இன்று அதிகாலையில் ஒரு கனவு. கண் எதிரே நீண்ட தோகையுடன் மயில் ஒன்று நடந்துவிட்டு சிறகடித்துப் பறந்தது. அதன் பின்னே ஒரு துறவி வந்து நின்று பேசாமல் என்னை உற்றுப் பார்த்தார். அவர் திருப்புகழ் அருணகிரிநாதர் என்று உணர்ந்து கொண்டேன். அப்போது ஒரு குரல் கேட்டது, "கூவும் ஞவ்வும் கோவும் குமரனே". அதையே நானும் திரும்பச் சொல்கிறேன். கனவு முடிந்தது.
உடனே 'முருகா முருகா' என்று சொல்லிக்கொண்டு எழுந்துவிட்டேன். பிறகு இது என்ன பொருள் என்று யோசித்தேன், 'குமரனே நம் தலைவன் என்று சேவலும் மயிலும் சொல்கிறது. அதாவது கொகொ என்று கூவும் சேவலும், ஞவ் என்று அகவும் மயிலும் அவனே என்பதை அவனுடைய அனுபூதிகளே சொல்வதாக பொருள் விளங்கியது. இன்று அருணகிரியார் போதித்து அருளியது இதுவே. ஓம் சரவணபவ!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக