About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வெள்ளி, 2 டிசம்பர், 2016

'சில்பகுரு' வி.கணபதி ஸ்தபதி (1927 - 2011)


இவரைப் பற்றி சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன். ஆயிரம் ஆண்டுகள் வரலாற்று சிறப்புமிக்க பிரகதீஸவரர் கோயில் வடிவமைத்த குஞ்சரமல்லன் @ ராஜராஜ பெருந்தச்சனின் வம்சத்தில் வந்த மிகப்பெரிய சிற்பசாஸ்திர ஸ்தபதி. என் பார்வையில் இவர் ஒரு மகா ஜீனியஸ், விஸ்வகர்மா ஆசிபெற்ற ஒரு அருளாளர் என்றால் தகும். கணபதி ஐயாவின் மூதாதையரைப் பற்றி கோவில் கல்வெட்டில், "தச்சாசாரியார் வீர சோழன் குஞ்சர மல்லனான ராஜ ராஜப் பெருந்தச்சன்" என்று கூறுகிறது.
கணித பட்டதாரியான இவர், 27 வருடங்கள் மாமல்லபுர அரசு சிற்பக் கல்லூரியின் முதல்வராக பணியாற்றினார். இவருடைய கைவண்ணத்தில் இந்தியா மற்றும் மேல் நாடுகளில் பல கோவில்களை வடித்துள்ளார். குமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையும் இவர் வடித்ததே. இவர் பிரம்மரிஷி மயன் அருளிய 'ஐந்திறம்' நூலை வெளி உலகிற்கு தொகுத்துக் கொடுத்தவர்.பிரணவ வேதத்தைத் தொகுத்து அச்சிட சிரத்தை எடுத்தார். இவர் சொந்தமாக 'வாஸ்த்து வேதிக் டிரஸ்ட்' ஒன்றை நிறுவி, அதன் மூலம் ஆலோசனைக தந்தும், ஆய்வு நூல்களும் வெளியிட்டு வந்தார். ஜனாதிபதியிடம் பத்மபூஷன் & தலைச்சிறந்த 'சில்பகுரு' என்ற பட்டத்தையும் பெற்றார்.
ஐந்தாம் வேதமான பிரணவ வேதத்தைத்தான் இவர் 'வாஸ்து வேதம்' என்கிறார். அவர் எழுதிய எண்ணற்ற நூல்களில், ஆயாதி கணனம் Ayadi Calculation, ஸ்தபதிய வேதம், சங்ககால தமிழர் வேதம், Temple of Space Science, திராவிட கட்டிடவியல், வள்ளுவர் கோட்டம், குமரிக்கண்டத்தில் மயன், வாஸ்து பிரம்ம சூத்ரம் போன்ற இன்னும் பல நூல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார். இவருடை மேல்நாட்டு மாணவியரான திருமதிகள். ஒல்கா, ஜெர்சி மெர்கே போன்றோர் இவர் பெயரை உலகளவில் பறைசாற்றி வருகின்றனர்.
அடுத்த மாதம் வெளிவரும் என்னுடைய நூலில், ஐயா அவர்களின் மேற்பார்வையில் அவர் மாணவி Ms.ஜெர்சி மெர்கே எழுதிய 'பிரபஞ்ச தோற்றமும் வாஸ்து விஞ்ஞானமும்' என்ற ஆங்கில கட்டுரையை மேற்கோள் காட்டி சில பகுதிகளை நான் கையாண்டுள்ளேன்.


1 கருத்து: