About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 24 ஏப்ரல், 2017

சந்திர விலாஸம்




கூர்க் அருகே எங்கள் எஸ்டேட் வீடு 'சந்திர விலாஸம்' இப்படித்தான் இருக்கும், மலையைச்சுற்றி வளைவு பாதை, தாழ்வான பகுதியில் சிறிய ஓடை, பறவைகளின் ஒலி, எப்போதுமே மழையில் நனைந்த வனப்பகுதிபோல மூலிகை வாசம் இருக்கும், சூரியசக்தியில் வெந்நீர் எந்நேரமும் வரும், மளிகை சாமான்கள் மொத்தமாய் வாங்க அடுத்த ஊருக்குத்தான் போகணும், காய்கறிகள் எல்லாமே பின்புறம் பயிர் செய்வோம், பசு இருக்கும், மந்தமான வானிலை இருக்கும், கனமழை பெய்தால் அவ்வப்போது எங்கேனும் நிலச்சரிவு நடக்கும்...வீட்டுக்கு ஒரு கார் நிச்சயம் இருக்கணும். பாக்கு, வெற்றிலை, காப்பி, ரப்பர் அதிகம் பயிர் செய்வோம். தினசரி உணவு ராகி 'முத்தே' களி, கீரை சாம்பார், கொஞ்சம் பொறியல், அரிசிச்சோறு, ரசம், தயிர், ஊறுகாய். 

தினமும் எனக்கு நடைபழக சரியான இடம்.. எளிதில் வியர்க்காது. கோடைகாலத்தில் சுமாராக சூடு தெரியும். அக்கம்பக்கத்து எஸ்டேட் காரர்கள் எல்லோருமே சொந்தத் தொழில் செய்வோர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ராணுவ படைவீரர்கள்.. தூங்கி எழுந்து குளித்தபின்,  தினமும் அவர்கள் மிடுக்காக உடையணிந்து கொண்டுதான் காலை செய்தித்தாளை படிப்பார்கள். அவர்களுக்கு பீர் குடிப்பது நமக்கு காபி குடிப்பது போல ஒரு பானம். வீடுகள்தோறும் கம்பீரமாக துப்பாக்கி உண்டு. எங்களுடைய எஸ்டேட் தோட்டம் மொத்த பரப்பளவு 80 ஏக்கர் இருக்கும்.. இதுபோன்ற இடம் மெய்யாகவே சொர்க்கபுரிதான்.. எங்க எஸ்டேட்டுக்கு விருந்தாளியா வாங்க..இயற்கையோடு சந்தோஷமா இருங்க.

ஹூம்ம்.. இப்படி எல்லாம் உங்ககிட்ட சொல்லனும்னு ஆசைதான்!! பெரிதாகக் கனவு காணுங்கள், அது ஒருநாள் மெய்ப்படும்.

சனி, 22 ஏப்ரல், 2017

ஸ்ரீ ஈஸ்வரிதேவி மடம்

கடப்பாவில் உள்ள ஸ்ரீ வீர்ப்பிரம்மம் அவர்களின் சஜீவசமாதி மடத்தில் ஒரு பகுதிதான் ஸ்ரீஈஸ்வரிதேவி மடம். சுவாமிகளின் பேத்தியும், அவருடைய மூத்தபுதல்வர் கோவிந்தையா-கிரிமாம்பா தம்பதியின் மகள் இவர். இவருக்கு நான்கு சகோதரிகள். தன் பாட்டனாரைப் போலவே இவரும் ‘காலக்ஞானம்’ நூல் இயற்றினார். அத்வைத சித்தாந்தம் பரப்பினார். இவருடைய காலஞான நூல் இன்றும் கொங்கல ராமாபுரம், கோனசமுத்ரம் ஆகிய ஊர்களில் உள்ள கோயில்களில் வைத்து பூஜை செய்கிறார்கள். "ஓம்-ஐம்-ஹ்ரீம்-க்லீம்-ஸ்ரீம் ஸ்ரீஈஸ்வரி தேவினே நமஹ" என்பது அவருக்கான பீஜ மந்திரம். 

ஸ்ரீ வீரபிரம்மேந்திரர் படுவெல் கிராமத்தில் காட்டுவழியே வரும்போது ஒரு பிரம்மராக்ஷசியை கட்டிப்போட்டு செயலிழக்கவைத்தார். பிற்காலத்தில் அவ்வழியே போகும் ஸ்ரீ  ஈஸ்வரம்மா மூலம்தான் அதற்கு சாபவிமோசனம் கிடைக்கும் என்றும் அதனிடம் சொல்லிவிட்டுப் போனார். அதுபோலவே ஈஸ்வரிதேவி தன் சீடர்களான சதுகொண்ட செங்கைய செட்டி, யோகி சுப்பையாசாரியா ஆகியோருடன் வரும்போது அந்த ராக்ஷசிக்கு சாபவிமோசனம் தந்தார். வினுகொண்ட கிராமத்தல் எண்ணெய்க்கு பதில் நீரூற்றி விளக்கு ஏற்றியும், பல அற்புதங்கள் நிகழ்த்தினார். இவர் வாழ்ந்த காலம் கிபி11ம் நூறாண்டு என்று நம்பப்படுகிறது.

வாத வித்தை

சரக்கு வைப்பு பற்றிய ஒரு பாடல் இங்கே... இதை சித்த வைத்திய நோக்கில் படிக்காது போனால் தவறான பொருள்தான் விளங்கும். ரசவாதம் கற்ற வேதியனுக்கு இந்த மறைப்புப் பாடல் வெளிப்படும்.
"பனங்கள்ளு தேடி வந்த வேதையனுக்கு தேன் கிட்டியது, அதை அளித்த பூமித்தாய்க்கு மஞ்சள் பூசிட, ஆண் பனை மரத்தின் அடியில் செருப்படி மூலிகை இருப்பது இவன் கண்ணுக்குத் தெரிய, பூமிக்கு கீழே இந்திரகோபம், ரத்தம், வெள்ளை போன்ற மூல/வைப்பு பாஷாணங்களும் அமுரியுப்பும் கொட்டிகிடப்பதை காண்கிறான். அண்டத்தில் இருப்பதுபோல் சரக்குகளிலும் பிண்டதேகத்திலும் ஐம்பூதங்கள் நிலைத்துள்ளது. உலோகங்களையும் பாஷாண சரக்குகளையும் வைத்து தக்கபடி உரைத்த உபசாரமுறைகள்படி அஷ்ட பாஷாணம், நவ பாஷாணம், தசபாஷாணமும் வேதித்துக் கட்டிட்டலாம்."

இதுதான் பாடலில் எனக்கு விளங்கிய பொருள். சித்த வைத்திய அகராதி துணையுடன் தெளிய பதவுரை எழுதினேன். இதைத்தாண்டி இன்னும்கூட நுட்பமான சங்கதி இப்பாடலில் சிலருக்கு வெளிப்படலாம்.

வெள்ளி, 21 ஏப்ரல், 2017

காஞ்சிபுரம் இட்லி

ஸ்ரீ வரதராஜபெருமாள் கோயில் செய்முறை 
தேவையானவை             
பச்சரிசி 1kg, புழுங்கலரிசி 1kg, உளுந்து 1kg,
வெந்தயம் 25gm,
மிளகு 100gm,
ஜீரகம் 100gm,
சுக்கு 100gm,
பெருங்காயம், கருவேப்பிலை கொஞ்சம்
நெய் 800gm,
உப்பு
செய்முறை:
ஒரு மணி நேரம் உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயம், அரிசியை ஊறவைக்கவும். இதை நைசாக அரைக்காமல் கொஞ்சம் குருணையாக (கொரகொரப்பாக) அரைக்கவும். உப்பு சேர்த்து இரவு முழுவதும் வைக்கவும். காலையில் இந்த மாவில் தாளித்த கருவேப்பிலை பெருங்காயம் பொடித்த மிளகு ஜீரகம் சுக்கு முந்திரி மற்றும் நெய் சேரத்து, நன்கு கலந்து இட்லி வார்த்து எடுக்கவும். சாதாரண முறையில் ஒரு மணி நேரம் எடுக்கும். குக்கரில் சமைத்தால் 15 நிமிடம் எடுக்கும். கோயிலில் மந்தாரை இலையை இட்லிதட்டில் பரப்பிவைத்து அதில் ஊற்றி வார்த்து எடுப்பார்கள். வீட்டில் இட்லிதட்டில் ஊற்றும்முன் எண்ணெய்/நெய் தடவி ஊற்றவும். 
முதலில் 1-2 ஆழாக்கு போட்டு செய்து பார்த்தபின் அதிக அளவில் செய்யுங்கள். இன்னும் சில ஊர்களில், அரிசி - உளுந்து அளவு மாறுபடுகிறது. இதற்கு side dish தேவையில்லை.

கிபி 3906 வரை சென்றுவந்த மனிதர்

அமேடியுஸ் டைனாக் என்ற ஸ்வீடன் நாட்டு ஆசிரியர் ஒருவர் 1921ல் உடல்நலப் பிரச்சனைகளால் நினைவிழந்து  ஒருவருடகாலம் 'கோமா' நிலைக்குப் போனார். அப்போது அவரது ஆழ்மனதின் பிரக்ஞை நினைவுகள் எதிர்காலத்திற்கு போயுள்ளது.  கிபி3906 காலகட்டத்தில் வாழும் ஒரு நபரின் உடலுக்குள் போய்வந்துள்ளது. அவர் அப்போது பார்த்து உணர்ந்தவற்றை கோமாவிலேயே பேசியுள்ளார். அதை ஒரு நூற்றாண்டுக்கு முன் பதிவு செய்தனர். அதாவது  21 - 39ம் நூற்றாண்டு வரை நடந்ததை சொல்லியுள்ளார்.


அப்போது அவர் 20ம் நூற்றாண்டில்தான் இருகிறார் என்று மருத்துவர்கள் குறுக்கிட்டு சொல்லவில்லை. ஏனென்றால் இது அவருடைய மனதின் ஆழத்தில் ஒரு அச்சம் கலந்த வடுவாக இருந்துவிட்டால் அதை சரி செய்வது கடினம் என்று மருத்துவர்கள் கருதினார்கள். ஓராண்டுக்குப் பிறகு அமேடியுஸ் உடல்நலம் தேறி கண்விழித்தார். அது வருடம் 1922. தனக்கு கனவுபோல் எதிர்காலத்தில் அடுத்த ஆயிரம் வருடங்களில் கண்டவற்றை தீர்க்க தரிசனம்போல் பார்த்து ஆச்சரியப்பட்டு பேசினாராம். கோமாவில் அதை மருத்துவர்களிடம் சொல்லியுள்ளதை பிறகுதான் தெரிந்துகொண்டாராம். அதை ஒரு கையேடாக 'எதிர்கால டயரி' யில் குறிப்பிட்டார். அது பின்னாளில் ஒரு பரபரப்பை உண்டாக்கும் என்று அவரே  எதிர்பார்க்கவில்லை.

டைனாக் கண்ட காட்சிகள்:

2000-2300 A.D. :- மனிதகுலம் அதிக ஜனத்தொகை, சுற்றுச்சூழல் சீரழிவு, பொருளாதார சமமின்மை, தவறான நிதிநிலை கொள்கை, மக்களுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்காதது, அவ்வபோது நடக்கும் சிறு சண்டைகள்/போர், பொருள் தேடும் உலகில் அவர்கள் தங்களுக்குள்  மெய்ஞானம் தேடவோ ஆன்ம பாதையில் போகவோ நாட்டம் இருக்காது.

2204 A.D.:- செவ்வாய் கிரகம் 20 மில்லியன் ஜனத்தொகையோடு முழுதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2265 A.D. வாக்கில் எதிர்பாராத பேரிடர் அங்கே ஏற்பட, அத்தனை மனித கூட்டமும் இறந்தனர். அதன்பிறகு செவ்வாய் கிரகத்தில் குடியேறும் யோசனையே இல்லை.

2309 A.D.:- தீர்வுகாணப்படாத உள்நாட்டு பிரச்சனையாலும், உலகப் போரினாலும்  பூமிக்கு பெரிய இன்னல் ஏற்படும். இதனால் பொன்னிறம்  மற்றும் கருப்புத் தோல் வாழும் மனிதர்களின் தேசங்கள் அழியும்.

2396 A.D. :- சுற்றுஹோழளுக்கான பாராளுமன்றத்தில் பல ஆக்கபூர்வ தீர்வுகள் பிறக்கும். இது முற்றிலும் அரசியலோ வர்த்தகமோ சாராத ஒரு அமைப்பு. இதில் விஞானிகள், மனிதகுல ஆர்வலர்கள் மட்டுமே  இருப்பார்கள். இன்று புழக்கத்தில் இருக்கும்  பணம் அன்றைக்கு இருக்காது.  பூமிக் கோளின் வளங்கள் எல்லோருக்கும் சமமாகப் பிரிக்கப்பட்டு அதை வளர்ச்சியடைய வைப்பார்கள். அதிக ஜனத்தொகை பிரச்சனை, வெப்பமயம், சுற்றுச்சூழல் சமன்பாடு எல்லாமே சரி செய்யப்படும். மனித வாழ்க்கை மிகவும் எளிமையாகும். வாழ்நாளில் அவர்கள் மிகவும் குறைவாகவே வேலை செய்கிறார்கள். ஆனால், மீண்டும் வருடம் 1 என தொடங்குகிறது. (இயேசு காலத்தினைப் போல).  ஆனால் மனிதர்களுக்கு கோள்களும் அதன் வளம் காக்கும் பொறுப்பு வரவேயில்லை.  சுமார் 2-5 நூறாண்டிற்கு பிறகுதான் அதைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்துள்ளனர்.  எல்லோரும் பொருளாதார சமநிலை அடைந்துவிட்டனர் ஆனால் தொழிநுட்பத்தில் கட்டுப்பாட்டை வைக்க முடியவில்லை, நாளுக்கு நாள் அது விரிவடைகிறது. இந்த 'இருண்ட' காலம் கிபி 3400 வரை நீடிக்கிறது.

3382 A.D. :- திடீரென்று மக்கள் அனைவரும் ஆன்மிகத்தில் நாட்டம்பெற்று மெய்ஞான மார்க்கம் தேடி அலைகிறார்கள். எல்லோருக்குமே  சக்தியும் அமானுஷ்ய காட்சிகளும் புலப்படுகிறது. ஒரு பிரம்ம ஜோதி தோன்றி, அதில் எல்லோருமே நேரடியாக இணைந்து பல சக்திகளை பெறுகிறார்கள். மனித மூளை பல வினோதங்கள் செய்கிறது.

3400-4000 A.D. :- சுமார் ஆயிரம் வருடங்கள் கழித்து பொற்காலம் முடிவுக்கு வருகிறது.  ஒவ்வொரு மனிதனுமே விஞானி, தத்துவஞானி, ஓவியர், கலைஞர், என்று எல்லா சித்துகள் பெற்றவராக விளங்குகிறார்கள். என்ன ஆச்சரியம்!  உடை உணவு தங்க வீடு போக்குவரத்து என்று எல்லாமே சமுதாயத்தில் அனைவருக்கும் எல்லாமே இலவசமாக் கிடைக்கிறது.  எல்லாமே போதுசொத்து ஆகிவிட்டது, தனினபர் சொத்துக்கள் ஏதுமில்லை. புகழ்- கல்வி- கௌரவம் மட்டுமே சமநிலை இல்லாமல் உள்ளது. மக்கள் தங்களை சுயமாக முன்னேற்றிகொண்டு வருகிறார்கள். மொத்த வாழ்க்கையிலேயே 2 வருடங்கள்தான் வேலை செய்கிறார்கள். 17- 19 வயது வரைதான் வேலைசெய்கிறார்கள். பூமியில் ஜனத்தொகை ஒரு பில்லியனுக்கு குறைவாகவே இருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகிறது. எதிர்ப்பு, வஞ்சம் , களவு, கொலை என்று எந்த மாபாதகச் செயலும் எங்கும் நடந்ததாகக் கேள்விப்படவில்லை. சுய கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்தோடு உள்ளார்கள்.
-----------  ------------- --------------- --------------
என்ன நண்பர்களே, கலிகாலத்தில் இதெல்லாம் நம்பும்படியாக இல்லையா?  Relativity Time Travel செய்துவிட்டு வந்த கதைபோல இருக்கிறதே. அதெப்படி இன்றே இதெல்லாம் எதிர்காலத்தில் நடக்கும் என்று  ஊர்ஜிதமாக சொல்லுவது? கோரக்கர் அருளிய சந்திரரேகையில் அவர் சொன்ன தீர்க்க தரிசன நிகழ்வுகளோடு ஓரளவு ஒத்துப்போகிறது. அந்த பாடல்கள் சில இங்கே தந்துள்ளேன். அமேடியுஸ் சொன்னதுபோல மிகவும் ஆழமாக இன்னின்னது என்று கோரக்கர் அளந்து சொல்லவில்லை... மேலோட்டமாக நடப்புகளை சொல்லியுள்ளார்

.Image may contain: text


வியாழன், 20 ஏப்ரல், 2017

புற்று நோய் மருந்து

இணையத்தில் புற்று நோய்க்கான எளிய வைத்தியத்தைக் கண்டேன்.
சோற்றுக் கற்றாழை 400 கிராம்
● சுத்தமான தேன் 500 கிராம்
● Whisky (or) Brandy 50 மில்லி
(Alcohol மருந்தாக மட்டும் பயன்படுத்துக)
Aloevera கற்றாழை, குமரி, கன்னி, தாழை என்று அழைக்கப்படும். இதில் நாட்டு கற்றாழைதான் மருந்துக்கு சிறந்தது. இதில் எதிர்ப்பு சக்தி மிக அதிகம். திசுக்களுக்கு எதிர்ப்பு சக்தியூட்டிடும். சருமத்தை பாதுகாக்கும்.. பல விதத்தில் நிவாரணி. ஊர்பூராவும் கற்றாழை பானம் பிரபலமாகி வருகிறது.
■ தயாரிப்பு முறை
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும். தோலை நீக்கிவிடக்கூடாது. தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும் அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும். நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும் இப்போது மருந்து தயாராகி விட்டது.
■ மருந்தை உட்கொள்ளும் விதம்
இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும். ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ள வேண்டும். மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும.
பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது. இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும்.இதை மத்திமமான சீதோஷ்ண நிலையில் வைத்தால் நல்லது. குளிர் சாதன பெட்டியின் கீழ்பகுதிதான் சரிபடும். 
Image may contain: drink
----------------------------
■ பின் குறிப்பு:
இது ஒருபக்கம் இருந்தாலும், அன்றாடம் சுடுசோற்றில் நல்லெண்ணெய் விட்டு கறிவேப்பிலைபொடி போட்டு சாதம் கலந்து உண்பதும், பூண்டு ரசம்/ஊறுகாய் சேர்ப்பதும்; கருப்பு திராட்சை விதையுடன் உண்பதும் நல்ல பலனைத் தரும்.
சாதரணமாக இந்த சோற்றுக் கற்றாழை சதைப்பற்றை மோரில் கலந்து குடித்து வந்தால் வயிறு-குடல் அல்சர் குணமாகும்.

தன்வினை தன்னைச்சுடும்

சித்தர்கள் தங்கள் பாடல்களில் ஒருவன் பாவங்கள் செய்யாது தவ நிலையில் பக்தியில் இலயிக்க வேண்டும் என்றும் , எந்த வம்பு-தும்புக்கும் போகக் கூடாது என்றும் சொல்கிறார்கள். அதுபோல் என்னென்ன செயல்கள் எல்லாம் பாவங்களில் வரும் என்ற ஒரு நீண்ட பட்டியலை போகர், கோரக்கர் முதலான சித்தர்கள் சொல்லியுள்ளார்கள்.
உங்கள் வளர்ச்சியில் யாரேனும் குறுக்கீடு செய்து உங்களை தாழ்த்த நினைப்பது, மேலதிகாரி உங்களை ஏய்ப்பது, உங்களுடைய உழைப்பை வேறு ஒருவர் தன்னுடையது என்பது, புறம்பேசுவது, உங்களுடைய பொருளை அபகரிக்க நினைப்பது, உங்களை அடிமையாக்கிட பல் வேலைகள் செய்வது, வசியப் படுத்தி அடிமையாக்குவது, வேண்டுமென்றே மாந்திரீகம் வைப்பது, நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் குடும்பத்தை குலைக்க நினைப்பது, கீழ்த்தரமாக மனம் புண்பட கடிந்து பேசுவது, என்று பல தினுசான பாவங்கள் நீண்ட வரிசையில் போகிறது.
இதெல்லாம் ஒருவருக்கு ஊழ்வினைப் பயனாகவே ஒவ்வொரு பிறவியிலும் ஏதோ ரூபத்தில் துரத்துகிறது என்பதற்காக நடக்கும் அநீதிகளை பேசாமல் பார்த்துக் கொண்டு இருக்க இயலுமா? பதிலுக்கு நாம் நேர்முகமாக/மறைமுகமாக போராடி அவர்களை துவம்சம் செய்வது எந்த வகை பாவத்தைச் சேர்ந்ததாக இருக்கும்? ஒருவர் நமக்கு தீங்கு தராதவரை யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது என்று சித்தர்கள் கருதொழில் காண்டங்களில் சிறப்புறச் சொல்லியுள்ளனர். அப்படியும் மீறி செய்பவர்களை என்ன வகையில் எல்லாம் தாக்கி செயலிழக்க வைக்கலாம் என்பதையும் தகடு மந்திரம் இத்யாதி வழிகளை உபாயமாக சொல்லியுள்ளனர். அவர்கள் சொல்வதையும் நம்பாதோர் பலருண்டு.
'செய்வினையாவது செயப்பாட்டுவினையாவது... இதெல்லாம் போயி நம்பிகிட்டு..' என்று சிலருக்கு முற்போக்காக மூளைச்சலவை செய்துவிட்டு, பிற்பாடு அவர்களே அந்த அப்பிராணி நபர்களுக்கு கருதொழில் மூலம் நசுக்க முற்படுவதையும் பார்த்துள்ளேன். இது என்ன பிழைப்பு? இது போன்றவர்களை, ஸ்தம்பனம் மாரணம் பேதனம் ஆக்ரூஷணம் வித்வேடனம் உச்சாடனம் மூலம் தாக்கி படுக்க வைக்கமுடியும் என்பது பாடல்களில் தெளிவாக உரைத்துள்ளார்கள். ஆனால் எந்த முகாந்திரமும் இல்லாமல் தாக்கீடு செயக்கூடாது. எதிர் தாக்குதல் தரும்போது எந்த சேதாரமும் நிகழாமலா இருக்கும்?
ஆக, அது மீண்டும் ஒரு பாவச்சுற்றுக்குள் ஒருவனை தள்ளிவிடும்... இப்படியாக பழிதீர்க்கும் பிறவிப் பயணங்கள் ஜோராக ஓடுகிறது... வீடுபேறு அடையும் வரை. எத்தனை தொல்லைகள் வந்தாலும் இறைவனின் பாதங்களைப் பற்றியபடி 'அபயம் தா' என்று சொல்லிக் கொண்டே இருப்பதும் ஒரு அளவுக்குமேல் முடுயுமா? எதிராளியை ஒரு கைபார்க்க மனம் கடுங்கோபத்தில் விழையும். இப்படி நிலை மறந்து பாவம் செய்வோமா என்பதும் ஈசனின் சோதனையாக இருக்கும் என்பதை மறக்க வேண்டாம். ஆசை, பொறாமை, கோபம், வெறி எல்லாம் கடந்து இறுதியில் 'தன்வினை பிறவினை எதிர்வினை' என்று எல்லா வினை வகைகளும் பாவ இலக்கணம் நடத்தும். 
இன்னும் சிலர் மறுபிறப்பு என்ற கான்செப்ட் இல்லை என்று வாதாடுவார்கள். அப்படி என்றால் நாம் பிறக்க வேண்டாமே! காரணமின்றி அல்லல்பட வேண்டாமே! மறு ஜென்மம் இல்லை என்றால் ஊழ்வினை, இம்மை மறுமை, வீடுபேறு என்று ஔவை, வள்ளுவர் மற்றும் பலர் சொன்னது அப்பட்டமான பொய் என ஆகுமே... தவறு செய்த அரசியல்வாதிகளுக்கு நீதிமன்றம் தண்டனை கொடுத்தால் வரவேற்கிறோம்... அதையே ஆன்மாவுக்கு ஈசன் கொடுத்தால் அதை ஏற்க முடிவதில்லை. அவனையே திட்டுகிறோம். 
அந்த ஜென்மத்தின் பாவச்செயல்களுக்கான தீர்க்கப்படாத எஞ்சிய தண்டனை அடுத்த பிறவிக்குப் போய் சேருவதுதான் இத்தனைக்கும் காரணம். 'ஆன்மாவுக்கான தண்டனை எல்லாவற்றையும் பைசல் பண்ணிக்கொண்டு உடலை போக்க வேண்டியதுதானே, அதற்குள் தர்ம தேவனுக்கு என்ன அவசரம்... எதற்கு மறுபிறப்பில் சொல்லொண்ணா வேதனை? நம்மை யாரும் துன்புறுத்தாமல், நமக்கு கேடு தராமலும் இருக்கவேண்டும். மீண்டும் ஒவ்வொரு சுற்றிலும் நாம் பழிதீர்க்காதவாறு நமக்கு சுற்றமும் நட்பும் வாய்க்க வேண்டும். இரு கை அடித்தல்தானே ஓசை வரும். நம்மை இம்சிக்காத துரோகம் செய்யாத தக்க சுற்றங்களையும் சகவாசங்களையும் அளிக்கவேண்டும். அது ஈசனின் பொறுப்பு! நாம் கலங்கிய ஓடையில் தெளிந்த நீர்போல் இருக்கமுடியாதுதான், ஆனால் அப்படி இருக்க அவனருளும், அப்படி தொல்லையில்லாதொரு பிறவி பிராப்தமும் வாய்க்கவேண்டும். கலியுகத்தில் பெரிய யாகமோ பூசைகளோ வேண்டாம், 'நாம ஜெபம்' செய்தாலே நற்கதி கிட்டும். மகான்கள் அருளிய மந்திரங்களை எப்போதும் சொல்லிக்கொண்டே உரு ஏற்றி நம் ஆன்ம பலத்தை வலிமையாக்கிட வேண்டும்.
போன பிறவியில் தவறு இழைத்து தீங்கு செய்தது இந்த உடல் இல்லைதான், ஆனால் அதனுள் இருந்த ஆன்ம லேசுப்பட்டது இல்லை அதனால் அதற்குத்தான் தண்டனை... இதன் காரணமாக அந்த ஆன்மா குடியிருக்கும் தற்போதைய தேகத்திற்கு இன்னல்கள் வருகிறது. இதைத்தான் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மனமறிந்து இப்பிறவியில் பழி- பாவம் செய்யாத நம்மால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நம் விருப்பபடியா ஆன்மாவிற்கு புது தேகம் கிடைக்கிறது? நடக்கும் எல்லாவற்றையும் ஈசன்தான் தீர்மானிக்கிறான். மனதால் உடலால் நாம் செய்யும் பாவங்கள் ஆன்மாவையே பற்றும். இவ்வான்மா பல லட்ச தேகங்களில் குடியிருந்தபின் அவை புதைந்தும் எரிந்தும் அழிந்ததைப் பார்த்த ஒரே சாட்சி. வீடுபேறு கிட்டும்வரை அதற்கு அலுப்பில்லை போல. தேகத்தை அதன் கருவியாக  இயங்கவைத்து அது செய்யும் அக்கப்போர் கொஞ்சமில்லை! Every action has an equal and oppsite reaction - நியூட்டனின் 3ம் விதியின் படி, 'தீதும் நன்றும் பிறர்தர வாராது' என்பதால் காரணமின்றி துன்பமோ இன்பமோ வருவதில்லை. எல்லாம் நம் கர்மாவின் பிரதி பிம்பம்தான்.
ஆக, தெரிந்தோ தெரியாமலோ கலியுகத்தில் ஒரு சதவிகிதம் கூட பாவம் செய்யாமல் இருக்கமுடியும் என்றால் அவர் மனிதப் பிறவியே அல்ல. அப்படியே ஒரு மனிதன் இத்தனையும் தாங்கிக்கொண்டு பொறுமையாக இருக்கமுடியும் என்றால் அவன் தெய்வத்திற்கு சமம்.. வையத்துள் போற்றப்படுவார்!
எல்லோருள்ளும் அந்த சதாசிவம் 'பரப்பிரம்மமாக' இருக்கிறார் என்பதை எப்போதும் நினைக்காமல் செயல்படுவதே பாவங்களுக்கு வழிவகுக்கும். ஆகவே முடிந்தவரை தர்மநெறி கடைபிடிக்க முயலுவோம்

திங்கள், 17 ஏப்ரல், 2017

தெய்வீகக் குழு

இங்கே அனைத்து சித்தபுருஷர்களும் மகான்களும் ஒருங்கே குழு படத்தில் உள்ளனர். இப்படி ஒவ்வொருவரின் படத்தையும் சேகரித்து ஒரு group photo தயார் செய்தது யாரோ தெரியவில்லை, அவரைப் பாராட்டுகிறேன்.

Image may contain: one or more people

என் கண்களுக்குப் புலப்படுபவர்கள் யார்யார் என்று பார்க்கிறேன்.

வாரியார், மகாவதார் பாபாஜி, திரிலிங்க சுவாமி, ராமகிருஷ்ணர், வீரபிரம்மேந்திரர். அரபிந்தர், ரமணர், லஹரி மகசியா, சேஷாத்ரி சுவாமிகள், வள்ளலார், ஷிர்டி பாபா, புத்தர், ஆதிசங்கரர், குருநானக், அன்னை, விவேகானந்தர், பாம்பன் ஸ்வாமிகள்.

ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

ஜோதி வடிவாய்...

வரும் மே 1ம் தேதி இரவு வானில் சுப்ரமண்ய ஜோதி தெரியும் என்று நாடி வாசிப்பில் வந்துள்ளது பற்றி முகநூலில் வெளியான செய்தி அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சியைத் தந்திருக்கும். அன்று மேகமூட்டம் இல்லாத பகுதியில் உள்ளோர் அதை படம் எடுத்தால் சிறப்பாக இருக்கும்.
முருகனின் அருளால் வீரபோகர் பல சித்தரகளையும், மகான்களையும், உங்களில் பலரையும், கலிதர்மம் பேண அமர்த்தி இருப்பார். அந்த ஜோதியைக் காண காத்திருப்போம்.
No automatic alt text available.

அன்றே இப்படியொரு விளம்பரம்

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்வந்த பழனி தலவரலாறு கையேடின் ஒரு பகுதியை பாருங்கள். அந்த போகர்7000 பாடல்களை படித்தாலே போதும், யார்வேண்டுமானாலும் எளிதில் தங்கம் செய்யலாம், பல அற்புதங்கள் நிகழ்த்தலாம் என்று அப்போதே இது போன்று விளம்பரப்படுத்தினர் என்றால், இன்றைக்கு கேட்கவா வேண்டும்? இப்படியெல்லாம் விற்பனை யுக்தி இருந்துள்ளது. அந்த நூல் விலை ரூ.1 என்று இருந்தது.













இதை நம்பிக்கொண்டு, பேராசையால் தங்கம் செய்யப்போய், எத்தனை பேர் சொத்து இழந்து சிங்கி அடித்தார்களோ? பாடல்களை ஊன்றிப் படித்தால் தான் தங்கம் யாருக்கு வாய்க்கும் என்று போகர் சொன்னது புலப்படும். தங்கத்துக்கு அடுத்தபடியா 'முப்பு' ஆர்வம் அதிகமாயிடுச்சு. ரசவாதம் செய்து முடிகிறதுக்குள்ள 'வாதமும் மூப்பும்' வந்து சேர்ந்துடும். அருளாளருக்கு எந்த சிரமுமின்றி சித்தர்களின் தங்கம் தானாக கைக்கு வந்து சேர்ந்திடும்.

தங்கம் யாருக்கு வாய்க்கும் என்பதை போகரே தெளிவாக ஒரு பாடலில் சொல்லிருக்காரு, அது தெரியாத இன்னும் நிறையபேர் 'முயற்சி திருவினையாக்கும்' என்று நம்பிகிட்டு அழிஞ்சிருப்பாங்க. அந்த பாட்டு இதுதான்.
No automatic alt text available.

நவபாஷாணம் தொடர்கிறது...

சில மாதங்களாக போகர்/ நவபாஷாணம் விஷயங்கள் முகநூலில் நிறைய வலம் வந்துகொண்டிருக்கிறது என்பது உண்மை. நாமெல்லோருமே அந்த உரையாடலில் பங்கு பெற்றோம், நினைவிருக்கா?
திருப்பூர் பகுதியிலிருந்து அண்மையில் ஒருவர் என்னிடம் பேசவேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். நாம் என்ன முக்கியஸ்தரா, நம்மிடம் பகிர என்ன இருக்கும்? என்று நினைத்தேன். டிவி நிகழ்ச்சியையும் என் நூல்களையும் படித்துள்ளார் போலும்.
அவர் பெயர் திரு.சேகர், வயது 55, ஏழாம் வகுப்பு வரை படித்துள்ளார். இணைய தளம், மின்னஞ்சல் பற்றி எதுவும் தெரியாது. வரும் SMS தகவல்களை எங்குபோய் திறந்து படிக்கணும்னு தெரியாது. சில கம்பனிகளில் மெகானிக் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 20 வருடங்களாக ஏதோ ஈர்ப்பின் காரணமாக சித்த வைத்தியம் பயின்று வந்துள்ளார்.
சில வருடங்களுக்குமுன் இவர் நாகபட்டிணம் -பேரூர் சென்றபோது, அங்கு இவர் கனவில் ஒரு முதியவர் வந்தாராம், அவர் இவருடைய இரு தோள்களுக்கு இடையே முதுகுக்கு பின்னே இருந்து (ஸ்டிக்கர் பிய்த்து எடுப்பதுபொல்) ஒரு பனையோலையை எடுத்துள்ளார். அதிலிருந்து சில பாடல்களை இவருக்குச் சொல்லி கொடுத்துள்ளார்.
அதன் பிற்பாடு அவர் ஒன்பது வகையான பாஷாணங்களை தன்போக்கில் வாங்கி அவற்றை மூலிகை சாற்றில் சுத்தி செய்துள்ளதாக சொன்னார். முன்பின் செய்த அனுபவம் இல்லாமலே இவற்றை செய்துள்ளார். சுமார் 4 கிலோ பாஷண சாமான்கள் வாங்கினர் போலும். 'நீங்க வாங்கி போட்ட பாஷாணங்கள் என்னென்னனு சொல்லுங்க' என்று நான் கேட்டேன்'. அவர் நவபாஷானங்களை பட்டியலிட்டு சொன்னார். கடைசியாக அதை எத்தனை ஜாமம் வைத்தீர் என்று நான் கேட்க 'மூணு' என்றார்.
என்னென்ன பாஷாணம் என்று பட்டியலிட்டு அதை மளிகை சாமான் லிஸ்ட் போல நாட்டுமருந்து கடையில் கொடுத்துள்ளார். 'ஏங்க, இதெல்லாம் கொடிய விஷமாச்சே, அதெப்படி மறுபேச்சின்றி கடைகாரர் பொட்டலம் கட்டி கொடுத்தார்? என்றேன். [எந்த வினாவும் எழுப்பாமல் இவற்றை கொடுக்க சித்தர் அந்த ஏற்பாடு செய்தாரோ என்னவோ..!]. 'தெரிலிங்க' என்றார். பதினஞ்சாயிரத்துகு கூட ஆச்சு என்றார். சரியா கணக்கு வெக்கலைங்க என்றர்.
மூலிகைகள் பத்தி எப்படி கத்துகிடீங்க, சுத்தி செய்யும் அளவுல அத்தனை பரிச்சயம் வந்தது எப்படிங்க என்றேன்.
'நான் தாராபுரம் பக்கம் போன போது, சாலையோரம் பழைய புத்தக கடையில் 'மூலிகை தாவரங்கள்' அப்படின்னு புத்தகம் கண்ணில் படவே, வாங்கியாந்தேன் அய்யா' என்றார். அத பாத்துட்டு சதுரகிரில இருந்து இலைகள பறிச்சுக்கிட்டு வந்தேன் என்றார். [இவருக்காக ஒரு புத்தகம் அங்கே கன்ணில்படுமாறு வைத்தாரோ என்னவோ..!]
எந்த தாவரம் எந்த இடத்துல இருக்குனு உங்களுக்கு எப்படி தெரியும்? தேடாம எப்படி முதல்தடவை நீங்களே சுயமா போயிடுவந்தீங்க?
'தெரிலீங்க. மடமடனு எல்லாம் பரிச்சி பயில போட்டுகிட்டேன். நான் பாஷாணம் பிரிச்சு வேலை செய்ய தொடங்கியதும் அடுத்து இன்னது சேக்கணும், இந்த முறையில சுத்தி செய்யணும்னு ஏற்கனவே நான் பழக்கப்பட்ட மாதிரி செய்துகிட்டு போனேன்' என்றார். நான் மட்டும் தான் இந்த பணி செய்தேன் என்றார். எத்தனை ஸ்புடம் போட்டேங்க ?
ஒரு புடம் போட்டு எடுத்தேன், 45 நிமிஷத்துல வந்துடுச்சுங்க என்றார்.
சிலை வார்ப்படம் எந்த வகையினை சேர்ந்தது என்று கேட்டேன். தானே மண்ணில் ஒரு முருகன் சிலை செய்து, அந்த அச்சில்தான் இந்த கரைசலை ஊற்றி சிலை வடித்ததாக சொன்னார். ஆனால் சிலைக்கு அவர் இன்னும் கண்ணை திறக்கவில்லையாம். அதாவது அதற்கு உயிர் தரவில்லை. சிலை சுமார் 13.5 அங்குலம் உள்ளது (1அடி 2 செமீ ). சிலை செய்த அதே நவபாஷான கலவையிலிருந்து எடுத்து கொஞ்சம் உருண்டைகள் (கோலி) செய்துள்ளார். (இங்கே உள்ள முருகன் சிலை மாதிரிக்காக போட்டுள்ளேன்.)
அவரே இந்த கலவையின் தீர்த்தத்தை தனக்கு பரிசோதனை செய்து கொண்டுள்ளார் என்றும், அது இதுவரை இவருக்கு எதிராக ஒன்றும் செய்யவில்லை, நல்லபடி உடல் ஆரோக்யமாக உள்ளது என்றார். இதுபோக ரசமணிகளும் செய்துள்ளார். இவருடைய பெரியப்பா மகனுக்கு பக்கவாதம் தாக்கப்பட்ட நிலையில், அவருக்கு இந்த நீரை தொடர்ந்து ஒன்றரை மாதங்கள் கொடுத்துவர, இப்போது கை விரல்கள் நன்கு அசைகிறது என்றார்.
'பெரிச்சியூர்' பைரவர் எபிசோடில் என்னுடைய சிறிய உரையாடலை பார்த்துவிட்டு, இந்த விஷயங்களை எல்லாமே என்னிடம் சொல்ல வேண்டும் என்று அவர் மனசுக்கு பட்டதாம். பல வருடமாக இவற்றை செய்து பழகிகொள்வதாகவும், அவருக்கு கைதேர்ந்த சித்த முறைகள் விளக்க முடியுமா என்பது சந்தேகமே என்றார். எல்லாம் தெரிந்துள்ளது ஆனால் விளக்கத் தெரியவில்லை.
அவருக்கு வேறு ரசாயன முறைகள் தெரியவில்லை என்று தெரிகிறது. அதை விளக்க போதிய கல்வி ஞானம் அவரிடம் இல்லை ஆனால் இவற்றை செய்துள்ளார் என்று சொல்கிறார். சிலசமயம் அனுபவஸ்தர் போல் பதில் அளிக்கிறார். 'சந்திரசேகர் அய்யா, உங்களுக்கு நேர்ந்த போகர் அமானுஷ்யம் போலதான் எனக்கும் ஆச்சுங்க' என்றார் அவர்.
நான் அவரிடம் 'உங்களுக்கு கோரக்கர்தான் வந்து வழிகாட்டி இருக்கணும். அந்த ஊர்லதான் அவர் சமாதி உண்டு.அவரும் போகருடன் நவபாஷான சிலை செய்த குழுவில் இடம்பெற்றவர். உங்களுக்கு அவருடைய ஆசிகள கிடைத்து இருக்கு' என்றேன். உங்களுடைய பூர்வ ஜென்மத்தில் நீங்கள் அந்த சித்தர் குழுவில் இடம்பெற்று இருந்ததால் சுத்தி செய்து காய்ச்சும் முறைகள் செய்யும்போது எல்லாமே நினைவில் வந்துள்ளது என்றேன். இவை சித்தர்களின் விளையாட்டுதான்.
எதற்காக அந்த உருண்டைகள் செய்தார் என்றால்... நாளை இதை யாரேனும் வந்து Lab test டெஸ்ட் க்கு கொடுத்து அனுப்பவேண்டும் என்று கட்டாயபடுத்தினால், முருகனின் சிலையை பின்னப் படுத்த கூடாது என்ற நோக்கத்தில் அந்த கரைசலில் கொஞ்சம் வைத்துகொண்டு 4 கிராம் எடையில் சில உருண்டைகள் செய்தார். இவற்றை அவர் செய்து பல காலங்கள் ஆகிவிட்டது, இப்போதுதான் என்னிடம் இந்த உண்மைகளை பகிர்ந்தார். சித்தர்கள் முன்ஜாகிரதாயக இவருள் செயல் படுத்தி்யுள்ளனர்..*!?
நீங்கள் செய்திருகும் பட்சத்தில் அதை இந்த கலியுக சூது-வாது உலகம் எப்படி பார்க்கும் என்று எண்ணுங்கள் என்றேன். உங்களை பலர் வந்து வியாபரமாக செய்து கொடுங்கள் என்றால் என்ன செய்வீர் என்று நான் கேட்டேன், 'அப்படி கட்டாய படுதுவாங்கள அய்யா?' என்றார் வெள்ளந்தியாய். உங்களை கடத்தவும் வாய்ப்புண்டு என்றேன். அப்படிப்பட்ட உலகில் அல்லவா நாம் வாழ்கிறோம் என்றேன்.
   Chandru SC's photo.  Image result for ரசமணி
'உங்களுக்கு எப்போ தோணுதோ அப்போ என்னைபத்தி வெளியுலகத்துக்கு சொல்லுங்க' என்றார். அதனால்தான் தற்சமயம் இந்த பதிவில் இவருடைய விலாசம் கைபேசி தகவல் விவரங்கள் ஏதும் வெளியிடவில்லை.

சனி, 15 ஏப்ரல், 2017

திராவிட சிசு

'மனோன்மணியம்' என்ற நாடகநூல் எழுதிய பேராசிரியர் பெ. சுந்தரம்பிள்ளை அளித்த 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடலில் 'தெக்கணமு மதிற்சிறந்த திராவிடநற் றிருநாடும்' என்ற வரியில், திராவிடம் என்றால் தமிழ்நாடுதான் தமிழர்தான் என்று இன்றும் பலபேர் சொல்லிக் கொள்வது சகஜமாகிவிட்டது. அதில் தெலுங்கு கன்னடம் மலையாளம் துளு வகையறாக்கள் வராது என்றும் சொல்கின்றனர். தெக்கணம் என்றால் தென்னகமாம், திராவிடம் என்றால் தமிழ்நாடு தானாம்.

நியாயமாகப் பார்த்தால் தெக்கணமும்-திராவிடமும் எல்லை விஸ்தீரணம் குறைவுதான்.. தென்னாடு என்று வந்திருக்கணும்.

ஆதிசங்கரர் தன் சௌந்தரியலஹரியில்  (பாடல்-75) ஞானப்பால் உண்ட  'திராவிட சிசு' என்று சொன்னார். "தயாவத்யா தத்தம் த்ரவிடஶிஶு  ராஸ்வாத்ய தவ யத்".. அதாவது தனக்கு தேவியே பாலூட்டியதை விவரிக்கும் வரிகளாகும். அப்படிப்பார்த்தால் மலையாள நம்பூதிரி தன்னை 'தமிழ் பாலகன்' என்று சொல்வதாக பொருள் படுமா? அல்லது ஒருவேளை நம் 7ம் நூற்றாண்டு சீர்காழி திருஞானசம்பந்தரைப் பற்றி முற்காலத்து சங்கரர் புகழ்ந்தார் என்று வைத்துக்கொண்டால், 'தமிழ் பாலகன்' என்ற பொருள் சரியாக வரும். இன்றுவரை இதில் தெளிவு இல்லை.

Image result for சம்பந்தர்    Image result for ஆதிசங்கரர்   Image result for மாணிக்கவாசகர்
திருவாசகத்தில் மணிவாசகர் சொன்னபடி 'தென்னாடுடைய..' சொல்லே சாலப் பொருந்தும்.. சீனத்தின் தெற்கே மேருவின் தெற்கே பாரதத்தின் தெற்கே தெக்கணத்தின் தெற்கே தென்னாடு வரை சொல்ல வேண்டும். அந்த குமரிக்கண்டத்தைதான் அவர் குறிப்பிட்டார். சங்கம் கூட்டிய பாண்டிய திராவிட நாடு அதுவரை பரந்துபட்டது என்று பெருமை கொள்ளலாமே தவிர அதைத்தாண்டி இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு இதன் உயர்வு எந்த மாற்றத்தையோ தாக்கத்தையோ உண்டாக்காது என்பதே யதார்த்தம். ஆகவே, ஆதிசங்கரர் சொல்வதைப்போல் 'திராவிடம்' என்றால் தென்னகம் என்ற பொதுப்பொருள் விளங்குகிறது.  

ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

சென்னை மயிலை கபாலீஸ்வரர் அறுபத்துமூவர் உலா.

பங்குனி மாதம் நடக்கும் முக்கிய விழா. விநாயகர் உள்ளே வர, அடுத்து ஸ்ரீகபாலீஸ்வரரைத் தொடர்ந்து கற்பகாம்பிகை, முருகப்பெருமான் மண்டபத்துக்கு எழுந்தருளுகின்றனர். சம்பந்தர் பாடல் பாட, சிவநேச செட்டியார் தன் மகள் பூம்பாவையோடு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கும். அதைத் தொடர்ந்து சமயக் குரவர்கள் நால்வரும் தனித்தனி பல்லக்குகளிலும், நாயன்மார்கள் ஒவ்வொரு பல்லகிலும் அவரவர் திருப்பெயர்களுடன் எழுந்தருளி, அருள்மிகு கபாலீஸ்வரை வலம் வந்து தீபாராதனையை ஏற்று, முன்னே செல்வர்.
திருஞான சம்பந்தப் பெருமான் மயிலாபுரியில் இயற்றியது 'பூம்பாவை திருப்பதிகம'. பாம்பு கடித்து இறந்து தகனம் செய்யப்பட்ட பூம்பாவையை பாடல் பாடி அந்த சாம்பலிலிருந்து உயிரத்தெழுப்பிய பதிகம் இது.
"மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்கு
அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்!"
'அட்டிட்டல் விழா' என்று சம்பந்தப் பெருமான் பாடியதை நிரூபிப்பதுபோல் பத்தடிக்கு ஒரு அன்னதான, பானகம், நீர்மோர், குளிர்பான பந்தல்கள் இருக்கும்.
மயிலையின் கிராம தேவதையான கோலவிழி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தபின்தான் வீதி உலா தொடங்கும். (அதோடு ஜேப்பிடி திருடர்களும் உலா வருவார்கள்... சங்கிலி/ பணம்/ செல்போன், உஷார்!)
Image may contain: one or more people and crowd

சனி, 8 ஏப்ரல், 2017

இன்று சனிப் பிரதோஷம்

அருள் புரிவாய் சிற்சபேசா! இப்பிரதோஷ வேளையில் ஈசனடியை நினைத்திருப்போம்.

பிரதோஷ காலங்களில் சிவதரிசனம் செய்தால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் கிடைக்கும். உலகை ரட்சிக்க ஆலகால விடத்தை அமுதென குடித்தபின் நந்தியின் கொம்புகளுகிடையே நடனம் ஆடினார்.



சனி மஹாபிரதோஷம் என்று கூறுவார்கள்.  நாம் ஒரு சனி பிரதோஷத்தில் வணங்கச் சென்றால் 120 வருடம் சென்று வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். ஏழரை சனி, அஷ்டமத்து சனியின் பாதிப்பு குறையும்.

வியாழன், 6 ஏப்ரல், 2017

சித்த தரிசனம் என்பது மாயையா?

இன்று முகநூலில் சித்தர் தரிசனம் பற்றிய ஒரு பதிவை நான் காண நேர்ந்தது. "மறைந்த சித்தர்கள் தோன்றுவது மாயையே..." என்ற ரீதியில் ஆன்மிக பெரியவர் ஒருவர் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அஃதாவது :
'ஸ்தூலத்தை விட்டு பிரிந்து, இறைவனோடு இரண்டறக் கலந்து மறைந்த சித்தர்கள் மீண்டும் உடலோடு தோன்றுவதில்லை. அப்படி தோன்றுவது தன் மன மாயையே, நான் சித்தபுருஷரை கண்டேன் என்பது எப்படியெனின், அது தன் ஆழ்ந்த எண்ணத்தின் வாயிலாக உற்று நோக்கின் அது தன்னிடத்தே இருந்து வெளிப்படும் ஆவியின் மாயையே அத்தோற்றத்தை உருவாக்கி மீண்டும் அது தன்னிடத்தே மறைகிறது. நம் அறிவைக் கொண்டு ஸ்தூலத்தோடு வாழும் ஏனைய சித்தர்களை தவிர்த்து, கண்ணிற்கு புலப்படாத சித்தர்களை மனதின் மாயையால் தேடி அலைவது வினோதமான செயலாகும். கறந்த பால் முலை புகா,உதிர்ந்த காய் மரம் புகா, என்பது சித்தர் வாக்கு. -இறையருள்-" இதுதான் அந்தப் பதிவு.
சித்தர்கள் பலர் தேகம் அழியாமலிருக்க காயகற்பம் உண்டு இன்றளவும் சமாதியில் இருக்கின்றனர். எல்லா சித்தர்களும் உடலை துறந்துவிட்டனர் என்று கொள்வதற்கில்லை என்று போகரே உரைக்கிறார். ஏனையோர் தங்கள் பணி முடிந்ததும் மண்ணாகிப் போனாரே என்று விவரித்துள்ளார். ஈசனின் மலரடியைத் தழுவிய அவர்கள் அஷ்டசித்தியுடனே என்றென்றும் நிலைத்திருப்பார்கள். அவர்களுக்கு மறுபிறப்பில்லை. இதைத்தான் சிவவாக்கியர் 'கரந்த பால் முலை புகா, மறுபிறப்பில்லை, இல்லையே ' என்று சொல்கிறார். அவர்கள் சம ஆதிநிலையில் சிவவுணர்வில் ஐக்கியமாகி இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஸ்தூல உடலோடு தோன்றி நமக்கு தரிசனம் தர அவர்கள் மறுபிறப்பு எடுக்க வேண்டியதே இல்லை. அவர்கள் முற்று பெற்ற சித்தர்கள்.
நமக்குள் இருந்து வெளிப்படும் நம் ஆவிதான் சித்தராக அங்கே வெளிப்படுகிறது என்றால் எந்த பிரயத்தனமும் இல்லாமல் அஷ்டசித்தி நமக்கு கைகூடிவிடுமே ! சுயம் அறிந்து நாமே பரபிரம்மமாகி பிரபஞ்சத்தில் ஐந்தொழில் நடத்திட முடியுமே! இது சித்தநெறிக்கு தகுமா? நாமே ஈசனாகி விட்டால் நாம் செய்யும் பாவங்கள் நம்மை அண்டாது. ஞாயம்தானே? ஆனால் அப்படியா நடக்கிறது? ஒரு பணி நிமித்தமாக ஒரு அலுவலகத்திற்கு செல்கிறோம். அங்கே Lift பொத்தானை அழுத்திவிட்டு காத்திருக்கிறோம். கதவு திறக்கிறது உள்ளே அகத்தியரும் ராகவேந்திரரும் நம்மை உள்ளே அழைக்கிறார்கள் என்று வைத்துகொள்வோம். அது நாம்தானே என்று அலட்சியப்படுத்த முடியுமா? சற்றும் அவர்களிபற்றி சிந்திக்காத வேளையில் அவர்கள் நம்மோடு ஏன் வரவேண்டும்? அது நம்முடைய சாயா புருஷ தரிசனம் அல்லவே?  நாம் அவர்களாக இருக்க நாம் ஏன் பொருள்தேடும் வாழ்க்கை வாழ்கிறோம்?

சந்திரரேகை நூலில் (பா-65) கோரக்கர் குண்டா பாறையில் படத்திலுள்ள மந்திரத்தை யாரொருவர் சந்திரகலையில் மூச்சை இருத்தி ஓதி, யந்திரத்தை தகட்டில் கீறி கையில் வைத்துகொண்டு ஜெபித்தாலும் தான் காட்சி தருவதாக கோரக்க சித்தர் சொல்லியுள்ளார். மூத்த சித்தர்களான அகத்தியர் திருமூலர் புஜண்டர் காலாங்கி போகர் கோரக்கர் போன்ற பலரும் தரிசனம் தருவதைப் பற்றி உரைத்துள்ளனர். மேலே ஐயா அவர்கள் கூற்றுப்படி பார்த்தல் "அத்தனை சித்தர்களும் என்னுள் இருக்கிறார்கள் என்பதால், நான் அவனாகி விட்டதால், நான் ஏன் சித்த தரிசனம் தேடிப்போக வேண்டும்? நானும் அவன் அந்தஸ்த்தில் இருக்கிறேன் தானே?" என்ற எண்ணம் நம்முள் எழும். நம் எல்லோருக்குள்ளும் சிவனே சீவனாய் இருப்பதால் நாமே சிவம் ஆகிவிட முடியுமா? எல்லோரும் 'அஹம் பிரம்மாஸ்மி' என்று சொல்லிட முடியுமா? அதை உணரவும் வெளிக்காட்டவும் ஒரு நிலை வேண்டும் அல்லவா?
கிருஷ்ணர் யசோதைக்கு தன்னுள் இருக்கும் அனைத்தையும் காட்டியது போல சகலமும் என்னுளே இருப்பதும் மெய், பலவிதமாய் வெளிப்புறத்தில் காண்பதும் மாயை. அகத்தில் உள்ள இந்த பரமவொளியை கண்ணுற்றால் புலப்படும். இது எல்லோருக்கும் தெரியுமா? நம் சிரசே கைலாசம், சுழுமுனையே மேருமலை. வாசியை உணரவைத்து அந்த நிலைக்கு இட்டுச் செல்வது பரபிரம்மத்தின் செயல். நம் ஆவிதான் வெளியே சித்தராக வெளிப்படுகிறது என்றால் நாம் அற்ப மனிதர்கள் அல்ல! நாம் எல்லோரும் அஷ்டசித்தி பெற்ற சித்தர்களே! சதுரகிரியை நாடிப்போகத் தேவையில்லை அல்லவா? இது உண்மை என்றால் நாம் வாழ்வது பாபங்கள் மண்டிக்கிடக்கும் கலியுகம் அல்ல. உயர்தர்மம் பேணும் கிருத யுகத்தில்.
- எஸ். சந்திரசேகர்