கடைக்காரர் பார்க்காத வண்ணம் கிழிந்த நோட்டை நைசாகத் தள்ளுவது, செலுத்தவேண்டிய மீதம் சில்லறையை பிறகு வந்துத் தருகிறேன் என்று சொல்லி அப்படியே விட்டுவிடுவது, வேண்டாத ஒரு பொருளை அன்பளிப்பாகத் தருவது, பணம் போட்டால் வராது என்று தெரிந்தே நண்பனை தவறாக வழிகாட்டுவது,... என இப்படி பல வித செயல்களை அன்றாடம் நாம் எல்லோருமே விளையாட்டாகவோ சாமர்த்தியமாகவோ வெறுப்பிலோ பழிதீர்க்கவோ செய்வோம். ஆனால் பக்தி, தர்மநெறி பற்றி நிறைய பேசுவோம். நாம் எல்லாம் எந்த விதத்தில் தூய்மையானவர்கள்? "இந்த அளவுக்குச் செய்தால் பாதகமில்லை" என்று நாமே ஒரு வரையறை வைத்துக்கொள்வதுதான் தீங்கிழைக்கிறது.
தன்னை வழிபடும் அடியார்களின் வழிபாட்டு நிலையை கணந்தோறும் எழுத்தறிநாதனாக அறிந்து ஏட்டில் குறித்துக் கொள்கிறான். கண்காணியாக உலகெங்கும் நிறைந்து நிற்கும் இறைவனின் தன்மையை உணர்ந்தவர்கள் தவறேதும் செய்ய மாட்டார்கள் என்றகிறார் திருமூலர். (திருமந்திரம், 2067)
கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்
கண்காணி இல்லா இடம் இல்லை காணுங்கால்
கண்காணியாகக் கலந்து எங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களவு ஒழிந்தாரே.
கண்காணி இல்லா இடம் இல்லை காணுங்கால்
கண்காணியாகக் கலந்து எங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களவு ஒழிந்தாரே.
போகரும் இதையே வலியுறுத்தியுள்ளார். விளைந்த தோட்டத்தில் காவல் காக்க யாருமில்லை எனக் கருதி அங்கு புகுந்து களவாடக் கூடாது என்கிறார். அங்கே மாடன் (சிவன்), சங்கிலி கருப்பு, வன துர்கை, காத்தவராயன் என எல்லாமே அரூபமாக காவல் செய்வார்களாம். உஷார்!
இதெல்லாம் சரி. இறை நிந்தனை செய்து, அவனை வணங்க விடாமல் திசை திருப்புவோரின் நிலையை இன்று கண்கூடாக நாம் காண்கிறோம். படத்தில், அருள்மிகு எழுத்தறிநாதர் கோயில், இன்னம்பூர், தஞ்சாவூர் மாவட்டம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக