About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

செவ்வாய், 6 டிசம்பர், 2016

மனித உறவுகளைப் பேணுவோம் !

ஜெ. பிறந்து வளர்ந்தது பெரிய குடும்பத்தில் என்றாலும் சிறு வயது முதலே தனிமையிலே வளர்ந்து ஆளாகவேண்டிய நிர்பந்தம் இருந்துவிட்டது. தனக்கு பிடிக்காத சினிமா தொழிலில் நுழைய வேண்டிய கட்டாயம் எழுந்தது, பிறகு காலத்தின் பிடியில் அவர் பயணித்தார். அரசியல் வாழ்க்கை இவரை தன் சொந்தங்களுடன் நெருங்க விடாமல் செய்துது தான் கொடுமை. அவரே இந்தத் தனிமையை ஏற்றாரா / திணிக்கப்பட்டதா என்பது இன்றுவரை புதிர்தான்.
இப்படியும் ஒருவரால் தன் சொந்தங்களை ஒதுக்கி தனிமையில் இருக்க சாத்தியமா என்று நமக்கு எண்ணத் தோன்றும். இந்த வயதில் இப்படியொரு தனிமையா என்று பரிதாபப் படாதவர்களே இல்லை. இவருடைய வாழ்க்கை எல்லோருக்கும் ஒரு பாடம்.
தனக்கென ஒரு குடும்பம் எற்படுத்திகொள்ளவில்லை என்று அவர் சொன்னாலும், பெரியம்மா, சித்தி, சிற்றப்பா, அக்காள், அண்ணன், தங்கை மற்றும் அவர்களுடைய பிள்ளைகள் என்று தான் பிறந்த குடும்பத்து உறவினர்கள் எல்லோரும் இருந்தும், இன்று யாரும் அவர் உடல் அருகில் இல்லாமல் தனிமையிலே கிடக்கிறார். உடல் தகனம் செய்யப்படாமல் அடக்கம் ஆகிறார். அவர் தலை எழுத்தும் ஜாதகமும் அப்படி!

தன்னை மற்றவர்கள் ஆட்டிப்படைக்கவும், ஆளுமை செலுத்தி அடிமையாக நடத்தவும் அனுமதித்தார். போயஸ் கார்டனில் ஜெயலலிதா இருந்து தங்கிக்கொள்ளட்டும் என்று   பெருந்தன்மையாக ஒரு அறையை அந்த உடன்பிறவா குடும்பம் ஒதுக்கிக்கொடுத்ததே பெரிய விஷயம். இப்போது போயி அந்த குடும்பத்தவங்களை குறைகூற என்ன இருக்கு? இப்படியுமா ஒரு முதல்வர் இருப்பார்? என்றுதான் வியக்கத் தோன்றும். கூண்டுகிளியாய் இருக்கவே ஆசைபட்டார் என்றுதான் அவர் சரிதத்தில் களங்கமின்றி குறிப்பிடவேண்டும். ஆம், வேறு எப்படிச் சொல்ல? 
திரளான ரசிகர்களையும் தொண்டர்களையும் சம்பாதித்த தங்கத் தலைவி, மனித உறவுகளை பேணாமல் விட்டது பெரிய நெருடலே! நாம் வாழும் காலம் கொஞ்சமே! அதனால் குடும்ப உறவுகளை அனுசரிப்போம் மன்னிப்போம் நேசிப்போம்.
சுமார் 25 ஆண்டுகளுக்குமுன் டிவி பேட்டியில் எல்லா விஷயத்தையும் மனம் திறந்து பேசினார். அவர் ஆன்மா சாந்தி அடையட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக