சந்தைத் தெருவில் நேற்று மாலை ஓர் இளம் பெண் அவளுடைய மகனுடன் நடைபாதை கடைக்கு வந்தாள். அவள் நாலு வீட்டில் வேலை செய்து குடும்ப பாரத்தைச் சுமக்கிறாள் என்பது அவளுடைய பேச்சில் தெரிந்தது. மஞ்சள் கிழங்கு மற்றும் கரும்பு விற்கும் இடத்தில் நின்றாள்.
This blog carries interesting articles on travel, spiritual, personal, poetical, social experience of the author.
About Author
- S.Chandrasekar
- A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.
வியாழன், 14 ஜனவரி, 2021
வழி பிறக்கட்டும்!
Kindle மின்னூல்கள்
இந்தப் புத்தாண்டு தொடக்கத்தில் அமேசான் கிண்டில் தளத்தில் வெளியான என் மின்னூல்கள். கிண்டில் சந்தாதாரர்கள் வாசிக்கலாம். இவற்றை அச்சு நூலாக வெளியிடவில்லை.
தெய்வத்தை ஒதுக்கிப் பார்க்கணுமா?
இரு இரு... முதலில் ஆரிய கடவுள் திராவிட கடவுள் என்றாய் (எங்கள் கொள்ளுபாட்டன் தலைமுறை).. அப்புறம் சமஸ்கிருத கடவுள் தமிழ் கடவுள் என்று பிரித்தாய் (எங்கள் பாட்டன் தலைமுறை) ... அப்புறம் சிறுதெய்வம் பெருந்தெய்வம் என்று பிரித்தாய் ( எங்கள் அப்பா தலைமுறை).. அப்புறம் வடநாட்டு கடவுள் தென்னாட்டு கடவுள் என்று பிரித்தாய்.. வேத கடவுள் கிராம கடவுள் என்று பிரித்தாய்.. இப்படி எங்கள் தெய்வங்களை கூறுபோட்டு கூறுபோட்டு அவை வேறு தெய்வம் இவை வேறு தெய்வம் என்று குறுக்கிக் கொண்டே வந்தாய்.. கடைசியாக எஞ்சியது மாரியம்மன் கருப்பனார் எங்கள் குலதெய்வங்களும் முருகனும் தான்.. இவை சூத்திர தெய்வங்கள் என்று பார்ப்பனர் சாடியதாகச் சொன்னாய்.
அடையாளம் இழக்கும் போகர்!
சீனாவில் போகர் கூடுவிட்டுக்கூடு பாய்ந்து ஒரு முதியவர் உடலில் பிரவேசித்தார். திடீரென்று தத்துவம் பேசும் ஒரு முதியவர் வரவே அது யாரென குவாங்சு நகரத்தினர் அறியாததால் அவரை ‘மூதறிஞர்’ (Laotzu லாவோட்சு) என்று அழைத்தனர். உண்மையான பெயர் தெரியவில்லை. வேற்று தேகத்தோடு அவர் அங்கு இருந்ததை “பரங்கியர் தேசத்தில் பன்னீராயிரம் வருடங்கள் இருந்தேனே” என்று கூறியுள்ளார். தான் சீனப்பிரஜை என்றால் பரங்கியர் தேசம் என்று சொல்லியிருப்பாரா? தேகத்தால் சீனராக இருந்தாலும் உள்ளே இருப்பது நம் சிவசித்தர் தானே? ஆனால் கூடுவிட்டுக்கூடு பாய்ந்ததை அவர் எந்த நூலிலும் வெளிப்படுத்தியதில்லை.
நாகை சூடாமணி விஹாரம்
உந்து சக்தியும் முயற்சியும்!
என் நண்பரின் அண்டை வீட்டு மாடித் தோட்டத்தில் துளசி, கற்பூரவல்லி, திருநீற்றுப்பச்சிலை, கரிசாலை, கற்றாழை, என அநேகமும் தொட்டியில் வளர்ந்துள்ளன. நேற்று அவ்வீட்டிலிருந்து சண்டையிடும் தொனியில் ஒரு மூதாட்டியின் குரல் பெரிதாகக் கேட்டது.
ஞாயிறு, 3 ஜனவரி, 2021
உயிர்ப்பு!
விரைவில் வெளியாகவுள்ள என் நாவல்! லாக்டவுனுக்கு முன்பே திட்டமிட்டு அது முடங்கிப்போய் பிற்பாடு புது சுவாசம் பெற்று உயிர்த்தெழுந்த படைப்பு.
திங்கள், 30 நவம்பர், 2020
நிலத்தடி நீரின் தரம்!
பருவமழை பெய்த காரணத்தால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தாலும் அதிலுள்ள Total Dissolved Solids (TDS ) எனப்படும் நுண் துகள்களான Chromium, Zinc, Lead, Nickel, Iron, Copper ஆகிய கன உலோகங்களின் அளவு ஒவ்வொன்றும் 6mg – 12mg/ litre என்ற நிலையில் கரைந்து கணிசமாக ஏறிவிட்டது.
கிணறு வெட்டுவது அரிதாகிவிட்ட இக்காலத்தில் தெருவுக்கு ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது 150 அடியில் ஆழ்துளை கிணறு போட்டு நீர் எடுப்பதாலும், மாசுபடும் சுற்றுச் சூழலாலும், பெருகிவரும் சிறிய/ பெரிய தொழிற்பேட்டைகளாலும் நிலத்தடி நீர் அதிவேகமாக மாசடைந்து வருவது கண்கூடு. நிலத்தடியில் நல்லநீர் இருக்கும் Aquifiers படுகைகள் சகட்டுமேனிக்குச் சேதமாகி வருவதால் செப்பனிடுவது இயலாது. சென்னை போன்ற பெருநகரத்தின் வெவ்வேறு பகுதிகளில் சுத்திகரிக்கப்படாத ஒரு லிட்டர் நிலத்தடி நீரில் மொத்த TDS அளவு சுமார் 750 mg – 880mg வரை உள்ளது என பரிசோதனைகள் சொல்கின்றன. ஆனால் அதிகபட்சம் 400 mg வரைதான் இருக்கலாம் என பரிந்துரைக்கப்படுகிறது.
மாடியில் என்னதான் நீங்கள் Aqua filter cylinder பொருத்தி நீரை வடிகட்டி மேல்தொட்டிக்கு ஏற்றினாலும், அது நீரிலுள்ள எண்ணெய் மற்றும் உலோகங்களை ஓரளவுக்குத்தான் சுத்திகரிக்கும். சிலர் வீடுகளில் இரண்டு cylinderகள் பொருத்துவதுண்டு. தினசரி 1000 லிட்டர்கள் உபயோகித்தால் அதற்கேற்ப இரண்டு நாள்களுக்கு ஒருமுறை backwash செய்ய வேண்டியது அவசியம். பாரம்பரியமான திறந்த நிலை கிணற்றில் நீர் ஊறுவதால் ஆழ்துளை கிணற்றைப்போல் நீர் மோசமாவதில்லை.
கோடை/ மழை காலத்தில் bore well தண்ணீரின் தன்மை மாறும். ஒரு வீட்டிற்கும் அண்டை வீட்டிற்குமே நிலத்தடி நீரின் தன்மை மாறுபடும். குளியலறை பக்கெட்டில் ஒருநாளுக்கு மேல் சுத்தமான அந்த நீரைப் பிடித்து வைத்தால் மறுநாள் அதில் அமிலத் தன்மை வாடை வந்துவிடும். இதைத் தவிர்க்க அன்றன்றைக்கு மட்டும் நீரை உபயோகித்தல் நன்று. சிரமம் பார்க்காமல் தினமும் பக்கெட் உட்புறம் தேய்த்துக் கழுவி சுத்தம் செய்வது நலம். சுத்திகரித்த இந்த நீரில் துணி தோய்த்தால் நாளடைவில் வெள்ளைத் துணிகளின் நிறம் பழுப்பாகும். சொட்டு நீலம் போட்டாலும் பயன் தராது. கிணற்று நீரில் இப்பிரச்சனைகள் இல்லை.
போகிற போக்கில் Aqua filter cylinder களை backwash செய்து அதில் வெளியேறும் அடர் சிவப்பு நிற சேற்று நீரைத் தொட்டியில் சேமித்து வைத்தால், நாளடைவில் அதிலிருந்து மேற்படி heavy metals உலோகங்கள் பிரித்தெடுத்து வியாபார நிறுவனங்களுக்கு விற்றுவிட வசதியாக இருக்கும். 😃😂 ஆக, அதி ஆழத்தில் துளை கிணறுகள் வரப்பிரசாதமாகத் தெரிந்தாலும் அது பேராபத்தே!
(புள்ளி விவரம்: Times of India)
புதன், 18 நவம்பர், 2020
தன்மானமும் கௌரவமும்!
திங்குஜம் ஷுப்குமார் மெய்தி சிங். மணிப்பூரிலிந்து கல்வி கற்க வந்தவன். என்னுடன் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பில் ஒன்றாகப் படித்தவன். முன் வரிசை இருக்கையில் அமர்பவன். உயரம் நான்கரை அடி. அவன் விழித்துக்கொண்டு இருக்கிறானா, தூங்குகிறானா என்று தெரியாதபடி ஒரு கோடு கிழித்ததுபோன்ற கண்கள். டீஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து, முதுகில் ஒரு பையை மாட்டிக்கொண்டு பொறுமையாய் வருவான். நல்ல பலசாலி. யார் வம்புக்கும் போகாதவன்.
வெள்ளி, 13 நவம்பர், 2020
சோதனைச் சுற்று!
தீபாவளி என்றால் நம் எல்லோர் இல்லங்களில் இனிப்பு/காரம் பிரிவுகளில் குறைந்தது மூன்று வகைகளைச் செய்வது வழக்கம். அதுவும் பாரம்பரியமாகவே இருந்து வருவது மரபு. ஆனால் காலம் போகிற போக்கில் இப்போதெல்லாம் வருடத்திற்கு ஒருமுறை வரும் தீபாவளிப் பண்டிகைக்கு மெனக்கெட சிரத்தையுடன் செய்வது என்பது இரண்டாம் பட்சமாகவே பல வீடுகளில் நினைக்கின்றனர்.





