About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

சனி, 18 ஆகஸ்ட், 2018

ஜலப் பிரளயம், ஒரு பாடம்

பஞ்சபூதங்களை உரிமைக் கோரலாமா? கூடாது. அது எல்லோரும் ஜீவித்து வாழ்வதற்காக உள்ளது. கடந்த ஒருவாரமாக அண்டை மாநிலமான கேரளா படும் இன்னலைப் பார்க்கும்போது இருவேறு உணர்வுகள் மேலோங்கும். ஒருபுறம், 'தமிழ்நாட்டைவிட சின்ன மாநிலம். ஐயோ, இத்தனை மழை வெள்ளத்தை அது தாங்குமா?' என்றும், இன்னொருபுறம் 'எல்லா நதிநீரும் தனக்கேனு சொல்லி அணைகள் கட்டிச்சே!' என்று ஏளனமும் வரும்.
உண்மையில் இத்தனை அணைகள் தேவையா? தேவையில்லை. தரை மட்டத்திலுள்ள ஏரி தாங்கல் குளம் கண்மாய்கள் நிரம்பினாலே போதும். அதெல்லாம் தாண்டி எங்கேனும் நதி பெருக்கின் கட்டுப்பாட்டை சீராக்க அணை வேண்டும். மூன்று ஜில்லாவுக்கு ஒன்று என்ற அளவில் சிறிய தடுப்பணைப்போல் இருந்தாலே போதும். பூமிக்கு மேலே சுவர் எழுப்பி நீர் தேக்குவதற்கும், பூமிக்கு சமன்பாட்டில் நீர் தேக்குவதற்கும் நிறைய வேற்றுமை உண்டு. கரிகாலன் தன்னிடம் இருந்த படைபலம்கொண்டு பல அணைகளை கட்டியிருக்கலாம். ஆனால் செய்யவில்லை. உறுதியாக, எளிமையாக, பயன்பாட்டுக்குத் தக்கபடி கல்லணை ஆயிரம் வருடங்களைக் கடந்து கம்பீரமாக உள்ளது.
இடுக்கி அணைபோல் நீர் தேக்கி வைக்க அதி பயங்கர அணை ஒன்று கேரளாவுக்குத் தேவையில்லை. இயற்கையானது உடனே தன்னுடைய எதிர்மறை போக்கைக் காட்டாது. ஒரு தலைமுறை காலம் எடுக்கிறது. கேரளாவில் நடந்ததும் அப்படியே. குறவன்- குறத்தி மலைகளுக்கு குறுக்கே மத்தியில் சுவர் எழுப்பி, 550 அடிக்கு நீர் தேக்கும் கிண்ணமாக வைத்ததுதான் தவறு. அப்படியே கட்டினாலும் 200 அடி போதுமென கட்டியிருக்கலாம். நீர்தக்கத்தின் உயரம் கூடக்கூட புவியழுத்தத்திலும் பூகோள தட்டுகளின் ஸ்திரமற்ற போக்கு அதிகரித்தது. பேராசை பெரு நஷ்டம்! அங்கு மழை வெள்ளம் அடித்தால், தமிழகத்தில் வலிக்கும். அதுதான் இயற்கையின் நீதி. ஏதோ தமிழகத்தில் வெள்ளப் பேரிடர் நடந்ததுபோல் இங்கு நம்மூருக்குள் பாயும் நதிகள் எல்லாமே பெருக்கெடுத்து பொங்கி ஓடுகிறது.
எல்லா நதிகளையும் இணைக்கும் திட்டம் வந்தால் கடல் முகத்திலுள்ள நமக்கு அது அனுகூலமா ஆபத்தா என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள். பல கிராமங்கள் மூழ்கியதால் மீட்பும் நிவாரணமும் நடக்கிறது. நம் மாநிலத்தில் எல்லா நீர்நிலை வழிகளும் கச்சிதமாக பராமரிக்கப் பட்டிருந்தால், கடைமடை பகுதிவரை இண்டு இடுக்கு நீர் நிலைகள் நிரம்பி, பூமி கிரகித்ததுபோக எஞ்சியது எல்லாமே தன்னிச்சையாகவே கடுலுக்குப் போயிருக்கும். நமக்கும் நிறைய தடுப்பணைகள் கட்ட அவசியம் இருக்காது. மணல் திருடியதால் சமனற்ற நதிப்படுகையே உள்ளது. ஆனால் பல நீர்நிலைகள் பதிவு ஆவணங்களில் இன்றும் இடம்பெற்றுள்ளன, பூகோளத்தில் இல்லை. நாம் சுயமாக பாடம் கற்க இதோ டிசம்பர் மாதம் வருகிறது.
'கலியுகத்தில் கடுங்குளிர், புயல், கடும்வெப்பம், கனமழை, உறைபனி, வெள்ளம், பூகம்பம் போன்ற பல இயற்கை பேரிடர்களில் சிக்கி மக்கள் தவிப்பார்கள். இதனால் பசி, தாகம், நோய், பயம், சச்சரவு போன்ற கடும் துன்பங்களில் சிக்கி இறப்பார்கள்' என்கிறது பாகவத புராணம்.
Image may contain: mountain, sky, outdoor and nature

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக