தவறுகள் பல செய்திருக்கலாம், ஈழத் தமிழர்களுக்கு தீங்கிழைத்திருக்கலாம், இறை நிந்தனை செய்திருக்கலாம், சாதி வன்மம் தூண்டியிருக்கலாம், பிராயச்சித்தமும் ரகசியமாகச் செய்திருக்கலாம், கர்மபலனை தட்ட முடியாமல் வேதனை அனுபவித்திருக்கலாம், இறுதிக்காலத்தில் மனவலியில் துடித்திருக்கலாம்... யார் அறிவார் அதை? நெஞ்சுக்கு நீதியும், போர் வாளும், உடன்பிறப்புகளின் உன்னத தலைவராக முன்னிறுத்தியது. இதுவரை செய்த தர்ம /அதர்ம வினைகளுக்கு, நீர் வணங்கி பராமரித்த கோபாலபுர ஆலயத்தில் குடிகொண்ட ஸ்ரீ வேணுகோபாலரே சாட்சி. செய்தவற்றை கணக்கர் ஈசன் எழுத்தறிநாதராக ஏட்டில் பதித்துள்ளான். முரசொலியின் சப்தம் நின்றது, எழுத்தாளரின் பேனாவும் ஓய்வெடுத்தது! சூரியன் அஸ்தமித்தது என்றால் அது உமக்கு இழுக்கல்லவா? உதய சூரியன் மேற்கே உதித்தது இன்று!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக