு தரிசன கதவை திறக்கவேண்டும் என்று பணித்தானோ? வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! எல்லாம் முருகனின் செயல்.

சனி, 24 செப்டம்பர், 2016

K.B.Sundarambal கே.பி.சுந்தராம்பாள்

இன்னல்களை வென்று வாழ்ந்துகாட்டிய தாரகை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
"கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள்"...
இன்னல்களைத் தாங்க முடியாமல் 1900 களில் பாலாம்பாள் தன்னுடைய குழந்தைகளுடன் காவேரியில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள நடந்து போகும் போது, "நாம் ஏன் சாகவேண்டும்? கஷ்டங்கள் ஒரு நாள் தீரும்.. நாம் வாழ்ந்து காட்டுவோம்" என்று கூறி தாயின் மனதை மாற்றியவர்தான் குழந்தைகளில் மூத்தவரான சுந்தராம்பாள்... இசை பாடும் கோகிலமாக நடிப்புத் தாரகையாக செல்வத்தோடு விளங்கிட முருகன் அவரை இறவாமல் தடுத்தான்.
இந்தப் பதிவு அவருக்கு நினைவஞ்சலி!



ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

சபாஷ் சபரிஷ்! கனவு மெய்ப்படட்டும்!


இவர்தான் திரு.சபரிஷ் ஷட்ராக். என்னிடம் மனிதவள மேலாண்மை படித்த மாணவர். இவரைப்பற்றி நான் நிறைய சொல்லவேண்டும்.

வயது 28. இவருடைய தந்தை ஒரு தச்சர், தாயார் இல்லத்தரசி, உடன் பிறந்த ஒரு அக்கா. பள்ளியில் படிக்கும்போது இவருடைய தந்தை கண்பார்வை குறைந்து அவர்கள் வீட்டருகே ஒரு சாலை விபத்தில் இறந்து போனார். இவருடைய தாய் குடும்பத்தை நடத்த வீட்டு உதவி வேலைகள் செய்து மிகவும் சிரமப்பட்டு குடும்பத்தை ஓட்டினார். பள்ளியில் படிக்கும்போதே சபரி பகுதிநேர வேலைகள் நிறைய செய்து தன் படிப்பிற்கும் குடும்பத்திற்கும் தேவையான பணத்தை சம்பாதித்தார். அதிகாலையில்/ நள்ளிரவில் சினிமா போஸ்டர்கள் சுவற்றில் ஒட்டும்வேலை, காலையில் பேப்பர் போடுவது, பிறர் வீட்டில் சிறு பணிகள் செய்து தருவது, கூரியர் பாய், என்று பல வேலைகள் செய்தார். சிலசமயம் பெரிய அந்தஸ்திலுள்ள சமூக நிழற் கூட்டம் கண்ணிலும் பட்டுள்ளார். காலபோக்கில் இவருடைய சொந்தங்கள் இவர்களிடம் பாராமுகமாய் இருந்தனர். முதல் வகுப்பில் பிளஸ்-டூ முடித்ததும், கல்லூரியில் படிக்கவேண்டிய கட்டாயம் எழுந்தது. 

இவர்களுடைய சர்ச் குழு பாதிரியாரின் சிபாரிசு கடிதம் பெற்று அப்பகுதி கவுன்சிலரை பார்த்து உதவி கோரினார். ஒரு தனியார் கல்லூரியில் மாலைநேர வகுப்பில் அட்மிஷன் கிடைத்து BA படித்துத் தேறினார். பகலில் தனக்கேற்ற ஒரு முழுநேர வேலையைப் பார்த்தார். கால் சென்டரில் பணிசெய்தபின் கிடைத்த அனுபவத்தில் இன்று சிறுசேரியில் ஒரு பிரபல IT நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் பணி புரிகிறார்.

மெல்ல தன் குடும்பப் பொறுப்பை ஏற்றுகொண்டார். மணம் முடித்த அக்காள் குடும்பமும் இவர்களுடன் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். “சார், சொந்தமா என் சக்திக்கேற்ப சின்னதா ஒரு கால் கிரவுண்டு நிலமாவது வாங்கி என் அம்மாவுக்கு வீடுகட்டி கொடுக்கணும். அவங்க கஷ்டப்படாம இருக்கணும்ங்கிறதுதான் என் ஆசை சார்.” என்று கண்கள் விரிய தன் கனவுகளைச் சொல்வார். தனக்குப் பிடித்த ‘அப்பாச்சி’ இருசக்கர வண்டி வாங்கினார். குடும்பம் சற்று பெரிய வீட்டிற்கு குடிபோனது. பொருளாதாரம் வலுபெற்றது. பணத்தின் அருமை உணர்ந்தவர் என்பதால், சிக்கனமாய் பணத்தை செலவழித்தார். அவரிடம் இன்னும் ஒரு குழந்தைத்தனம் தெரிந்தது. சற்றும் கர்வமோ பந்தாவோ இல்லை. தன் தாயின் சம்மதத்தோடு தன்னை காதலித்த பெண்ணை கரம் பிடித்தார். இன்று ஒரு வயது குழந்தை உள்ளது. மகிழ்ச்சியான கூட்டுக் குடும்பத்தில் வாழ்கிறார்.

இன்னல்களுக்கிடையே கடுமையாய் உழைத்து வாழ்க்கையில் முன்னேறிய பெரிய மனிதர்களைப்பற்றி நாளிதழ்களில் படித்திருப்போம். ஆனால் இவரை கண்கூடாகக் காண்கிறேன். கெட்டு போகக்கூடிய வாய்ப்புகள் கைக்கு எட்டும் தூரத்தில் இருந்தும் சபரிஷின் மனம் அதை நாடிப் போகவில்லை. எந்த தீய பழக்கமும் இல்லாத ஒரு கண்ணியமான நபர். தன் லட்சியத்தை அடையும் வழியில் எண்ணத்தை சிதறவைக்கும் பல தடைகளை தாண்டி வந்துள்ளார். கர்த்தரின் கிருபை பெற்ற நல்லொழுக்கமானவர். தன் வருவாயில் தவறாமல் ‘பங்குப்பணம்’ கொடுக்கும் இறைப்பற்று மிக்கவர். என்னிடம் பயின்றோர் எத்தனையோ பேர். அதில் சிலர் மட்டுமே மனதில் தங்குவர். அவர் தன் கடந்தகாலம் பற்றி யாரிடமும் சொன்னதில்லை. ஆனால் என்னிடம் மட்டும் பகிர வேண்டும் என்ற எண்ணம் ஏன் வந்தது என்று தெரியவில்லை என்பார். இவருடைய கதை இக்கால இளைஞர்களுக்கு ஊக்கம்தரும்!  

"Really inspiring. I need to write about you in my next book" என்று சொல்வேன். அப்போது அவருக்கு பிரத்தியேகமாய் ஒரு ஆங்கிலக் கவிதை எழுதிக் கொடுத்தேன். படித்துவிட்டு நெகிழ்ந்துபோனார். இன்று சபரிஷ் என்னுடைய கட்டுரையின் மையக்கருத்தாக இடம்பெற்று விட்டார். அவருடைய கனவு மெய்ப்பட என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

திங்கள், 5 செப்டம்பர், 2016

அன்றே இப்படியொரு விளம்பரம்


சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்வந்த பழனி தலவரலாறு கையேடின் ஒரு பகுதியை பாருங்கள். அந்த போகர்7000 பாடல்களை படித்தாலே போதும், யார்வேண்டுமானாலும் எளிதில் தங்கம் செய்யலாம், பல அற்புதங்கள் நிகழ்த்தலாம் என்று அப்போதே இது போன்று விளம்பரப்படுத்தினர் என்றால், இன்றைக்கு கேட்கவா வேண்டும்? இப்படியெல்லாம் விற்பனை யுக்தி இருந்துள்ளது. அந்த நூல் விலை ரூ.1 என்று இருந்தது.

இதை நம்பிக்கொண்டு, பேராசையால் தங்கம் செய்யப்போய், எத்தனை பேர் சொத்து இழந்து சிங்கி அடித்தார்களோ? பாடல்களை ஊன்றிப் படித்தால்தான் தங்கம் யாருக்கு வாய்க்கும் என்று போகர் சொன்னது புலப்படும். தங்கத்துக்கு அடுத்தபடியா 'முப்பு' ஆர்வம் அதிகமாயிடுச்சு. ரசவாதம் செய்து முடிகிறதுக்குள்ள 'வாதமும் மூப்பும்' வந்து சேர்ந்துடும். அருளாளருக்கு எந்த சிரமுமின்றி சித்தர்களின் தங்கம் தானாக கைக்கு வந்து சேர்ந்திடும்.