ஆடியில் வளை அலங்காரம்
ஆடியில் வண்ணவளை ஆடைச் சாற்றி
அடியார்கள் பரவசித்து உற்று நோக்கி
தோடியில் சாமரமாய் பண்ணிசைக்க
திகட்டாத அழகம்மை கொலுவிருக்கும்
நாடியில் உறைகின்ற வாலைப்பெண்ணே
நயமாக சக்கரங்களை இயக்கும் சக்தியே
பாடியில் அருளும் திருவலித அம்பிகையே
பதமலர் போற்றினேன் வல்லீசர் நாயகியே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக