வரப்புயர நீர் உயரும். நீர் உயர நெல் உயரும். நெல் உயர குடி உயரும். குடி உயர கோல் உயரும். கோல் உயர கோன் உயர்வான்! இதில் ஒன்று குறைந்தாலும் செங்கோல் ஆட்சியாளர் உயர்வதில்லை என்கிறார் ஔவையார்.
தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகிவருவதால் அது பல விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளியுள்ளது. என் மண்ணின் ‘சோறுடைத்த’ உழவர்கள் படும் துயர் மனதை வாட்டுகிறது. பார்வையை கண்ணீர் வந்து மறைக்கிறது. அவர்கள் இல்லாது தைப்பொங்கல் ஏது? வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். இங்கு உயிரையே விட்டு விட்டார்கள் விவசாயிகள்.
பஞ்சபூதத்தை ஆளும் சர்வேசா, அருள்மாரி பொழிந்து இந்நிலையை மாற்றிடு. பயிர் நிலங்களை காவல் காக்கும் வனதேவதை, எல்லையம்மா, கருப்புசாமி தெய்வங்களே விவசாயிகளின் மனதை திடப்படுத்தி அவர்கள் உயிரைக் காத்திடுங்கள். வியர்வை சிந்தியவர்களை தண்டிக்காமல் வாழவை, இறைவா.
"இறையாண்மை உடனே தலையிட்டு உதவ சித்தம் செய்."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக